கொடுமை! ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஸ்கூல் பொண்ணுங்க செய்த காரியம்! இந்த மாதிரி வீடியோவை பாக்கறது இதான் முதல் முறை!
முன்பெல்லாம் சொகுசு கார்களில் மட்டும்தான் சன்ரூஃப் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதெல்லாம் விலை குறைவான கார்களில் கூட, சன்ரூஃப் வழங்கப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் கார் வாங்குவதை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக சன்ரூஃப் மாறி விட்டது.
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு சன்ரூஃப் வசதியை சரியாக பயன்படுத்த தெரிகிறதா? என்று கேட்டால், பெரும்பாலானோருக்கு தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், இந்தியாவில் சன்ரூஃப் வசதியை நிறைய பேர் தவறாக பயன்படுத்தி கொண்டுள்ளனர். இதை நிரூபிக்கும் வகையிலான வீடியோ (Video) ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

வேகமாக சென்று கொண்டிருக்கும் காரில், சன்ரூஃப் வழியாக 2 இளம்பெண்கள் நின்று கொண்டே பயணிப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இது தவறான ஒரு விஷயம் ஆகும். எக்காரணத்தை கொண்டும் இதை நாம் செய்ய கூடாது. இந்த தவறை நம்மில் பலரும் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த 2 இளம்பெண்களும் சன்ரூஃப் வழியாக நின்று கொண்டு பயணம் செய்தது ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் கார் ஆகும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) கார் ஆகும். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது.
அனேகமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றில், சன்ரூஃப் வழியாக 2 இளம்பெண்கள் நின்று கொண்டே பயணம் செய்வதை நம்மில் பலரும் பார்க்கும் முதல் வீடியோ இதுவாகதான் இருக்கும். ஆனால் இப்படி நின்று கொண்டே பயணம் செய்வதற்காக கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு செய்வது ஆபத்தானது என்பதுடன், சட்ட விரோதமானதும் கூட.
உண்மையில் கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுவதற்கான காரணமே வேறு. கார்களில் சிறப்பான ஏர் சர்குலேஷன் இருக்க வேண்டும் என்பதற்காகவே சன்ரூஃப்கள் வழங்கப்படுகின்றன. காரின் கேபினில் ஏர் சர்குலேஷனை இது சிறப்பானதாக மாற்றுகிறது. எனவே தொலை தூர பயணங்களின்போதும் நீங்கள் குளிர்ச்சியாக இருக்க முடியும். அத்துடன் சௌகரியமாகவும் உணர முடியும்.
கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுவதற்கு இதுவே முதன்மையான காரணம். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல், பலர் சன்ரூஃப் வழியாக நின்று கொண்டே பயணம் செய்கின்றனர். இந்த வீடியோவில் நாம் பார்க்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்திருந்தால், என்ன நடந்திருக்கும்? என யோசனை செய்து பாருங்கள்.
அந்த 2 இளம்பெண்களும் பேலன்ஸை இழந்திருப்பார்கள். இது அவர்கள் படுகாயம் அடைய காரணமாக இருந்திருக்கும். ஆனால் வீடியோவில் நாம் பார்த்தவரை நல்ல வேளையாக அப்படி எந்த விபரீதமும் நடைபெறவில்லை. ஆனால் இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. எனினும் நம்பர் பிளேட்டை வைத்து பார்க்கையில், அது மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கார் என்பது தெரியவருகிறது.
எனவே மும்பை நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் அந்த 2 இளம்பெண்களும் அணிந்திருப்பது பள்ளி சீருடை போல் இருக்கிறது. பெரும்பாலான கார் உரிமையாளர்கள், குழந்தைகளை கூட சன்ரூஃப் வழியாக நிற்க வைத்து கொண்டு பயணம் செய்கின்றனர். இது ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சன்ரூஃப் வழியாக நின்று கொண்டு பயணம் செய்பவர்கள், அவர்களின் உயிருக்கு மட்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொள்வதில்லை. கூடவே சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களின் உயிருக்கும் சேர்த்தே அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். இது சட்ட விரோதமான செயல் என்பதால், இதை நீங்கள் செய்யும்பட்சத்தில், காவல் துறை அதிகாரிகள் உங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications