நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! இளைஞர் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்! வீடியோ!
சமூக வலை தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்ட இன்றைய காலகட்டத்தில், நிறைய வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. இந்த வரிசையில் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
இளைஞர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை கடுமையாக தாக்கி கேப்பிற்கு (கார்) உள்ளே வலுக்கட்டாயமாக ஏற்றும் காட்சிகளை வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. டெல்லி நகரின் பரபரப்பான சாலை ஒன்றில், அனைவரின் முன்னிலையிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளம்பெண்ணை அனைவரின் முன்னிலையிலும் கடத்துகிறார்களா? என்ற சந்தேகத்தை பொதுமக்களுக்கு இந்த வீடியோ ஏற்படுத்தியது. அல்லது சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இது போன்ற வீடியோக்களை திட்டமிட்டு எடுக்கிறார்களா? என்ற சந்தேகமும் கூட ஒரு சிலருக்கு எழுந்தது. எனவே இது குறித்த விசாரணையை டெல்லி காவல் துறையினர் உடனடியாக தொடங்கினர்.
வீடியோவில் தெரிந்த காரின் நம்பரை வைத்து, அதன் டிரைவரை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி நமக்கு தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை நீங்கள் காண முடியும். அவர்கள் மூவரும் நண்பர்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று உபேர் கேப் (Uber Cab) ஒன்றை அவர்கள் 'புக்' செய்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த வழியில், அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், காரில் இருந்து கீழே இறங்கி செல்ல வேண்டும் என அந்த பெண் விரும்பியுள்ளார்.
ஆனால் அந்த 2 இளைஞர்களும், அந்த பெண் காருக்கு உள்ளே அமர்ந்து தங்களுடன் பயணிக்க வேண்டும் என கெடுபிடி செய்துள்ளனர். இருப்பினும் ஒரு வழியாக அந்த பெண் காரில் இருந்து கீழே இறங்கி விட்டார். அப்போதுதான் நண்பர்களில் ஒருவர், அந்த பெண்ணை கடுமையாக தாக்கி காருக்கு உள்ளே மீண்டும் அமர வைத்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண்ணின் வாதம் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் வாதங்களையும் காவல் துறையினர் தற்போது பதிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பு சம்பவம், டெல்லி மகளிர் ஆணையத்தின் கவனத்தையும் உடனடியாக ஈர்த்துள்ளது. அவர்கள் இது தொடர்பாக டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு பிரச்னையின்போதும் மற்றவர்களை தாக்குவது சரியாக இருக்காது. குறிப்பாக உடல் அளவில் ஆண்களை விட சற்று பலவீனமான பெண்களை எந்தவொரு சூழலிலும் தாக்க கூடாது. அதுவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இப்படி நடந்து கொள்வது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
இது போன்ற சம்பவங்களால் போக்குவரத்து ஸ்தம்பிக்கலாம். அத்துடன் சாலை விபத்துக்களுக்கு கூட இது போன்ற சம்பவங்கள் காரணமாக அமையலாம். எனவே எந்தவொரு பிரச்னை என்றாலும், சுமூகமான முறையில் பேசி தீர்ப்பதுதான், நல்ல முடிவாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications