வரிசையா அணிவகுத்த சொகுசு கார்கள்! உள்ளே இருந்தது அவங்களா! ஒரே எடத்துல எல்லாரையும் பாத்தாச்சு!

2023 ஆசிய கோப்பை (2023 Asia Cup) கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், இந்திய வீரர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர்கள் விலை உயர்ந்த கார்களில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி கொண்டுள்ளது. எந்தெந்த வீரர்கள் எந்தெந்த கார்களில் சென்றனர்? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இந்த செய்தி. சரி, வாருங்கள். செய்திக்குள் செல்வோம்.

Rohit Sharma Luxury Car

ரோகித் ஷர்மா - மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் ஷர்மாவிடம் (Rohit Sharma), மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class) கார் ஒன்று இருக்கிறது. இது சில்வர் நிற 350டி (350d) வேரியண்ட் ஆகும். இந்த காரில்தான் ரோகித் ஷர்மா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

ரோகித் ஷர்மாவின் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் 350டி காரில் 3.0 லிட்டர் இன்லைன்-6 டீசல் இன்ஜின் (Diesel Engine) பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 285 பிஎஸ் பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Virat Kohli Luxury Car

விராத் கோஹ்லி - மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ்-க்ளாஸ்: விராத் கோஹ்லி (Virat Kohli) ஆடி (Audi) நிறுவனத்தின் விளம்பர தூதர் ஆவார். எனவே அவரிடம் ஆடி நிறுவனத்தின் கார்கள் நிறைய இருக்கின்றன. இதில், க்யூ7 (Q7), க்யூ8 (Q8), ஏ8 (A8), ஆர்8 (R8), இ-ட்ரான் (e-Tron) மற்றும் இ-ட்ரான் ஜிடி (e-Tron GT) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இதுதவிர அதிகபட்சமாக 365 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்ட 3.0 லிட்டர் இன்லைன்-6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட (Petrol Engine) மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) கார் ஒன்றும் அவரிடம் இருக்கிறது. இது 450 4மேட்டிக் (450 4MATIC) வேரியண்ட் ஆகும். இந்த காரில்தான் விராத் கோஹ்லி சென்றார்.

ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஷ் அய்யர் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63: ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் ஸ்ரேயாஷ் அய்யர் (Shreyas Iyer) ஆகிய இருவரிடமும், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) கார் உள்ளது. ஹர்திக் பாண்டியாவிடம் இருப்பது க்ரே கலர் கார். ஸ்ரேயாஷ் அய்யரிடம் இருப்பது சில்வர் கலர் கார் ஆகும்.

இந்த கார்களில், 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 577 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர்கள் தவிர கேஎல் ராகுல் (KL Rahul) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) ஆகிய வீரர்களையும் இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இதில் பும்ரா வாடகை காரில் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பும்ரா ஏன் வாடகை காரில் சென்றார்? என்பதற்கான காரணம் தெரியவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் பலர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் அடுத்தடுத்து சென்ற காரணத்தால், அந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டிருந்தது. இந்த கார்கள் எல்லாம் நமக்கு வேண்டுமானால் வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில், இவை எல்லாம் சர்வ சாதாரணமானவைதான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 19, 2023, 20:36 [IST]
English summary
Virat kohli rohit sharma hardik pandya shreyas iyer kl rahul jasprit bumrah luxury cars viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+