ஆடியின் அதிவேகமாகன ஆர்8 எல்எம்எக்ஸ் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய விராட் கோலி!

மைதானத்தில் அதிரடியை காட்டி அசரடித்து வரும் இந்தியாவின் நட்சத்திரக் கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லி புதிய ஆடி ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் என்று பொறுப்புகள் மிகுந்த கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லிக்கு ஆடி கார்கள் என்றால் கொள்ளை பிரியம் என்று [அனுஷ்கா கவனிக்கவும்] கூறியுள்ளார். மேலும், இது ஆடியின் அதிவேக கார் என்பதும் அவரை கவர்ந்துவிட்டது.

ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங்கிடமிருந்து இந்த புதிய காரின் சாவியை சமீபத்தில் பெற்று வீட்டிற்கு டெலிவிரி பெற்றுச் சென்றார் விராட் கோஹ்லி. மேலும், தான் ஒரு ஆடி கார் பிரியர் என்றும், ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் காரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உரிமையாளர்களில் நானும் ஒருவர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிவேக மாடல்

அதிவேக மாடல்

விராட் கோஹ்லி இந்த காரை உடனடியாக வாங்கியதற்கு, இது ஆடியின் அதிவேக மாடல் என்பதும் ஒரு காரணம். ஆம், இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

கடந்த ஜனவரி மாதம் இந்த கார் இந்தியாவில் லிமிடேட் எடிசன் எனப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 99 ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் கார்கள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரின் பிரத்யேக அம்சம் ஒன்றை கொண்டிருக்கிறது. அதுதான், விராட் கோஹ்லியை வசீகரித்திருக்கலாம். அது என்ன தெரியுமா?

லேசர் ஹெட்லைட்ஸ்

லேசர் ஹெட்லைட்ஸ்

இந்த கார் ஹெட்லைட் லேசர் ஹை பீம் கொண்டது. மணிக்கு 60 கிமீ வேகத்தை இந்த கார் தாண்டும்போது, இந்த லேசர் ஹெட்லைட் தானாக ஒளிரும். மேலும், சாதாரண எல்இடி ஹெட்லைட்டுகளைவிட இந்த லேசர் லைட் இருமடங்கு அதிக தொலைவுக்கு ஒளியை பாய்ச்சும் திறன் கொண்டது. இந்த லேசர் ஹெட்லைட்டுடன் இந்தியா வந்திருக்கும் முதல் தயாரிப்பு நிலை மாடலும் இதுதான். அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இது ஒளியை பாய்ச்சும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 570 எச்பி சக்தியையும், 540 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்ட 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆம், இந்த கார் கோஹ்லி அடிக்கும் சிக்சரை விட விரைவானது. அப்படியொரு செயல்திறனை வழங்கும். அதன் விபரம் அடுத்த ஸ்லைடில்...

 செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய ஆடி ஸ்போர்ட்ஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 320 கிமீ வேகம் வரை பறக்கும். ஆனால், இந்திய விதிமுறைகளுக்குப்பட்டு வேக வரம்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

இந்த கார் ரூ.2.97 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதர ஆடி மாடல்கள்

இதர ஆடி மாடல்கள்

விராட் கோஹ்லியிடம் ஏற்கனவே ஆடி க்யூ7 எஸ்யூவி மற்றும் ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் மாடல்கள் இருக்கின்றன. மூன்றாவது மாடலாக இப்போது ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் மாடல் அவரது கராஜில் இணைந்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் மோட்டார் உலகம்

கிரிக்கெட் வீரர்களின் மோட்டார் உலகம்

More from DriveSpark

Article Published On: Friday, May 8, 2015, 13:55 [IST]
English summary
Indian cricket star batsman Virat Kohli took delivery of his all-new limited edition Audi R8 LMX recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+