கோடி, கோடியாய் சொத்து இருக்கு!! சாதாரணமா எகானமி கிளாஸ் விமானத்தில் வந்தவர் இந்த பிரபலமா!

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் ஆச்சிரியமளிக்கும் வகையில் எகானமி கிளாஸில் பயணம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.

விமான பயணங்கள் இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமானவை ஆகிவிட்டன. அருகில் உள்ள ஓர் முக்கிய நகரத்திற்கு செல்வதற்கு கூட விமானங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், பெரும்பாலான விமானங்களில் எகானமி கிளாஸ் நிரம்பி வழிகிறது. அதேநேரம், விஐபி-களும் விமானங்களை பயன்படுத்துகின்றனர்.

kohli traveled in economy class

விஐபி-களுக்காகவே பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் பிரிவுகள் விமானங்களில் உள்ளன. பொதுவாக, விமானத்தில் எகானமி கிளாஸ் பின்னால் இருக்கும், பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் பிரிவுகள் விமானத்தின் முதல் பாதியில் இருக்கும். ஒவ்வொரு கிளாஸுக்கும் தனித்தனியாக வாசல் கதவுகள் உள்ளன.

இதனால், எகானமி கிளாஸில் பயணிப்பவர்களை பிஸ்னஸ் கிளாஸில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. ஃபர்ஸ்ட் கிளாஸில் இருப்பவர்களை எகானமி கிளாஸில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. இதனாலேயே, சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களாலும் விமான சேவையை பொது மக்களுடன் ஒரே விமானத்தில் பயன்படுத்த முடிகிறது.

kohli traveled in economy class

ஆனால், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர் விராட் கோலி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் எகானமி கிளாஸில் பயணம் செய்து உள்ளார். 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இந்த தொடரின் 37வது போட்டி கடந்த நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி வீரர் விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்களை எட்டி தனது 49வது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார்.

kohli traveled in economy class

நவம்பர் 5ஆம் தேதி தான் விராட் கோலியின் பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் சதத்துடன் அவர் கொண்டாடினார். போட்டி முடிந்ததும் விராட் கோலி மட்டும் தனியாக கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் எகானமி கிளாஸில் சென்றுள்ளார். அப்போது அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் விராட் கோலியை கண்டு பிரம்மித்து போனார்கள்.

சிலர் தங்களது மொபைல் போனில் விராட் கோலியை படம் பிடிக்க, சிலரோ அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இவ்வாறு எல்லாம் நடக்கும் என்பதை முன்னரே தெரிந்தவர் போல், விராட் கோலியும் அவர்களுடன் சிரித்தப்படி போட்டோ எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக முக கவசம் அணிந்தப்படி வந்த போதிலும் விராட் கோலியை விமானத்தில் இருந்த பயணிகள் அடையாளம் கண்டுவிட்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் உலகில் ராஜா அந்தஸ்த்தில் இருக்கும் ஒருவர் விமானத்தில் எகானமி கிளாஸில் பயணிக்கிறார் என்றால் அது அவரது பெருந்தன்மையையும், பொது மக்களுடன் நெருக்கத்தில் இருக்க வேண்டும் என்கிற அவரது எண்ணத்தையும் காட்டுகிறது. அல்லது, அவசரமாக பெங்களூர் செல்ல வேண்டி, எகானமி கிளாஸாக இருந்தாலும் பரவாயில்லை என விராட் கோலி பயணம் செய்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 20:14 [IST]
English summary
Virat kohli traveled in economy class on plane to bengaluru
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X