விராட் கோலி வந்திறங்கிய காரை பற்றி தான் எல்லா பக்கமும் பேச்சு! இதை செய்வார்னு எதிர்பார்க்கல!!

விராட் கோலி (Virat Kohli), இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர். தற்போதைய மாடர்ன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் விராட் கோலியும் ஒருவராக நிச்சயம் இருப்பார். அந்த அளவிற்கு அதிக ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேனாக விளங்கும் விராட் கோலி விலையுயர்ந்த கார் & பைக்குகளையும் வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், விராட் கோலி புதியதாக வாங்கியுள்ள பிராண்ட்-நியூ லேண்ட் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமீபத்தில், மும்பையில் பெண் ஒருவர் விராட் கோலியின் கையை பிடித்து இழுத்து புகைப்படங்களை எடுத்துக் கொண்ட வீடியோவை இணையத்தில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த காட்சிகள் அந்த அளவிற்கு நாடு முழுவதும் வைரலாகின. மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு மனைவி அனுஷ்கா சர்மா உடன் விராட் கோலி வந்திருந்தார்.

virat kohli owned luxury cars

அப்போது, ஓட்டலுக்கு ஓட்டிவந்த காருக்கு அருகே நின்றவாறு மனைவி உடன் விராட் கோலி சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் ஒன்றை கவனித்தோம், மனைவி அனுஷ்கா சர்மா உடன் விராட் கோலி ஓட்டி வந்தது பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்1 என்கிற எலக்ட்ரிக் கார் ஆகும். இவ்வாறான ஒரு எலக்ட்ரிக் காரில் விராட் கோலியை கண்டது இதுவே முதல்முறை ஆகும்.

ஏனெனில், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 எலக்ட்ரிக் கார் கடந்த 2023ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கிரே, சில்வர், கருப்பு மற்றும் வெள்ளை என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், கிரே நிறத்தில் இந்த காரை விராட் கோலி வாங்கியுள்ளார். கடந்த ஆண்டில்தான் இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 கார் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த காரை விராட் கோலி சமீபத்தில்தான் வாங்கியிருக்க கூடும்.

virat kohli owned luxury cars

மேலும், இந்த காரில் மகாராஷ்டிரா மாநில நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த காரை மகாராஷ்டிராவில் விராட் கோலி பதிவு செய்துள்ளார். டெல்லியிலும் பங்களா வீட்டை கொண்டுள்ள விராட் கோலி சமீபத்தில்தான் மும்பையில் ஒரு பங்களா வீட்டை வாங்கி, மொத்தமாக மும்பையில் வசிக்க ஆரம்பித்தார். அதன்பின்னரே இந்த பிஎம்டபிள்யூ காரை அவர் வாங்கியிருக்க கூடும்.

விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரான பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 காரில் 66.4kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக 313 எச்பி மற்றும் 494 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் காருக்கு கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 440கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.66.90 லட்சமாக உள்ளது.

virat kohli owned luxury cars

இதேபோல், விராட் கோலி குறித்த சமீபத்திய வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில், விமான நிலையத்திற்கு தனது புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி காரில் விராட் கோலி வந்திறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில், தான் ஏற்கனவே தாமதமாக வந்திருப்பதாகவும், தன்னை பின்தொடர வேண்டாம் எனவும் விராட் கோலி அங்கிருந்தவர்களுக்கு தெரிவிப்பதை கேட்க முடிகிறது.

விராட் கோலியிடம் இருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் ஆகும். இது 5 கதவுகளை கொண்ட லக்சரி எஸ்யூவி கார் ஆகும். ரூ.1.04 கோடியில் இருந்து ரூ.1.57 கோடி வரையில் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ள டிஃபெண்டர் 110 காரில் 2 லிட்டர் பெட்ரோல், 3 லிட்டர் பெட்ரோல், 3 லிட்டர் டீசல் மற்றும் 5 லிட்டர் வி8 பெட்ரோல் என பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விராட் கோலி ஓர் லக்சரி கார் பிரியர் ஆவார். அவரிடம் இருக்கும் பணத்திற்கு மாதத்திற்கு ஒரு விலையுயர்ந்த காரை வாங்க முடியும். அந்த வகையில், கடந்த 1 வருடத்தில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 என 2 புதிய சொகுசு கார்களை வாங்கியுள்ளார். இந்த இரண்டில் உங்களது ஃபேவரட் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 8:00 [IST]
English summary
Virat kohli owned land rover defender and bmw ix1 electric car check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X