டாடா உருவாக்கிய ஏர்லைன் நிறுவனத்துக்கு கடைசியில் இந்த கதியா? ஏர் இந்தியாவின் பலம் அதிகமாகுது!!

டாடா சன்ஸ் (Tata Sons), இந்தியா மட்டுமின்றி உலகளவில் மிக பெரும் தனியார் குழுமங்களுள் ஒன்று. சமீபத்தில் மரணமடைந்த ரத்தன் டாடா கட்டியெழுப்பிய மாபெரும் கோட்டை. குண்டூசி தயாரிப்பதில் இருந்து பெரிய, பெரிய விமானங்களை உருவாக்குவது வரையில், டாடா சன்ஸ் குழுமம் செய்யாத வேலையே கிடையாது. விமான துறையை பொறுத்தவரையில், டாடா சன்ஸ் குழுமத்தால் நிறுவப்பட்ட ஏர்லைன், விஸ்தாரா (Vistara) ஆகும். கடந்த சில வருடங்களாக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவரும் விஸ்தாரா ஏர்லைன் விரைவில் ஏர் இந்தியா உடன் இணைய உள்ளது.

இதனால், ஏற்கனவே விஸ்தாரா ஏர்லைனை பயன்படுத்தியவர்கள் மீண்டும் ஒருமுறை கடைசியாக பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விஸ்தாரா ஏர்லைனில் விமான சேவை நவம்பர் 11ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. டாடா சன்ஸ் குழுமத்தில் இருந்து சற்று பிரீமியம் தரத்திலான ஏர்லைன் சர்வீஸை வழங்கக்கூடிய ஏர்லைன் நிறுவனமாக விஸ்தாரா உள்ளது.

vistara and air india merger

இண்டிகோ விமானத்தை காட்டிலும், விஸ்தாரா விமானத்தின் உட்புற கேபின் எந்த அளவிற்கு பிரீமியம் தரத்தில் உள்ளது என்பதை சில வாரங்களுக்கு முன் நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். இருப்பினும், பிரபலமான ஏர் இந்தியா ஏர்லைன் உடன் இணைந்து இந்தியாவில் உருவாக்கப்படும் விமான என்ஜினை உலக தரத்தில் ஏர்லைனாக கவனத்தை பெற வைக்க இந்த கூட்டணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏர் இந்தியா உடன் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 12ஆம் தேதி விஸ்தாரா ஏர்லைன் இணைக்கப்பட உள்ளது. இதன்படி, விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியாவின் விமானங்களுடன் இணைய உள்ளன. இதனால், 12ஆம் தேதியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன் விமானத்தில் டிக்கெட் புக் செய்ய விரும்புபவர்கள் ஏர் இந்தியா இணையத்தள பக்கத்தை தொடர்புக் கொள்ள வேண்டியிருக்கும்.

இதன் விளைவாக, விஸ்தாரா விமானங்களின் பெயர்கள் மற்றும் பெயிண்ட் மாற்றப்படுமே தவிர்த்து, உட்புற கேபின் அலங்கரிப்புகளிலும், பயண சவுகரியத்திலும் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது. விஸ்தாரா விமானங்களின் பெயர்கள் ஏஐ 2XXX-ஆக மாற்றப்பட உள்ளன. உதாரணத்திற்கு, டெல்லி- மும்பை இயக்கப்படும் விஸ்தாரா விமானத்தின் பெயர் தற்சமயம் யுகே955 ஆக உள்ளது. இது ஏஐ 2955 என மாற்றப்பட உள்ளது.

விஸ்தாரா ஏர்லைன் சேவையை பயன்படுத்தி பெற்று வைத்திருக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ஃப்ளையிங் ரிட்டர்ன்ஸ் ஆஃப் ஏர் இந்தியாவில் நவம்பர் 12 முதல் பயணிகள் பெறலாம். இதுகுறித்து விஸ்தாரா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் மிகப்பெரிய அடிக்கடி பறக்கும் திட்டமான மஹாராஜா கிளப்பாக மாறுவதற்கு ஏர் இந்தியாவின் ஃப்ளையிங் ரிட்டர்ன்ஸ் திட்டத்துடன் கிளப் விஸ்தாரா இணையவிருப்பதால், 2024 நவம்பர் 10 மாலை 4 மணிக்கு பின், உங்கள் க்ளப் விஸ்தாரா கணக்கை அணுக முடியாது.

இந்த நேரத்திற்கு பிறகு உங்கள் கிளப் விஸ்தாரா கணக்கில் உள்நுழைய முடியாது. மெட்ரோ உரிமைக் கோரல்களை ஆன்லைனில் சமர்பித்து, விஸ்தாராவுடன் நீங்கள் மேற்கொண்ட விமான பயணத்திற்கான சிவி புள்ளிகளை நவம்பர் 10ஆம் தேதிக்கு முன் பெறுமாறு பரிந்துரைக்கிறோம். அவ்வாறு பெற முடியவில்லை என்றால், உங்கள் க்ளப் விஸ்தாரா கணக்கில் இருந்து உங்கள் முந்தைய பரிவர்த்தனைகளின் பதிவை பதிவிறக்கம் செய்ய நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

விஸ்தாராவில் உள்ள அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா கவனிக்க உள்ளது. இந்தியாவிற்குள் மற்றும் இந்தியாவிற்கு வெளியே என மொத்தம் 50 வழித்தடங்களை விஸ்தாரா தற்சமயம் கவனிக்கிறது. ஒவ்வொரு நாளும் 300க்கும் அதிகமான விமானங்கள் சென்று வருகின்றன. இந்த விமான போக்குவரத்துக்கு 53 ஏர்பஸ் ஏ320 நியோ, 10 ஏர்பஸ் ஏ321 நியோ மற்றும் 7 போயிங் 787-9 ட்ரீம்லைனர் உள்பட மொத்தம் 70 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா க்ரூப்பின் கீழ் தான் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா செயல்படுகின்றன. சொந்த நிறுவனங்களே ஒன்றுக்கு ஒன்று போட்டியாக இருப்பதை டாடா க்ரூப் விரும்பவில்லை. இதனால்தான், விஸ்தாரா ஏர்லைனை ஏர் இந்தியாவை காட்டிலும் கொஞ்சம் காஸ்ட்லீயானதாக டாடா கட்டமைத்தது. இருப்பினும், மாறிவரும் மாடர்ன் உலகில் விஸ்தாரா ஏர்லைனையும் பயணிகள் நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனையடுத்தே இரண்டையும் ஒன்றாக இணைக்கும் முடிவுக்கு டாடா க்ரூப் வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2024, 12:09 [IST]
English summary
Vistara and air india merger last flight on november 11 check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+