வெளியான விராட் கோஹ்லியின் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி! எதுவுமே நடக்காதது மாதிரி இப்படிலாம் பண்ணலாமா?
ஆர்சிபி (RCB) என சுருக்கமாக அழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru) கிரிக்கெட் அணி, ஐபிஎல் (IPL) கோப்பையை வெல்ல வேண்டும் என்பது, அந்த அணி ரசிகர்களின் 18 வருட கனவு. ஒரு வழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு, நடப்பு 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ஆர்சிபி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
ஆனால் அந்த மகிழ்ச்சி முழுமையாக ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. கோப்பையை வென்ற மறுநாளே, அதாவது நேற்று (ஜூன் 4), பெங்களூர் சின்னசாமி (Chinnaswamy Stadium) மைதானத்தில், ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடினர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede), 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அத்துடன் கர்நாடக மாநில அரசு மற்றும் ஆர்சிபி அணி நிர்வாகம் ஆகியவை மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஆர்சிபி கோப்பையை வெல்ல முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்த விராட் கோஹ்லியின் (Virat Kohli) வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ரேஞ்ச் ரோவர் (Range Rover) சொகுசு காரில், விராட் கோஹ்லி பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் இந்த வைரல் வீடியோ, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதா? அல்லது பின்பு எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் சமூக வலை தளங்களில், இந்த வைரல் வீடியோவை காணும் ரசிகர்கள், மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
''இத்தனை பேர் உயிரிழந்துள்ள நிலையில் இவர்களால் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது? இவர்களுக்கு எல்லாம் வருத்தமே இல்லை'' என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரோ, ''விராட் கோஹ்லி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்'' என கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொரு நபரோ, ''எதுவுமே நடக்காதது போல் சொகுசு காரில் பயணிக்கலாமா?'' என கேட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் விராட் கோஹ்லி பயணித்த சொகுசு காரை பற்றி தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது ரேஞ்ச் ரோவர் கார் ஆகும். இதன் 4.4 வோக் எஸ்இ டீசல் எல்டபிள்யூபி (4.4 Vogue SE Diesel LWB) வேரியண்ட்டில்தான், விராட் கோஹ்லி பயணித்துள்ளார்.
ஆனால் இந்தியாவில் இந்த கார் தற்போது விற்பனையில் இல்லை. இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் இந்தியாவில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது, 2.71 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) இந்த கார் விற்பனை செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த கார் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி அவரது பெயரில்தான் இந்த காரை வாங்கியுள்ளார். இந்த காரில், 4.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 335 பிஹெச்பி பவர் மற்றும் 740 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீளம் 5,200 மிமீ ஆகும். அதிக நீளம் கொண்ட கார் என்பதால், பயணிகள் சொகுசாக பயணிக்க முடியும். அதே நேரத்தில் 86 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்கை இந்த கார் கொண்டுள்ளது.
இந்த காரில் மொத்தம் 5 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். இந்த காரின் முன் மற்றும் பின் என 2 பகுதிகளிலும், டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். எனவே இந்த காரில், ஆஃப்-ரோடு சாகச பயணங்களையும் கூட மேற்கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விராட் கோஹ்லி பயணம் செய்த ரேஞ்ச் ரோவர், சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவை. பொதுவாக விராட் கோஹ்லி, இந்தியாவின் மற்ற பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை போலவே, விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். எனவே சொகுசு கார்களை அவரை அடிக்கடி காண முடியும்.


Click it and Unblock the Notifications








