புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ் கூபே ரக கார் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில், இந்த புத

By Saravana Rajan

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியின் தலைவராக பணியாற்றி வரும் விராட் கோஹ்லி பரபரப்பான தனது பணிகளுக்கு நடுவில் நேற்று ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ்5 காரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

ஆடி இந்தியா கார் நிறுவனத்தின் விளம்பர தூதர் என்பதோடு, ஆடி கார்கள் மீது தீராத பிரியம் கொண்டதாலேயே, ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு மத்தியிலும் நேற்றைய தினம் புதிய ஆடி ஆர்எஸ்5 காரின் நிகழ்வில் விராட் கோஹ்லி கலந்து கொண்டார்.

புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

இந்தநிலையில், நேற்று காரை அறிமுகம் செய்த கையோடு, இந்த புதிய மாடலின் முதல் காரை டெலிவிரியும் பெற்று, தான் ஒரு ஆடி கார் பிரியன் என்பதை மீண்டும் காட்டி இருக்கிறார். ரூ.1.10 கோடி விலையில் விற்பனைக்கு வந்த இந்த கார் ஆடி ஏ5 கார் குடும்பத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாடல்.

புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

இந்த காரில் 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வாரி இறைக்கும் திறன் கொண்டது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

இந்த சக்திவாய்ந்த கார் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, 19 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பழைய மாடலைவிட இந்த கார் 60 கிலோ எடை குறைவானது.

புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

அல்காண்ட்ரா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அலுமினியம் பெடல்கள், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், ஆடியின் வெர்ச்சுவல் காக்பிட் என்ற தாத்பரியத்திலான ஓட்டுனர் அமரும் பகுதி ஆகியவை முக்கியமானதாக இருக்கிறது.

புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

ஆடி ஆர்எஸ்5 காரின் முதல் வாடிக்கையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கும் விராட் கோஹ்லியிடம் ஏற்கனவே ஆர்எஸ்6, ஏ8எல், ஆர்8 வி10, க்யூ7 எஸ்யூவி உள்ளிட்ட பல உயர்வகை ஆடி கார்கள் இருக்கின்றன.

புதிய ஆடி ஆர்எஸ்5 காரையும் வாங்கிய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி!!

இதுதவிர, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி மற்றும் ரேஞ்ச்ரோவர் வோக் போன்ற பிற பிராண்டுகளின் கார்களும் வரிசை கட்டி வைத்திருக்கிறார். எனினும், ஆடி கார்கள்தான் விராட் கோஹ்லி கராஜை ஆக்கிரமித்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 12, 2018, 17:37 [IST]
English summary
Virat Kohli Gets All New Audi RS5 Sports Coupe Car.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+