ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த மனுஷன்! காரை விட்டு இறங்கி போறப்ப செஞ்சதை பாத்து நாடே கண் கலங்கீருச்சு!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் (Mercedes-Maybach GLS). தற்போதைய நிலையில் இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை Maybach GLS 600 4MATIC மற்றும் Maybach GLS 600 Night Series ஆகியவை ஆகும். இதில், Maybach GLS 600 4MATIC வேரியண்ட்டின் விலை 3.35 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் Maybach GLS 600 Night Series வேரியண்ட்டின் விலை 3.71 கோடி ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 4.20 கோடி ரூபாய் மற்றும் 4.30 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில் இந்தியாவின் பிரபலமான மனிதர் ஒருவர் ஏர்போர்ட்டிற்கு வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது விராட் கோஹ்லி (Virat Kohli) ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு (Test Cricket Retirement) அறிவித்து, விராட் கோஹ்லி ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ள நிலையில்தான் அவரது இந்த வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் விராட் கோஹ்லியும், அவரது மனைவி (Wife) அனுஷ்கா ஷர்மாவும் (Anushka Sharma), மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் காரில் இருந்து உடைமைகளை எடுத்து கொண்டு விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதை நாம் காணலாம். அப்போது விராட் கோஹ்லி யாருக்கோ கைகளை அசைத்து விடைபெறுகிறேன் என கூறி விட்டு செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

அனேகமாக கார் டிரைவருக்குதான் விராட் கோஹ்லி 'பாய்' சொல்லி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் வீரரான விராட் கோஹ்லி, எந்தவிதமான ஈகோவும் இல்லாமல், கார் டிரைவருக்கு 'பாய்' சொல்லி விட்டு சென்றதை பார்த்து, அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் இது விராட் கோஹ்லியின் நல்ல பண்பை காட்டுவதாகவம் அவர்கள் சமூக வலை தளங்களில் பெருமிதமாக பேசி வருகின்றனர்.
மேலும் சமூக வலை தளங்களில் விராட் கோஹ்லியின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகளை நினைவு கூர்ந்தும் அவர்கள் கண் கலங்கி கொண்டுள்ளனர். ஆனால் இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் கார் விராட் கோஹ்லியுடையதுதானா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது மிகவும் விலை உயர்ந்தது.
எனினும் இது சொகுசு/செயல்திறன் என இரண்டும் கலந்த கலவை என்பதால், விலையை பொருட்படுத்தாமல், ரன்வீர் சிங் (Ranveer Singh), அர்ஜூன் கபூர் (Arjun Kapoor), ஷாகித் கபூர் (Shahid Kapoor), ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty), தீபிகா படுகோனே (Deepika Padukone), டாப்ஸி (Taapsee), ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh) மற்றும் கீர்த்தி சனோன் (Kriti Sanon) போன்ற திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த காரை வாங்கியுள்ளனர்.
மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் காரில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) மட்டுமே வழங்கப்படுகிறது. அது 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதாவது அதிக எடை கொண்டது. இருப்பினும் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.9 வினாடிகளிலேயே எட்டி விடும் திறன் வாய்ந்ததாக உள்ளது. செயல்திறனை போலவே, சொகுசு வசதிகளிலும் (Features) இந்த கார் அமர்க்களப்படுத்துகிறது.
இதில், லெவல் 2 அடாஸ், பின் இருக்கை பயணிகளுக்கான பிரத்யேக திரைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். செயல்திறன் மிக்க இன்ஜின் ஆப்ஷன்கள், விசாலமான இடவசதி மற்றும் சொகுசு வசதிகள் ஆகிய காரணங்களால், இந்த கார் பிரபலங்களின் முதன்மையான தேர்வாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விராட் கோஹ்லி பயன்படுத்திய மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் கார் அவருடையதுதானா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அவரிடம் ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் (Audi R8 V10 Plus), ஆடி க்யூ8 (Audi Q8), ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் லிமிடெட் எடிசன் (Audi R8 LMX Limited Edition) மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி முல்லினர் (Bentley Continental GT Mulliner) ஆகிய கார்கள் எல்லாம் உள்ளன.
அத்துடன் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur) மற்றும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) ஆகிய கார்களையும் விராட் கோஹ்லி வைத்துள்ளார். இந்த விலை உயர்ந்த கார் கலெக்ஸன் (Car Collection) மூலமாக, விராட் கோஹ்லி சொகுசு மற்றும் செயல்திறன் மிக்க கார்களை விரும்ப கூடியவர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








