ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

ஹீரே மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் பைக் விளம்பரத்தால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி நடிப்பில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. புதிதாக அறிமுகமாகியுள்ள ஹீரோ எக்ஸ்டிரீம் 200ஆர் பைக்கை குறித்து எடுக்கப்பட்ட அந்த விளம்பரம், மக்களிடம் அறிமுகம் செய்யும் ஒளிபரப்பட்டு வருகிறது. தற்போது, இந்த விளம்பரம் விராட்டுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பட்ஜெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை தயாரித்து விற்பனைச் செய்துவருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்றாக உள்ளது.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 முதல் 7 லட்சம் பைக்குகளை விற்பனைச் செய்யும் இந்த நிறுவனம் சமீபகாலமாக சரிவையேத் தொடர்ச்சியாக கண்டுவருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தான் விட்ட இடத்தைப் பிடிக்கும் நோக்கில் ஹீரோ நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

இதனடிப்படையில்தான், புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது. நேக்கட் ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்போர்ட் ரக பைக் சிபிஇசட் எக்ஸ்ட்ரீம் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் எல்இடி பகல்நேர மின் விளக்கு, சிறிய வைசர் மற்றும் கவர்ச்சிகரமான முன்புற கவுல் அமைப்புடன் கூடிய டிசைன் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

மேலும், இந்த பைக்கில் 18.1பிஎச்பி பவரைக் கொடுக்கும் 200சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 17.2என்எம் டார்க்யூவை வெளிப்படுத்தும். இந்த பைக்கின் எஞ்ஜினானது 5 ஸ்பீடு கியர்பாக்ஸால் கன்ட்ரோல் செய்யப்படுகிறது. இது, அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 கிமீ வரை மைலேஜ் அளிக்கும்.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

இந்த பைக்கில் பாதுகாப்பு அம்சமாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன் மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஹீரோ நிறுவனம், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியை வைத்து விளம்பரம் தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகிறது.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

பொதுவாக ஒரு தயாரிப்பை மக்களிடம் கொண்டுச் செல்லவேண்டும் எனபதற்காக தயாரிப்பு நிறுவனங்கள், அந்த பொருளை மிகவும் பிரசித்திப் பெற்றதாக காட்சிப்படுத்த நினைப்பார்கள். இதற்காக சில கிராஃபிக் தொழில்நுட்பங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக காட்சிகளை உருவாக்குவார்கள்.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

இதேபோன்று, எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விளம்பரத்தையும் ஹீரோ நிறுவனம் தாயரித்து இருந்தது. அதன்படி, பைக்கை ஓட்டிவரும் விராட் அதிவேகமாக சாலையில் செல்வதைப்போல் காட்சி அமைந்துள்ளது. பார்க்கிங்கில் இருந்து காரை முந்திவரும் விராத், சிக்னலில் சமிக்ஞைக்கு காத்திருக்கிறார். அப்போது, அவருடன் நிற்கும் மற்ற வாகன ஓட்டிகள் சிக்னல் விடுவதற்கு முன்பாகவே சீறிப் பாய்ந்து செல்கின்றனர். இதனைக் கண்ட விராட், சிறிது நொடிகளிலேயே எக்ஸ்டீரிமை வேகமாக செலுத்தி மற்ற வாகன ஓட்டிகளை முந்துகிறார்.

அவ்வாறு அவர்களை முந்திச் செல்லும்போது, இரண்டு நீளமான சரக்கு டிரக்குகளை ஆபத்தான முறையில் அதிவேகமாக கடக்கிறார். விராட் கோஹ்லி நடித்துள்ள இந்த பைக் விளம்பரத்தில், அவர் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு பைக்கை வேகமாக ஓட்டுவது போல காட்டியிருப்பதாக இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டு கவுன்சில் புகார் தெரிவித்துள்ளது.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

இதுபோன்று இந்த கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், விதிமீறல்கள் குறித்து வந்த தொடர் புகார்களையடுத்து, ஆய்வு செய்ததில் 232 விளம்பரங்கள் விதிமுறைகளை மீறி காட்சிகளை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஹீரோ பைக் விளம்பரத்தால் வந்த தலைவலி: சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்!

மேலும், இதுபோன்ற ஆபத்தான காட்சிகளில் பிரபலங்கள் நடிப்பதால், அவரின் ரசிகர்களும், பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களும் அதேபோன்று ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கலாம் எனவும் அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சையின் காரணமாக விராட்டுக்கு தலைவலி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Article Published On: Tuesday, March 5, 2019, 18:49 [IST]
English summary
Virat Kohlis Hero Xtreme Ad Encourages Unsafe Riding. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+