பைக்கை பெட்ரூமாக மாற்றிய இளம்பெண்கள்! மலையாள படமே தோத்துரும்! இது எங்க நடந்துச்சுனு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க!
சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்து வரும் அட்டகாசங்கள் காண்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் உள்ளன. பைக் ஸ்டண்ட்கள் (Bike Stunts), எளிதில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதால், அதுதான் பலரும் தேர்வு செய்யும் வழியாக உள்ளது.
எனவே இளைஞர்களும், இளம்பெண்களும் பைக் சாகசங்களில் ஈடுபடும் வைரல் வீடியோக்கள் (Viral Videos) பலவற்றை, இணையத்தில் காண முடிகிறது. இந்த வகையில் தற்போது வைரல் ஆகி வரும் ஒரு பைக் ஸ்டண்ட் வீடியோ காண்பவர்களை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

இந்த வீடியோவில், 2 இளம்பெண்கள் பைக்கில் பயணிப்பதை நம்மால் காண முடிகிறது. அது ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் (Hero Super Splendor) பைக் ஆகும். ஒரு இளம்பெண் இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துள்ளார். மற்றொரு பெண் ரைடர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
வழக்கமாக பயணம் செய்யும் முறையில் அல்லாமல், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்துள்ளனர். பைக் தானாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், இந்த 2 இளம்பெண்களும் செய்த காரியங்கள் காண்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளன. ஆம், இருவரும் கட்டி அணைத்தபடி பயணம் செய்கின்றனர்.
அது மட்டுமா? அவர்கள் இருவரும் உதட்டோடு உதடு முத்தமிட்டு கொள்வதையும் நம்மால் வீடியோவில் காண முடிகிறது. இத்தனைக்கும் அவர்கள் இருவரும் ஹெல்மெட் (Helmet) அணியவில்லை. இப்படி ஆபத்தான முறையில், லிப்கிஸ் அடித்து கொண்டு 2 இளம்பெண்கள் பைக்கில் பயணம் செய்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது தெரியவில்லை.
ஆனால் இந்த பைக், தமிழ்நாட்டில் (Tamil Nadu) பதிவு செய்யப்பட்டிருப்பதை நம்பர் பிளேட் (Number Plate) மூலமாக காண முடிகிறது. எனவே தமிழ்நாட்டில்தான் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த நம்பர் பிளேட்டை அடிப்படையாக வைத்து, காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இளைஞர்களும், இளம்பெண்களும் பைக் சாகசங்களில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் நிறைய பேர் பைக் சாகசங்களில் ஈடுபட்டு, காவல் துறையினரிடம் சிக்கியுள்ளனர். ஒரு சிலர் உயிரையும் கூட விட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன.
இன்னும் சொல்லப்போனால் லைக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் வித்தியாசமான முறையில் பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு, இத்தகைய விதிமுறை மீறல்களை அடக்க வேண்டும் என்ற கோரிக்கை, சமூக வலை தளங்களில் எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடுவது விதிமுறைகளுக்கு எதிரானது. இது பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாது, போக்குவரத்து விதிமுறைகளை எல்லாம் முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டி கொண்டிருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








