Viral Video கார்ல இப்படி ஹாயா உக்காந்து போனா என்ன ஆகும் தெரியுமா? ஒரு வீடியோ எல்லாரையும் உலுக்கி எடுத்திருச்சு

கார்களில் பயணம் செய்யும்போது, எப்போது வேண்டுமானாலும் சாலை விபத்துக்கள் (Road Accidents) நிகழலாம். எனவே காரின் பாகங்கள் அனைத்தும் சரியாக இயங்குகின்றனவா? என்பதை பயணம் தொடங்குவதற்கு முன்பே உறுதி செய்வதுடன், போக்குவரத்து விதிமுறைகள் (Traffic Rules) அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும்.

கார்களில் நாம் எப்படி அமர்கிறோம்? என்பதும் கூட மிகவும் முக்கியமானதுதான். ஒரு சிலர் கார்களில் தங்கள் இஷ்டத்திற்கு அமர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக முன் பகுதியில் டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் அமரும் பயணிகள் பலர், டேஷ்போர்டு (Dashboard) மீது கால்களை (Legs) வைத்து கொண்டு பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Why Should You Never Put Legs On The Dashboard

இது எவ்வளவு ஆபத்தானது? என்பதை அவர்கள் உணர்வதில்லை. காரின் டேஷ்போர்டு மீது கால்களை வைத்து கொண்டு பயணம் செய்தால் என்ன நடக்கும்? என்பதை, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று நமக்கு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது.

கார் டேஷ்போர்டு மீது கால்களை வைத்து கொண்டு பயணம் செய்தால் என்ன நடக்கும்? என்பதை விளக்குவதற்காக சோதனை அடிப்படையில் எடுக்கப்பட்ட வீடியோ இது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மனிதர்களுக்கு பதிலாக, மனிதர்களை போன்றே காட்சியளிக்கும் டம்மியை (Dummy) வைத்து வீடியோவை எடுத்துள்ளனர்.

டம்மியின் கால்கள் டேஷ்போர்டின் மீது இருப்பதை இந்த வீடியோவில் காண முடிகிறது. அப்போது முன் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது மோதியதால், ஏர்பேக்குகள் (Airbags) விரிவடைகின்றன. ஆனாலும் டம்மி பாதுகாப்பாக இல்லை. மோதிய வேகத்தில், அதன் கால்கள் உடைந்து விட்டன.

இது கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். பழைய வீடியோ என்றாலும், சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி கொண்டிருப்பதன் மூலம், காரில் பயணம் செய்பவர்களுக்கு தேவையான பயனுள்ள தகவலை இது வழங்குகிறது. எனவே இனிமேலாவது, டேஷ்போர்டு மீது கால்களை வைத்து கொண்டு பயணம் செய்யும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

இல்லாவிட்டால், டிரைவர் திடீரென பிரேக் அப்ளை செய்தாலோ அல்லது வேறொரு வாகனத்தின் மீது மோதினாலோ, கால்கள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் ஏர்பேக்குகள் மூலம் கிடைக்க வேண்டிய பாதுகாப்பும், சரியாக கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்.

காருக்கு உள்ளே ஏன் சரியான பொஷிஷனில் அமர வேண்டும்? ஏன் எந்தவொரு விஷயத்தையும் நாம் எளிதாக எடுத்து கொள்ள கூடாது? என்பதை எல்லாம் இந்த வீடியோ நமக்கு நன்றாக உணர்த்தி விட்டது. எனவே உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமும் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது விற்பனைக்கு வரும் கார்களில் ஏர்பேக்குகள், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் என அதிநவீன வசதிகளுக்கு பஞ்சமிருப்பதில்லை. ஆனால் சரியான முறையில் அமர்ந்திருப்பது, சீட் பெல்ட் அணிவது போன்ற விஷயங்களை எல்லாம் சரியாக பின்பற்றினால் மட்டுமே, அவற்றின் முழு பலனையும் நாம் அனுபவிக்க முடியும். இல்லாவிட்டால் இந்த அதிநவீன வசதிகளே வில்லனாக மாறி விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 18, 2023, 12:25 [IST]
English summary
Viral video car dashboard legs passengers safety tips
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+