பணக்காரர்களின் விண்வெளி சுற்றுலா கனவு சீக்கிரமே நிறைவேற போகுது.. ஒரு டிக்கெட்டோட விலை இவ்ளோ அதிகமா!..
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் விமானத்தை அறிமுகம் செய்வதில் மிக தீவிரமாக விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் முதல் வர்த்தக ரீதியான விண்வெளி சுற்றுலா விமானம் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான நிறுவனம் விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic). இது ஓர் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டு இருக்கும் விமானத்தை வெகு விரைவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடப்பு மே மாத இறுதிக்குள் அந்த விமானம் அறிமுகம் செய்யப்பட்டு விடும் கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, பயணிகளை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் பணியில் அது ஜூன் மாதத்தில் இருந்து ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்த விமானம் முந்தைய சோதனையின்போது லேசான விபத்தைச் சந்தித்தது.
தரையிறங்கும்போதே இந்த எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது. இந்த விபத்து நடைபெற்று சுமார் ஓராண்டுகள் இருக்கும். இந்த நாள்பட்ட இடைவெளிக்கு பின்னர் இப்போதே மீண்டும் விர்ஜின் கேலக்டிக் விண்வெளி போக்குவரத்து விமானம் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதனை யூனிட்டி 25 என நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இது ஓர் விண்வெளி கப்பல் (ஸ்பேஸ் ஷிப்) ஆகும். இருப்பினும், பயணிகள் விமானத்தைப் போல் வடிவமைத்திருக்கின்றனர். முதலில் நான்கு பேர் கொண்ட குழுவே இந்த விமானத்தை சோதனைக்கு உட்படுத்த இருக்கின்றது. இதற்கு பின்னரே வணிக ரீதியாக விண்வெளி கப்பல் பயன்படுத்தப்பட இருக்கின்றது. ஜீன் மாத இறுதிக்குள் இந்த பணி தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், எந்த நாளில் அது அதன் முதல் வணிக ரீதியான விண்வெளி சுற்றுலா பயணம் தொடங்கப்படும் என்கிற துள்ளியமான விபரம் வெளியிடப்படவில்லை. இப்போதே விண்வெளிக்கு சுற்றுலா செல்வதற்காக 800 பேர் வரை டிக்கெட்டுகளை வாங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதில், 600க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் 200,000 அமெரிக்க டாலர்கள் (ரூபாயில் - 1,64,09,500) முதல் 250,000 வரையிலான அமெரிக்க டாலர்களுக்கு (ரூபாயில் - 2,05,11,875) விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றன.
மீதமுள்ள 200 டிக்கெட்டுகள் உச்சபட்சமாக 450,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுவே தற்போதைய டிக்கெட் விலை விபரமாகும். இரண்டு வெவ்வேறு விதமான வாகனமாக இந்த ஸ்பேஸ் ஷிப் இருக்கும். ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், மற்றொன்று பயணிகள் ஷிப்பை அழைத்துச் செல்லும் தாய் ஷிப்பாகவும் இருக்கும்.
இந்த தாய் ஷிப்பே பயணிகள் இருக்கும் யூனிட்டை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும். அதனை நிறுவனம் விஎம்எஸ் ஈவ் என குறிப்பிடுகின்றது. பயணிகள் இருக்கும் யூனிட்டை விஎஸ்எஸ் என்று குறிப்பிடுகின்றனர். சுமார் 50 ஆயிரம் அடி உயரம் வரை அது அழைத்துச் செல்லும்.
அங்கிருந்து பார்க்கும் போது பூமியின் மொத்த உருளை வடிவத்தையும் மிக தெளிவாகப் பார்க்க முடியும். மேலும், இந்த உச்சபட்ச உயரத்தை அடைந்த பின்னர் விஎம்எஸ் ஈவ் பயணிகள் இருக்கும் ஷிப்பை தனியாக கழட்டி விடும். இந்த நிகழ்விற்கு பின்னர் சுற்றுலா பயணிகளால் புவி ஈர்ப்பு விசை இல்லாததை உணர முடியும்.
இதுபோன்று இன்னும் பல பிரத்யேக அனுபவங்களை விண்வெளி சுற்றுலா பயணிகளுக்கு வழங்க இருப்பதாக விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. விண்வெளிக்கு சுற்றுலா செல்ல உலக செல்வந்தர்கள் பலர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் விண்வெளி கனவை நிறைவேற்றும் முயற்சியிலேயே விர்ஜின் கேலக்டிக் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விண்வெளி சுற்றுலா இப்போதைய நிலவரப்படி அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களால் மட்டுமே மேற்கொள்ளக் கூடிய ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. அதேவேளையில், இதனை நடுத்தர மக்களும் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக புதுமுக நிறுவனங்கள் சில குறைவான கட்டணத்தில் ஸ்பேஸுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








