என்னயா ஆச்சு! சாமியாரை பாக்க வாடகை கார்ல வந்தது இவ்ளோ பெரிய ஆளா! ஒரு சமயத்துல சிங்கம் மாதிரி வாழ்ந்த மனுஷன்!
பொதுவாக இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் எளிமையான கார்களில் பயணம் செய்ய மாட்டார்கள். ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் அவர்களை அதிகமாக காண முடியும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள்தான், விலை உயர்ந்த சொகுசு கார்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். பிரபலங்கள் எளிமையான கார்களை தவிர்த்து விட்டு, சொகுசு கார்களில் பயணம் செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
சொகுசு கார்கள் அவர்களுடைய சமூக அந்தஸ்தை வெளிக்காட்டும் ஒரு அம்சம் என்பதுதான் இதற்கு முதல் காரணம். சொகுசு கார்கள் அதிநவீன வசதிகளை கொண்டவை என்பது இரண்டாவது காரணம். அத்துடன் அவற்றின் இன்டீரியர் மிகவும் விசாலமாக இருக்கும். எனவே எவ்வளவு நேரம் பயணம் செய்தாலும், உடல் அவ்வளவாக சோர்வடையாது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பிஸியான வாழ்க்கையை வாழ்பவர்கள். எனவே சொகுசு கார்களிலேயே அவர்கள் போதுமான ஓய்வை எடுத்து கொள்ள முடியும். அத்துடன் பயணத்தின்போதே தங்கள் பணிகளையும் முடித்து கொள்ள முடியும். பிரபலமான மனிதர்கள் சொகுசு கார்களை அதிகம் பயன்படுத்துவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.
அது சொகுசு கார் நிறுவனங்கள் உடனான கூட்டணி ஆகும். அதாவது சொகுசு கார்களை விளம்பரப்படுத்துவதற்காகவும் கூட, பிரபலங்கள் பொது இடங்களில் அவற்றை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற காரணங்களால்தான், பிரபலங்களை மிகவும் எளிமையான கார்களில் நம்மால் பார்க்க முடியாமல் போகிறது.

ஆனால் இதற்கு விதிவிலக்காக, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு (Net Worth) கொண்ட பிரபல மனிதர் ஒருவர் தற்போது, மிகவும் எளிமையான முறையில் டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல கிரிக்கெட் வீரரரான விராட் கோஹ்லி (Virat Kohli) ஆவார். கிரிக்கெட் களத்தில் பல்வேறு சாதனைகளை படைத்தவரான விராட் கோஹ்லி, சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு, உத்தர பிரதேச மாநிலம் விருந்தாவன் (Vrindavan) நகரில், ஸ்ரீ பிரேமானந்த் கோவிந்த் சரண் ஜி மஹாராஜை (Shri Premanand Govind Sharan Ji Maharaj) சந்தித்து, விராட் கோஹ்லி ஆசி பெற்றார். அப்போது விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் (Anushka Sharma) உடனிருந்தார்.
ஸ்ரீ பிரேமானந்த் கோவிந்த் சரண் ஜி மஹாராஜின் ஆசிரமத்திற்கு விராட் கோஹ்லியும், அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வரிசையில் ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு, அவர்கள் ஆசிரமத்திற்கு வந்தபோதுதான் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இதில், ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், விராட் கோஹ்லியும், அனுஷ்கா ஷர்மாவும், மிகவும் எளிமையான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரில் ஆசிரமத்திற்கு வந்து சென்றனர் என்பதுதான். இத்தனைக்கும் அந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஒரு டாக்ஸி (Taxi) ஆகும்.
விராட் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு சுமார் 1,300 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்களும் உள்ளன. அப்படி இருக்கும்போது ஆசிரமத்திற்கு மிகவும் எளிமையான முறையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டாக்ஸியில் அவர்கள் வந்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில், விராட் கோஹ்லியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் பயணம் செய்துள்ளனர். அது 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட 2.4 GX 7 Seater வேரியண்ட் ஆகும். வேரியண்ட் பெயரிலேயே இருப்பதை போல், இந்த காரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்ய முடியும்.
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை நிறைய பேர் டாக்ஸியாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் முதன்மையான தேர்வாக இருப்பது 2.4 GX 7 Seater வேரியண்ட்தான். ஏனெனில் இதுதான் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் வேரியண்ட்களிலேயே மிகவும் விலை குறைவான வேரியண்ட் ஆகும்.
தற்போதைய நிலையில் 19.99 லட்ச ரூபாய் என்ற விலையில் இந்த வேரியண்ட் விற்பனையாகி கொண்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 25 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும். மற்ற வேரியண்ட்களின் விலை அதிகம் என்பதால், கேப் நிறுவனங்களை நடத்துபவர்கள், இந்த வேரியண்ட்டை அதிகமாக தேர்வு செய்கின்றனர்.
எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் அதிகம் விற்பனையாகும் வேரியண்ட்களில் ஒன்றாக இது இருக்கிறது. ஆரம்ப நிலை வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள அதே 2.4 லிட்டர் டீசல் இன்ஜின்தான் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன்தான் (Engine Option) வழங்கப்படுகிறது.
அதேபோல் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் கிடையாது. இருப்பினும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், 7 ஏர்பேக்குகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். ஆனால் வேரியண்ட்களை பொறுத்து, வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா சக்தி வாய்ந்தது. சௌகரியமான பயண அனுபவத்தை வழங்க கூடியது. அத்துடன் இது பாதுகாப்பானதும் கூட. இதன் காரணமாக டாக்ஸியில் பயணம் செய்வது என முடிவாகி விட்டால், பிரபலங்கள் பலரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை தேர்வு செய்கின்றனர்.
இதற்கிடையே ஆசிரமத்தில் விராட் கோஹ்லி பணிவாக மண்டியிட்டு அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும், கிரிக்கெட் களத்தில் விராட் கோஹ்லி சிங்கம் போல ஆக்ரோஷமாக கர்ஜித்த சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








