காரின் மேலே சட்டை இல்லாமல் பிரபலம் செய்த காரியம்! டிரைவர் சீட்டை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்!
யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் நிறைய பேர் முட்டாள்தனமான காரியங்களை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பான செய்திகள் பலவற்றை கடந்த காலங்களில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த வரிசையில் மற்றொரு முட்டாள்தனமான காரியம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில் வெள்ளை நிற ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த காரின் டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கும் ஒருவர், பின் பகுதி வழியாக, காரின் மேற்கூரைக்கு செல்கிறார். பின்னர் அங்கே சட்டை இல்லாமல் புஷ்-அப் செய்கிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் நமக்கு புரிகிறது. அதற்காக காரின் மேற்கூரையிலா உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
எனவே வைரல் ஆக வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட விபரீத முயற்சிதான் இது என்பதை, சந்தேகத்திற்கு இடமின்றி நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. இந்த வீடியோவில் டிரைவர் இருக்கையை சற்று உற்று நோக்குங்கள். உங்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சி காத்திருக்கும்.
ஆம், டிரைவர் இருக்க மாட்டார். டிரைவர் இல்லாமல் கார் ஓடி கொண்டிருந்த சமயத்தில்தான், இந்த நபர் மேற்கூரைக்கு சென்று உடற்பயிற்சி செய்துள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை. அதுவும் பொது சாலையில் இத்தகைய விபரீதங்களை செய்யும்போது, அது மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
எனவே வைரல் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக அபாயகரமான காரியங்களை செய்யும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற சேட்டைகளை அதிகரித்து, சாலை விபத்துக்களின் எண்ணிக்கை உயர்ந்து விடும் என்பதை அதிகாரிகள் மனதில் கொள்வது அவசியம்.
இந்த வீடியோவில் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா கார், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை (Price) 10.87 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வீடியோவில் தோன்றும் நபர், சமூக வலை தளங்களில் பிரபலமாக இருக்கும் உடற்பயிற்சி வல்லுனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தயவு செய்து உடற்பயிற்சிகளை அதற்கென உள்ள கூடத்திலோ அல்லது வீட்டிலோ செய்யுங்கள். இது போன்ற நடவடிக்கைகள் இளம் வயதினருக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications