இவர்தான்யா ரியல் ஹீரோ! அந்த நடிகரின் படத்தையே விஞ்சும் திக்... திக்... சம்பவம்! வீடியோவ பாக்கும்போதே நடுங்குது

திரைப்படங்களில் பார்ப்பவர்களை நாம் ஹீரோக்களாக கொண்டாடி கொண்டுள்ளோம். ஆனால் யதார்த்தம் என்னவென்றால், உண்மையான ஹீரோக்கள் நம்முடன் சாதாரணமாகதான் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இன்று உலகமே பாராட்டி கொண்டுள்ள ஒரு ரியல் ஹீரோவை பற்றியதுதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் கார் (Car) ஒன்று வெள்ளத்தில் (Flood) சிக்கி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த காரின் உள்ளே சிக்கி கொண்டிருப்பவர்களை மீட்கும் முயற்சியில், ஒரு நபர் தன் உயிரையே பணயம் வைத்திருப்பதையும் நாம் பார்க்கலாம்.

Youngster Risks His Life To Save Mom, Baby From Tapped Car

அந்த நபரின் பெயர் மார்கஸ் வினிஷியஸ் (Marcos Vinicius) என்பதாகும். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பிரேசில் (Brazil) நாட்டில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தன்று கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டுள்ளது. அதன் உள்ளே ஒரு தாயும், அவரின் குழந்தையும் மாட்டி கொண்டனர்.

அவர்கள் இருவரையும் மார்கஸ் வினிஷியஸ் தன் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டுள்ளார். முதலில் குழந்தையை மீட்ட அவர், அதன் பிறகு அந்த குழந்தையின் தாயை மீட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். குழந்தையின் தாயை மீட்ட அடுத்த சில வினாடிகளில், கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Man Risks His Life To Save Mom, Baby From Tapped Car

திரைப்பட பாணியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரைப்படங்களில் வெள்ளத்தில் சிக்கி கொண்டுள்ள அல்லது அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ள வாகனங்களில் இருந்து கடைசி நபரை ஹீரோ மீட்ட அடுத்த நொடியோ, அந்த வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். அல்லது மலையின் மேலே இருந்து கீழே விழுந்து நொறுங்கும். விதார்த் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தில் கூட இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

அதே பாணியில் நடைபெற்றுள்ள இந்த திக்... திக்... சம்பவம், தற்போது உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. தாய் மற்றும் அவரின் குழந்தையை காப்பாற்றிய மார்கஸ் வினிஷியஸை சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் தற்போது மனதார பாராட்டி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நாமும் இந்த ரியல் ஹீரோவை வாழ்த்துவோம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் எப்படி வெள்ளத்தில் சிக்கி கொண்டது? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் இது பார்ப்பதற்கு ஆறு போலும் தெரியவில்லை. பார்ப்பதற்கு ஏதோ நகர சாலை போன்றுதான் இருக்கிறது. எனவே மிக குறுகிய நேரத்தில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

நகர சாலைகளில் ஏற்படும் வெள்ளத்தால், கார்கள் போன்ற வாகனங்கள் அடித்து செல்லப்படும் சம்பவங்கள் சென்னை (Chennai) போன்ற இடங்களில் கூட அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே மழை பெய்யும் சமயங்களில் வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள். அதேபோல் கனமழை சமயங்களில் வாகனங்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதும் அவசியம்தான். முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டால், இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2024, 18:35 [IST]
English summary
Viral video youngster risks his life to save mom baby from tapped car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+