மானமே போச்சு! விலை உயர்ந்த காரை தள்ளீட்டு போன ஸ்கூட்டர்! இதைதான் பணக்காரங்க போட்டி போட்டுகிட்டு வாங்கறாங்களா!

எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் (Electric Vehicles), நமது எதிர்காலம் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. எனவே மக்கள் பலரும் தற்போது பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர தொடங்கியுள்ளது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் (Range) பற்றிய கவலை மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) எண்ணிக்கை இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. எனவே சார்ஜ் இல்லாமல் நடுவழியில் நின்று விட்டால் என்ன செய்வது? என்ற கவலை மக்கள் மத்தியில் இன்னும் அகலவில்லை.

Ather Electric Scooter Pushes Tata Nexon EV

டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரின் டிரைவர் ஒருவர் சமீபத்தில் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ather Electric Scooter) உரிமையாளர் ஒருவரால், அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது? என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியமடைய கூடும்.

சமூக வலை தளங்களில், வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை, ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தள்ளி கொண்டு செல்வதை நம்மால் காண முடிகிறது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த நபர், தனது வலது காலை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் பின் பகுதியில் வைத்து, தள்ளி சென்றுள்ளார்.

அளவில் பெரிய டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை வெற்றிகரமாக தள்ளி செல்வதற்கு, ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சக்தியை அவர் பயன்படுத்தி கொண்டுள்ளார். வி.எஸ். சுனில் என்ற எக்ஸ் (X) தள பயனர், இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். ட்விட்டர் (Twitter) தளம்தான் தற்போது எக்ஸ் என அழைக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவை ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சரி, உருவத்தில் பெரிய எலெக்ட்ரிக் காரை, சிறிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றால் எப்படி தள்ள முடியும்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதை நிவர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் கார் என எந்த வகையான எலெக்ட்ரிக் வாகனம் என்றாலும் கூட, டார்க் (Torque) அதிகமாக இருக்கும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களால் எடுத்த எடுப்பிலேயே வேகமாகவும் செல்ல முடியும். இந்த திறன்தான், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை தள்ளுவதற்கு, ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு உதவி செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் கூட, ஒரு சில பிரச்னைகளும் இருக்கவே செய்கின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டால், உடனடியாக எரிபொருள் நிரப்பி கொண்டு, பயணத்தை தொடர முடியும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் அப்படி கிடையாது.

பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால், மீண்டும் சார்ஜ் நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் (Fast Charger) என்றால் வேண்டுமானால் ஓரளவிற்கு விரைவாக சார்ஜ் செய்து விட முடியும். சாதாரண சார்ஜர்கள் என்றால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அதற்கு முதலில் சார்ஜிங் ஸ்டேஷன் அருகில் இருக்க வேண்டும்.

எனவே எலெக்ட்ரிக் வாகனத்தில் எங்கு செல்வதாக இருந்தாலும், பேட்டரியில் இருக்க கூடிய சார்ஜில் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும்? அடுத்த சார்ஜிங் ஸ்டேஷன் எங்கே உள்ளது? என்பதையெல்லாம் மனதில் வைத்து கொண்டு பயணம் செய்யுங்கள். இல்லாவிட்டால் இந்த டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் டிரைவரை போல் நடுவழியில் தவிக்க நேரிடும்.

டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் டிரைவர், பேட்டரி சார்ஜ் எவ்வளவு? என்பதை கவனிக்காமல் விட்டதே இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் இவி இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 14.74 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது சற்று விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 13, 2023, 16:08 [IST]
English summary
Viral video shows ather electric scooter pushes tata nexon ev all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+