நாலு செவுத்துக்குள்ள பண்ண வேண்டியதை ரோட்ல பண்றாங்க! காதல் ஜோடிகளின் சில்மிஷ வீடியோக்கள் வைரல் ஆகுது!
மேற்கத்திய நாடுகளில் பொது இடங்களில் முத்தமிட்டு கொள்வது மற்றும் கட்டியணைப்பது ஆகியவை எல்லாம் மிகவும் சாதாரணமான விஷயங்களாக உள்ளன. ஆனால் இந்திய கலாச்சாரம் இதற்கு நேர் எதிரானது. எனினும் இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பலர், மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர்.
அன்பாக முத்தமிடுதல், கட்டியணைத்தல் என்பதையெல்லாம் தாண்டி ஒரு சிலர் செய்யும் செயல்கள் மக்களை முகம் சுழிக்க வைக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான வைரல் வீடியோவில் (Viral Video), 2 இளம்பெண்கள் டூவீலரில் உட்கார்ந்தபடி உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டு கொள்வதை நம்மால் காண முடிந்தது.

கட்டியணைத்து கொண்டும், முத்தமிட்டு கொண்டும் ஆபத்தான ஒரு பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து வெளியான ஒரு வீடியோவில், இளம் காதல் ஜோடி ஒன்று, டெல்லி மெட்ரோ ரயிலில், சில்மிஷத்தில் ஈடுபட்டதை நாம் பார்த்தோம். இந்த வரிசையில் மேலும் ஒரு வீடியோ, சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் ஸ்கூட்டரில் பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. அவர்கள் இருவரும் ஹெல்மெட் (Helmet) போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அணியவில்லை. இதுவே தவறான மற்றும் ஆபத்தான ஒரு விஷயம்தான். அப்படி இருக்கும்போது இருவரும் கட்டியணைத்தபடி ஜாலியாக பயணம் செய்கின்றனர்.
அந்த இளைஞர் ஸ்கூட்டரை ஓட்டும் நிலையில், இளம்பெண் பின்னால் அமர்ந்திருக்கிறார். அந்த இளைஞர் தனது ஒரு கையை இளம்பெண்ணின் மீது போட்டு கொண்டு, ஸ்கூட்டரை ஓட்டுகிறார். ஒரு கையால் ஸ்கூட்டரை ஓட்டுவது என்பதும் கூட மிகவும் ஆபத்தான ஒரு விஷயம்தான். மறுபக்கம் அந்த இளம்பெண்ணோ, ஸ்கூட்டர் ஓட்டும் இளைஞரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், கட்டியணைத்து கொண்டு செல்கிறார்.
இவர்கள் இருவர் மீதும் தவறு இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற பயணங்கள் உண்மையிலேயே மிகவும் ஆபத்தானவை என்பதை உணர்ந்து கொள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் முன் வர வேண்டும். அதுவும் அதிக வாகனங்கள் சென்று வரக்கூடிய பரபரப்பான சாலைகளில் இவ்வாறு பயணிப்பது முட்டாள்தனமானது.
திடீரென வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால், தடுமாறி கீழே விழ வேண்டிய சூழல் ஏற்படலாம். போதாக்குறைக்கு அவர்கள் இருவரும் ஹெல்மெட் வேறு அணியவில்லை. இது தலையில் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். எனவே இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தவிர்ப்பது நல்லது.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தால், கண்டிப்பாக ஹெல்மெட் அணியுங்கள். கார்களில் பயணம் செய்தால், கண்டிப்பாக சீட் பெல்ட் (Seat Belt) அணியுங்கள். இதுபோன்ற அடிப்படையான விஷயங்களை அனைவரும் முறையாக பின்பற்றினால் கூட, சாலை விபத்துக்களில் இருந்து பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கால இளைஞர்களும், இளம்பெண்களும் படுக்கை அறையில் செய்ய வேண்டியதை எல்லாம் பொது இடங்களில் செய்து கொண்டிருப்பதாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு பெயரை யாரும் எடுக்க கூடாது என்பதே எங்களின் கருத்து.
அதிலும் குறிப்பாக வாகனங்களில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதை அனைவரும் உடனடியாக தவிர்க்க வேண்டும். டூவீலர் அல்லது கார் என எந்த வாகனமாக இருந்தாலும், அதற்குண்டான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு பயணம் செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications