கார்களை நிறுத்துவதற்கே தனியா ஒரு இடம் பார்க்கணும்! பர்த்-டே பாயிடம் உள்ள கார்களை பார்த்தாலே மயக்கம் வருது!
விராட் கோலி (Virat Kohli), இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர். உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கிலான ரசிகர்களை கொண்டுள்ள ஓர் சர்வதேச பிரபலம் ஆவார். விராட் கோலியின் 36வது பிறந்தநாள் இன்று (நவம்பர் 5). சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார் என சொன்னாலும், இன்னும் சில வருடங்களுக்கு விராட் கோலி சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அந்த அளவிற்கு நன்கு கட்டுக்கோப்பான உடலுடன், எல்லா நேரங்களிலும் நல்ல உடல்தகுதி உடன் உள்ளார். இவ்வாறு கிரிக்கெட்டிற்காக தனது வாழ்நாள் முழுவதையும் வழங்கியுள்ள விராட் கோலியிடம் உள்ள லக்சரி கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
லம்போர்கினி ஹூராகென் (Lamborghini Huracan): கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த காலங்களில் இருந்து பல்வேறு லம்போர்கினி கார்களை கொண்டுள்ளார். அவரது கலெக்ஷனில் உள்ள லேட்டஸ்ட் லம்போர்கினி கார் ஹூராகென் ஆகும். கத்திரிக்கோல் டிசைனில் கதவுகளை கொண்ட இந்த லம்போர்கினி காரினுள் வி10 என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் விலை ரூ.3.22 கோடியாக உள்ளது.

போர்ஷே 911 (Porsche 911): மேலே கண்ட லம்போர்கினி காரை போன்று, செயல்திறன்மிக்க கார் இந்த போர்ஷே 911 ஆகும். மிக நீண்ட வருடங்களாக விற்பனையில் உள்ள இந்த காரையும் விராட் கோலி சொந்தமாக வைத்துள்ளார். இதன் விலை ஆனது ரூ.3.51 கோடியாக தற்சமயம் உள்ளது.

பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி (Bentley Continental GT): விராட் கோலி அவ்வப்போது புது, புது லக்சரி கார்களை வாங்கக்கூடியவர். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டில் இவர் வாங்கிய சொகுசு கார் தான் பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஆகும். இதன் விலை ஏறக்குறைய ரூ.4 கோடியாக உள்ளது.
பெண்ட்லீ ஃபிளையிங் ஸ்பர் (Bentley Flying Spur): கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் உள்ள மற்றொரு பெண்ட்லீ கார். இந்த சூப்பர் பெண்ட்லீ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.8 கோடியாக உள்ளது. இந்த சூப்பர் காரில் பொருத்தப்படும் 6 லிட்டர் டர்போசார்ஜ்டு டபிள்யூ12 என்ஜின் அதிகப்பட்சமாக 626 பிஎச்பி மற்றும் 900 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஆடி ஆர்8 வி10 (Audi R8 V10): 2015இல் இருந்து ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடார் விராட் கோலி உள்ளார். ஆதலால், இவர் வாங்கிய பல்வேறு ஆடி கார்களுள் ஒன்று ஆர்8 வி10 ஆகும். இது ஒரு லிமிடெட் எடிசன் கார் ஆகும். அதாவது, குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த ஆடி கார் விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் 2015 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி ஆர்8 வி10 காரின் விலை அந்த சமயத்திலேயே ரூ.3 கோடியாக இருந்தது.

ஆடி ஆர்8 எல்.எம்.எக்ஸ் (Audi R8 LMX): விராட் கோலியிடம் உள்ள மற்றொரு ஆடி கார். இதுவும் லிமிடெட் எடிசன் ஆகும். இவர் வாங்கிய சமயத்தில் ரூ.2.36 கோடியில் விலையை கொண்டிருந்த இந்த ஆடி காரில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்படுகிறது. 0-இல் இருந்து 96kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ஆடி காரின் டாப்-ஸ்பீடு 321kmph ஆகும்.
ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue): இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதில் விராட் கோலியும் ஒருவர் ஆவார். இவரிடம், ரேஞ்ச் ரோவர் வோக் கார் ஒன்று உள்ளது. இதன் விலை ரூ.2.11 கோடியாக உள்ளது. விராட் கோலி பலமுறை இந்த ரேஞ்ச் ரோவர் காரில் பயணம் செய்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை விராட் கோலியிடம் உள்ள விலையுயர்ந்த கார்களுள் சிலவற்றை மட்டுமே ஆகும். முழு லிஸ்ட்டை பார்த்தால் அது இன்னும் நீண்டுக் கொண்டே போகும். அதேபோல், இந்த லிஸ்ட்டில் விராட் கோலியிடம் உள்ள விலை குறைவான கார்கள் மற்றும் பைக்குகளையும் குறிப்பிடவில்லை. இவ்வாறு, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கு அதிபதியாக இருக்கும் விராட் கோலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications









