ஐஸ்க்ரீம் வண்டி மேல வேணும்னே காரை மோதிய டிரைவர்! காரணத்தை கேட்டதும் நாடே கொந்தளிச்சிருச்சு! என்ன மனுஷங்களோ!
மினி வேன்களில் வியாபாரம் செய்யும் நடைமுறை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. மினி வேன்களின் பின் பகுதியில் ஹோட்டல் கடை, ஐஸ்க்ரீம் கடை போன்றவற்றை அமைத்து பலர் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நடமாடும் கடைகளை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்க கூடும்.
இந்த சூழலில் நடமாடும் ஐஸ்க்ரீம் கடை ஒன்றின் மீது, கார் மோதும் காட்சிகளை கொண்ட ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவின் (Viral Video) காட்சிகள், பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளன.

ஐஸ்க்ரீம் கடையின் மீது மோதுவது, மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) கார் ஆகும். அந்த காரின் டிரைவர் வேண்டுமென்றே ஐஸ்க்ரீம் கடையின் மீது ஒரு சில முறை காரை மோத விட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.
இருப்பினும் ஐஸ்க்ரீமின் சுவை பிடிக்காத காரணத்தால்தான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் உரிமையாளர் இப்படி நடந்து கொண்டதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த காரின் உரிமையாளர் முதலில் அந்த கடையில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். ஆனால் அதன் சுவை அவருக்கு பிடிக்கவில்லை.
அந்த சமயத்தில் ஐஸ்க்ரீம் கடையின் உரிமையாளர், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் உரிமையாளரிடம், ஐஸ்க்ரீமுக்கு பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர், வேண்டுமென்றே ஒரு சில முறை ஐஸ்க்ரீம் கடையின் மீது தனது காரை மோத செய்துள்ளார். இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது உறுதியாக தெரியவில்லை.
வட இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்றபோது அருகே இருந்த ஒருவரால், வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஐஸ்க்ரீமின் சுவை பிடிக்கவில்லை என்பதற்காக எல்லாம், இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்று கொள்ளவே முடியாது.
எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் உரிமையாளரை கண்டறிந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் காவல் துறையில் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள், காயங்கள் ஏற்படுவதற்கோ அல்லது உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. எனவே கோவத்தை கைவிட்டு விட்டு, பொறுமையாக நடந்து கொள்வதே புத்திசாலித்தனம்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
நெட்டிசன்களின் கருத்தேதான் எங்களுடையதும். சுவை பிடிக்கவில்லை என்பதற்காக மோசமான முறையில் நடந்து கொண்ட கார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வீடியோவின் மூலம் காரின் உரிமையாளரை கண்டறிவது என்பது காவல் துறை அதிகாரிகளுக்கு மிகவும் எளிமையான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








