கள்ளக்காதலனுடன் காரில் ஜாலியா இருந்த மனைவி! நேரில் பாத்த கணவனுக்கு நடந்த கொடூரம்! யாருக்கும் இப்படி ஆக கூடாது
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். பொதுவாக மைலேஜ், பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகதான் சமூக வலை தளங்களில் கார்கள் 'டிரெண்ட்' ஆகும். ஆனால் ஹூண்டாய் அவ்ரா, தற்போது முற்றிலும் வித்தியாசமான ஒரு காரணத்திற்காக சோஷியல் மீடியாக்களில் 'டிரெண்ட்' ஆகி வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ஹூண்டாய் அவ்ரா காரின் முன் பகுதியில் உள்ள பானெட்டில் தொங்கி கொண்டே ஒருவர் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. மிகவும் அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் ஏன் நடந்தது? என்பதை பற்றிய தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளன.

ஹூண்டாய் அவ்ரா காரின் பானெட்டில் தொங்கி கொண்டே சென்ற நபரின் பெயர் முகமது சமீர் என்பதாகும். இவரது மனைவிக்கு, நஸ்ருல் ஹசன் என்பவருடன், திருமணம் கடந்த உறவு இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முகமது சமீரின் மனைவியும், நஸ்ருல் ஹசனும், இந்த வீடியோவில் நாம் காணும் ஹூண்டாய் அவ்ரா காரில் இருந்துள்ளனர்.
அவர்கள் 'ஜாலி ரைடு' சென்றதாக கூறப்படுகிறது. இதை எதிர்பாராதவிதமாக முகமது சமீர் பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அவர், அவர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்ப காரை நோக்கி விரைந்துள்ளார். எனவே அந்த இடத்தை விட்டு தப்பித்து செல்வதற்காக நஸ்ருல் ஹசன், காரின் ஆக்ஸலரேட்டர் பெடலை மிதித்துள்ளார்.

அப்போது முகமது சமீர் கார் பானெட்டில் தொங்கும்படியான நிலை உருவானது. அவர் பானெட்டில் தொங்கி கொண்டுள்ளார் என்பது தெரிந்தும் கூட, நஸ்ருல் ஹசன் காரை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஓட்டி சென்று கொண்டே இருந்தார். இதனால் ஒரு சில கிலோ மீட்டர்களுக்கு முகமது சமீர், உயிரை கையில் பிடித்தபடி, காரின் பானெட்டிலேயே தொங்கி கொண்டு பயணம் மேற்கொண்டார்.
முகமது சமீர் பானெட்டில் தொங்கி கொண்டிருந்த நிலையில், நஸ்ருல் ஹசன் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், மிகவும் அபாயகரமான முறையில் காரை ஓட்டிய காட்சிகளை நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் ஒரு கட்டத்தில் நஸ்ருல் ஹசன் காரை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இடைப்பட்ட இந்த அபாயகரமான பயணத்தில் நல்ல வேளையாக முகமது சமீருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த செயலால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற முகமது சமீர், கார் நிறுத்தப்பட்ட பிறகு, நஸ்ருல் ஹசனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தின் மொரதாபாத் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நஸ்ருல் ஹசனை காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகமது சமீர்-நஸ்ருல் ஹசன் ஆகியோருக்கு இடையே இருக்கும் பிரச்னை அவர்கள் சம்பந்தப்பட்டது. அதைப்பற்றிய நாம் விவாதிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் நஸ்ருல் ஹசன் செய்த காரியம் உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். பிரச்னைகளை பேசி தீர்ப்பது மட்டுமே சரியாக இருக்கும்.
அதை விடுத்து விட்டு, ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், இப்படி அபாயகரமான முறையில் கார் ஓட்டியது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இது முகமது சமீரின் உயிருக்கு மட்டுமல்லாது, அந்த சாலையில் பயணம் செய்த மற்றவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விஷயம் ஆகும்.
எனவே நஸ்ருல் ஹசன் மீது காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் இனிமேல் யாரும் இது போன்ற அபாயகரமான முறையில் கார் ஓட்டக்கூடாது என்பதையும் இந்த செய்தியின் மூலமாக வலியுறுத்தி கொள்கிறோம். உண்மையிலேயே இந்த நேரத்தில் இப்படியான ஒரு வலியுறுத்தல் அவசியமானதே.
ஏனெனில் சமீப காலமாக இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் மிக அதிகளவில் நடைபெற தொடங்கியுள்ளன. குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் ஒரு சிலர் காரின் பானெட்டில் தொங்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, அதன் டிரைவர்கள் நிறுத்தாமல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர்.
எனவே இப்படியான டிரைவிங் சமீப காலமாக ஒரு 'டிரெண்ட்' ஆகவே மாறி விட்டது என கூறலாம். இது போன்ற தவறுகளை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








