ஓடும் காரின் மேலே குழந்தைகளை படுக்க வைத்து தந்தை செய்த கொடூரம்! பலவீனமான இதயம் உள்ளவங்க வீடியோவை பாக்காதீங்க!
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரின் மேற்கூரையில், 2 குழந்தைகள் படுத்து கொண்டே பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் கோவா (Goa) மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
சமூக வலை தளங்களில் இந்த சம்பவத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது மிகவும் ஆபத்தான ஒரு செயல் என்பதுதான் இதற்கு காரணம். மஹிந்திரா எக்ஸ்யூவி700, மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் இந்த கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5-star Safety Rating) பெற்றுள்ளது.

அதற்காக இப்படி எல்லாம் பயணம் செய்தால் பாதுகாப்பு கிடைக்காது. இந்த குழந்தைகளின் தந்தைதான் குழந்தைகளை காரின் மேலே படுக்க வைத்து கொண்டு பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தன்று அந்த வழியாக வேறு ஒரு வாகனத்தில் வந்த நபர்தான், இதை வீடியோ எடுத்துள்ளார்.
அவர் காரை ஓட்டி சென்ற நபரிடம், அதாவது மேலே படுத்து கொண்டிருந்த குழந்தைகளின் தந்தை என கருதப்படும் நபரிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர் இதற்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல், அந்த இடத்தை விட்டு வேகமாக கடந்து செல்ல முயற்சி செய்கிறார். இந்த காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து, இது தொடர்பாக கோவா காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அனேகமாக இந்த குழந்தைகள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. சுற்றுலா வந்தபோது 'ரிலாக்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளின் தந்தை இந்த காரியத்தை செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக கோவாவில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற பொதுவான மனநிலைதான் சுற்றுலா பயணிகள் மத்தியில் இருக்கிறது. ஆனால் இது உண்மை கிடையாது. அங்கும் நாம் போக்குவரத்து விதிமுறைகளை எல்லாம் முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக இது போன்ற ஆபத்தான பயணங்களை நாம் தவிர்க்க வேண்டும்.
கோவாவில் இது போன்ற வித்தியாசமான மற்றும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்கள் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேள்விபட்டு வருகிறோம். கோவாவில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற மனநிலைதான் இதற்கு காரணமாக இருக்கிறது. கோவா மட்டுமல்லாது, எங்குமே இது போன்ற ஆபத்தான பயணங்களை செய்ய கூடாது என்பதுதான் எங்கள் கருத்து.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த கால பெற்றோர்கள் ஒரு சிலர், பெருமை மற்றும் சுதந்திரம் என்ற பெயர்களில் குழந்தைகளை கையாளும் விதம் தவறாக உள்ளது. உரிய வயதை எட்டுவதற்கு முன்பாகவே குழந்தைகள் கையில் வாகனங்களை கொடுக்கும் சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். வாகனங்கள் விஷயத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்துங்கள்.


Click it and Unblock the Notifications








