சாமியாராக மாற போகிறாரா கோஹ்லி! காரை விட்டு இறங்கும்போது கையில் வைத்திருந்த பொருளை பார்த்து ஸ்டண் ஆன ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் விராட் கோஹ்லி (Virat Kohli). டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் பொது இடங்களுக்கு பயணம் செய்யும் ஏராளமான வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளன. வெகு சமீபத்தில் பிரேமானந்த் ஜி மஹாராஜை (Premanand Ji Maharaj) விராட் கோஹ்லி அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவர் மண்டியிட்டு அமர்ந்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவின.
பொதுவாக விராட் கோஹ்லி கிரிக்கெட் களத்தில் ஆக்ரோஷமாக காணப்படுபவர். எனவே ஆசிரமத்தில் அவர் சாதுவாக அமர்ந்திருந்தது கவனம் பெற்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், விராட் கோஹ்லியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதை நிரூபிக்கும் வகையிலான மற்றொரு வைரல் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் கியா கார்னிவல் (Kia Carnival) காரில் இருந்து விராட் கோஹ்லி இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவரது கையில் டிவைஸ் ஒன்று இருப்பதை நீங்கள் காணலாம். இது ஜேப் கவுண்டர், டேலி கவுண்டர் மற்றும் மந்த்ரா கவுண்டர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் ஒரு டிவைஸ் ஆகும்.
ஒரு மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்கிறோம் என்பதை கணக்கிடுவதற்கு இந்த டிவைஸ் பயன்படுத்தப்படுகிறது. ஹிந்து சம்பிரதாயங்களில் ஒரு சில மந்திரங்களை இத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என கூறப்படுவதுண்டு. அத்தனை முறை சரியாக மந்திரத்தை ஜெபிக்கிறோமா? என்பதை கணக்கிடுவதற்குதான் இந்த டிவைஸை பயன்படுத்துவார்கள்.
எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விராட் கோஹ்லி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கி விட்டாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சரி, இந்த நேரத்தில் அவர் பயன்படுத்திய காரை பற்றியும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அது கியா கார்னிவல் கார் ஆகும்.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கியா கார்னிவல் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை 63.91 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமாராக 80 லட்ச ரூபாய் வரும்.
கியா கார்னிவல் காரில் பொருத்தப்பட்டிருப்பது 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 193 ஹெச்பி பவர் மற்றும் 441 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும்.
இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், பாதுகாப்பு வசதிகளுக்கு பஞ்சமில்லை. இதில், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, 8 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர வாடிக்கையாளர்களின் பயணத்தை இனிமையாக்க, ட்யூயல் எலெக்ட்ரிக் சன்ரூஃப்கள், தலா 12.3 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12 ஸ்பீக்கர் பாஷ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் கியா கார்னிவல் காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விராட் கோஹ்லி பயன்படுத்திய கியா கார்னிவல் காரை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் (Suresh Raina) வைத்துள்ளார். இது சொகுசு வசதிகள் நிரம்பிய ஒரு கார் என்பதால், சௌகரியமான பயணத்தை எதிர்பார்க்கும் பிரபலங்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications








