விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

Written By:

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய கார் பிரியர், அவர் தனக்கு பிடித்தமான கார்களை வாங்கி தனக்கான கேரேஜில் மிகப்பெரிய கலெக்ஷனையே சேர்த்து வைத்துள்ளார். அவரிடம் இருக்கும் கலெக்ஷனில் கார்களை தினமும் ஒருகாரை பயன்படுத்தினால் அவ்வபோது தான் பயன்படுத்திய காரை மீண்டும் பயன்படுத்த முடியும்.

விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

அந்த வரிசையில் அவர் வாங்கியுள்ள புதிய கார் தான் பென்ட்லி காண்டினேன்டல் ஜி.டி. டில்லி விமான நிலையத்தில் இந்த காருக்காக இவர் காத்திருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி, விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டது.

விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

ஏற்கனவே விராட் கோலி இந்த காரை ஓட்டிச்செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியிருந்தது. இந்த கார் விராட் கோலியின் தம்பி விகாஷ் கோலியின் பெயரில் உள்ளது.

கான்டினென்டல் ஜி.டி. என்பது இரண்டு டோர் கொண்ட ஸ்போட்ஸ் ரக கார். இந்த கார் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறித்து சரியாக தெரியவில்லை. எனினும் இந்த கார் இந்தியாவில் 2 வெரியன்ட் இன்ஜின்களுடன் கிடைக்கிறது. முதல் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் 521 பிஎச்பி 680 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அடுத்து 6.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 567 பிஎச்.பி 700 என்எம் டார்க் திறனை வெளிபடுத்தக்கூடியது.

விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 820 என் எம் டார்க் திறனை வெளிபடுத்தியுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை இந்திய மதிப்பில் ரூ 3.58 கோடியில் இருந்து 3.84 கோடி வரை மதிப்பிடப்படுகிறது.

விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

விராட் கலெக்ஷன்கள்

விராட் கோலி ஆடி காரின் இந்தியாவிற்கான விளம்பர தூதராக இருக்கிறார். அவரிடம் ஆடி காரின் எஸ்5, ஆர்8, எல்.எம்.எக்ஸ், ஆர்8வி10, ஏ8எல், க்யூ 7 45டிடிஐ ரக கார்களை தன் கலெக்ஷன்களில் சேர்த்துள்ளார். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், ரெலாண்ட் டஸ்டர், ஆகிய கார்களை பரிசாக பெற்று தனது கேரேஜை அழகு படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விலையுயர்ந்த கார்களை தன் வசம் வைத்துள்ள வீரர் விராட் கோலி தான்.

விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

பென்ட்லி வைத்துள்ள மற்ற கிரக்கெட் ஸ்டார்கள்

பென்ட்லி நிறுவனத்தின் கார்களை விவேந்திர ஷேவாக், மற்றும் யுவராஜ் ஆகியோர் வைத்துள்ளனர். ஷேவாக் பென்ட்லி ஃபிளையிங் ஸ்பூர் என்ற காரை அவத்துள்ளார். அவர் டில்லி சிட்டிக்குள் செல்வதற்கு அந்த காரையே பயன்படுத்தி வருகிறார். யுவராக பென்ட்லி கான்டினேன்டல் ஜி.டி. வி8 மாடல் காரை வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01."மசாஜ் செய்யும் யானை" ராயல் என்பீல்டை தொடர்ந்து கிண்டல் செய்யும் பஜாஜ்

02.ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

03.சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்?

04.உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

05."ராங்" சைடில் வண்டி ஓட்டினால் டயர் கிழியும்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Virat Kohli’s Bentley Continental GT is here. Read in Tamil

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark