விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லியிடம், எத்தனை விதமான லக்சூரி கார்கள் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோக்களை இந்த பதிவில் காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டனான விராட் கோஹ்லி, மைதானத்தில் எதிரணியினர் வீசும் பந்தினை விலாசி அடிக்கும் காட்சியினைப் பார்த்திருப்போம். இதுபோன்று, அவர் கிரிக்கெட் போட்டியில் செய்த சில சாதனைகள் காரணமாகவே, அவருக்கு ரசிகர்கள் ஏரளமாக இருக்கின்றனர்.

அதேசமயம், கோஹ்லிக்கு கிரிக்கெட்டைப்போன்றே, வேறொன்றின்மீதும் ஆர்வம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், விராட்டுக்கு லக்சூரி மற்றும் சொகுசு கார்கள் மீது அதிகம் ஆர்வம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதற்கேற்ப, அவரின் கேரேஜில் பல விதமான லக்சூரி கார்கள் இருப்பதை சில புகைப்படங்கள் நிரூபிக்கின்றன. இதனை மேலும் நிரூபிக்கும் விதமாக சமீபகாலமாக சில வீடியோக்கள் யுடியூபில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விராட் கோஹ்லியின் கேரேஜில் அதிநவீன சொகுசு கார்கள் இருப்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி அமைந்துள்ளது.

இதேபோன்று, விராட் கோஹ்லி, ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். இதன்காரணமாக, அவரது கேரேஜில் அதிகமாக ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு, விராட்டின் கேரேஜில் எந்தமாதிரியான சொகுசு கார்கள் இருக்கிறது என்பதை வீடியோவுடன் இந்த பதிவில் காணலாம்.
பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி:
விராட் கோஹ்லி பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி காரை கடந்த வருடம் செகண்ட்-ஹேண்டாக வாங்கியுள்ளார். இந்த காரை அவர் அதிகம் வீட்டை விட்டு வெளியேச் செல்லும்போது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அவரை இந்த காருடன் சாலையில் வைத்து பார்த்திருப்பதாக, விராட் கோஹ்லி குடியிருக்கும் பகுதியில் வாழும் மக்கள் சிலர் கூறுகின்றனர். இந்த கார் இந்தியாவில் ரூ.3.84 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 500 பிஎச்பி பவரையும், 660என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்:
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் வோக் காரையும் விராட் கோஹ்லி பயன்படுத்தி வருகிறார். இந்த வோக் கார் வெண்மை நிறத்தில் வோக் காரை அவர் நகர்புற பகுதியில் சுற்றித் திரியும் பயன்படுத்தவார் எனக் கூறப்படுகிறது. இந்த வோக் காரானது, இந்தியாவில் டாப் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகும்.
இந்த காரில் 4.4 லிட்டர் எஸ்டிவி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 335 பிஎச்பி பவர் மற்றும் அதிகபட்சமாக 740 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இந்த காருக்கு விராட் கோஹ்லி அவருக்கு பிடித்தமான 1818 என்ற பதிவெண்ணை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி எஸ்5:
ஆடி நிறுவனம், அதன் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காரான ஆடி எஸ்5 மாடலை கோஹ்லிக்கு வழங்கியுள்ளது. அவரை ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து இந்த சிறப்பு பரிசினை ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கார் இந்தியாவில், ரூ.70.6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. ஆடி எஸ்5 காரில் 349 பிஎச்பி பவரையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் சிறப்பம்சமாக அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடி ஆர்எஸ்5:
ஆடி ஆர்எஸ் 5 காரை விராட் கோஹ்லி அவரது குடம்பத்தினர் பயணம் செய்வதற்காக வாங்கியுள்ளார். இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அடங்கிய மாடலாக இருக்கின்றது. இதனை ஆடி நிறுவனம் ரூ.1.1 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகிறது. இந்த காரில் 2.9 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது அதிகபட்சமாக 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இந்த கார் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.9 விநாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, இந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் நபராகவும் விராட் கோஹ்லி உள்ளார்.
ஆடி ஆர்8:
விராட் கோஹ்லியிடம் இருக்கும் ஒரே ஒரு ஸ்போர்ட்ஸ் மாடல் கார் என்றால் அது இந்த ஆடி ஆர்8 மாடல் தான். இந்த ஆர்8 லேட்டஸ்ட் வெர்ஷனை அவரது வெண்மை நிற ஆர்10 ஆடி காரை ரிபிளேஸ் செய்து வாங்கியுள்ளார். விராட்டுக்கு மிகவும் பிடித்தமான இந்த காரை அவர் எப்போதாவது தான் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட சிலவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications








