இந்த மாதிரி ரொமான்ஸ் சீனை ஹாலிவுட் படங்கள்ல கூட யாரும் பாத்தது இல்ல! கல்யாணம் ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. இதில் ஒரு ஆணும், பெண்ணும் கியா செல்டோஸ் (Kia Seltos) காரின் சன்ரூஃப் மூலம் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவர்கள் சுற்றுச்சூழலை ரசித்து கொண்டு மட்டும் பயணம் செய்யவில்லை. கூடவே ரொமான்ஸ் (Romance) செய்து கொண்டும் பயணம் செய்துள்ளனர். இரண்டு பேரும் ஆங்கில படங்களை விஞ்சும் வகையில் 'லிப்கிஸ்' அடித்து கொண்டு பயணம் செய்வதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

Couple Romancing On Kia Seltos Sunroof

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஐதராபாத் (Hyderabad) நகரில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பிவி நரசிம்ம ராவ் எக்ஸ்பிரஸ்வே (PV Narasimha Rao Expressway) சாலையில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் காருக்கு பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இளம் ஜோடியின் இந்த விபரீத செயலுக்கு சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது உண்மையிலேயே ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல்தான். அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பிரேக் பிடித்திருந்தால், அந்த இளம் ஜோடியின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இப்படி நடந்திருந்தால், அது அவர்களுக்கு மட்டுமல்லாது, அந்த சாலையில் வந்து கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. எனினும் இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை. சமீப காலமாகவே பொது இடங்களில் இளம் ஜோடிகள் ஆபத்தான முறையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டூவீலர்களில் கட்டியணைத்து கொண்டும், முத்தமிட்டு கொண்டும் பயணம் செய்த இளம் ஜோடிகளின் பல்வேறு வீடியோக்கள் வைரல் ஆனது இதற்கு ஒரு உதாரணம்.

இந்த வரிசையில்தான் தற்போது ஐதராபாத் நகரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சன்ரூஃப் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சன்ரூஃப் உள்ள கார்களில் குழந்தைகளும், பெரியவர்களும் உடலை வெளியே நீட்டிக்கொண்டு பயணம் செய்வதை சாலைகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது.

டிரைவர் திடீரென பிரேக் பிடித்தால், இது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்துடன் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது கற்கள் போன்ற ஆபத்தான பொருட்கள் உங்களை தாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சன்ரூஃப் உள்ள கார்களில் இப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்யாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விபரீதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் கூட, ஐதராபாத் நகரில் இந்த இளம் ஜோடி, மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதுதான் உண்மை. எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் இந்த தவறை செய்ய பயப்படுவார்கள். இல்லாவிட்டால் இது ஒரு 'டிரெண்ட்' ஆக மாறி விடும் அபாயம் உள்ளது.

Article Published On: Monday, October 16, 2023, 18:03 [IST]
English summary
Viral video shows couple romancing on kia seltos sunroof check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+