2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிறுவனம் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இரு விதமான விருதுகள் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. இதுகுறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் விமான போக்குவரத்து நிறுவனம் விஸ்டாரா (Vistara). இந்நிறுவனம் விமான போக்குவரத்து துறையின் இரு சிறப்பு விருதுகளை வென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலை சிறந்த விமான நிறுவனம் மற்றும் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் சிறந்த விமானப் பணியாளர்களைக் கொண்ட நிறுவனம் என இரு முக்கியமான விருதுகளையே விஸ்டாரா பெற்றிருக்கின்றது.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

இதுமட்டுமின்றி, 2021ம் ஆண்டிற்கான மிக சிறந்த தூய்மையான கேபினைக் கொண்ட விமான சேவை நிறுவனம் என்ற புகழையும் விஸ்டாரா சூடியிருக்கின்றது. உலகின் முன்னணி 350 விமான நிறுவனங்களின் தர வரிசை பட்டியலில் விஸ்டாரா 28ம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

கடந்த 2019ம் ஆண்டில் இதே நிறுவனம் 69வது இடத்தைப் பிடித்திருந்தது. இதற்கு முன்னதாக 2018ம் ஆண்டில் 86ம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது மாபெரும் வளர்ச்சியாக மறு ஆண்டிலேயே விஸ்டாரா 28வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. இந்த விருதானது பயணிகள் இடையே கேட்டறியப்பட்ட கருத்து கணிப்பின் வாயிலாக வழங்கப்பட்டிருக்கின்றது.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

சுமார் 13 மில்லியன் பயணிகளிடம் செப்டம்பர் 2019 மற்றும் ஜூலை 2021 ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் இக்கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஸ்கைட்ராக்ஸ் எனும் நிறுவனமே பயணிகளிடத்தில் இந்த கருத்து கணிப்பை மேற்கொண்டு தற்போது வெளியிட்டிருக்கின்றது. 'ஸ்கைட்ராக்ஸ் விருதுகள்' 1999ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

பல தரப்பட்ட சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்கு பின்னரே விமான நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டிருக்கின்றது. போலியான கருத்து கணிப்புகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான கருத்து கணிப்புகள் இதில் கணக்கெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

விஸ்டாரா நிறுவனம் டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (எஸ்ஐஏ) ஆகிய இரு நிறுவனங்களின் 51:49 கூட்டிணைவில் இயங்கி வருகின்றது.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

நிறுவனத்தின் விமான போக்குவரத்து சேவையில் 48 ஏர்கிராஃப்டுகள், ஏ320 ஏர்பஸ் 37, மூன்று ஏ321 நியோ ஏர்பஸ், ஆறு போயிங் 737-800என்ஜி மற்றும் இரண்டு போயிங் 787-9 ட்ரீம்லைனர் ஏர்கிராஃப்ட் ஆகிய விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டு இதுவரையில் 28 மில்லியன் வாடிக்கையாளர்கள் பலனடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் எது தெரியுமா?.. இனி அடுத்த பயணத்துக்கான டிக்கெட் இங்கேதான்!

விஸ்டாரா விருதுகள் குறித்து, ஸ்கைட்ராக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எட்வர்ட் பிளேஸ்ட்டின் கூறியதாவது, "இந்த இரண்டு முக்கிய விருதுகளை வென்றதன் மூலம் விஸ்டாரா குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. மிக உயர்ந்த தயாரிப்பு மற்றும் ஊழியர்களின் சேவைத் தரங்களுக்கு அவர்களின் தலைமையை நிரூபித்திருக்கின்றது. 350 விமான நிறுவனங்களில் 28 வது இடத்தைப் பிடிப்பதற்காக விஸ்டாரா உலகளாவிய மதிப்பீடுகளை உயர்த்திருக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் விமானப் பயணம் மிகவும் சாதாரணமானதாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

Source: bloomberg

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vistara awarded best airline and best staff in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X