பழைய காரை விற்க இஸ்ரேல் நாட்டுக்காரர் செய்த புது ஐடியா. அட! இது நல்லாயிருக்கே..!

Written By:

நீங்கள் காரை விற்க நினைத்தால் என்ன செய்வீர்கள்? சில நிறுவனங்களை அனுகுவீர்கள், உங்கள் நண்பர்கள் மூலம் விற்க முயல்வீர்கள் அல்லது அதிகபட்சம் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவீர்கள்.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

இது தான் நம்மில் பலருக்கும் தெரிந்த யுக்தி. இதுவே ஒரு கிராபிக்ஸ் டிசைனர் துறையில் பணிபுரிபவர் தனது பழைய காரை விற்க நினைத்தால் என்ன செய்வார்?

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

மேற்சொன்ன விஷயங்களைத் தான் அவர் பின்பற்றுவார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இல்லை என்பது தான் கீழே நீங்கள் படிக்கவுள்ள சம்பவத்தின் மூலம் தெரியவரும் உண்மை.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் யூஜீன் ரோமென்வெஸ்கி. இவர் அந்நாட்டின் முக்கிய விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞராக உள்ளார்.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

சுசிகி நிறுவனத்தின் எஸ்.யூ.வி மாடலாக விட்டாரா காரை 1996ம் ஆண்டில் வாங்கினார் யூஜீன் ரோமென்வெஸ்கி.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

21 ஆண்டுகளுக்கு பிறகு தனது காரை விற்க நினைத்த அவர். எல்லோரையும் போல பழைய நெறிமுறைகளை பின்பற்றாமல், புதிய விளம்பர யுக்தியை செய்தி காட்டியுள்ளார்.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

யூஜீன் ரோமென்வெஸ்கி அடிப்படையில் ஒரு விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர் என்பதால் தனது சுசிகி விட்டாரா காரை வாங்க நினைப்போருக்காக 2 நிமிட டிரெய்லரை உருவாக்கியுள்ளார்.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

இணையதளங்களில் டிரெண்டிங்காக உள்ள அந்த டிரெய்லர், மிரட்சியை ஏற்படுத்தும் அளவிற்கு தயாராகியுள்ளது.

ஹோண்டா, சுசிகி போன்ற நிறுவனங்கள் கூட தங்களது கார்களை விற்க இதுபோன்ற விளம்பரத்தை உருவாக்கியதில்லை.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

டிரெய்லரில் யூஜீன் ரோமென்வெஸ்கியின் நெருங்கிய நண்பன் என்று அறிமுகமாகும் சுசிகி விட்டாரா கார், அடுத்தடுத்த பிரேமில் பரபரக்கிறது.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

காற்றில் பறக்கவும், தீயில் தாவவும், பனிப் புயலில் பாயவும் ஏதோ ஒரு பெரிய அல்ட்ரா மார்டன் விளம்பரம் போல இதை உருவாக்கியுள்ளார் யூஜின்.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

ஒரு சாதரண விளம்பரம் போல இந்த டிரெய்லர் தொடங்கினாலும், காரின் வேகத்திற்கு ஏற்ப பாய்ந்து ஓடும் மானைப்போலவும், சட்டென பாயும் சிறுத்தையை போலவும் டிரெய்லர் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

இதுபோன்ற, காரின் திறனை காட்டக்கூடிய பிரேமில் சிறுத்தை மான்களும் இடம்பெறுகிறது. இவற்றை விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் செய்து காட்டியுள்ளார் யூஜின் ரோமென்வெஸ்கி.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

காரின் திறனை மேலும் விளம்பரப்படுத்தும் விதத்தில் பல ஹாலிவுட் படங்களின் மிரட்சியான காட்சிகளையும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கொண்டு டிரெய்லரில் இணைத்துள்ளார் யூஜின்.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

ஜூராசிக் பார்க் படத்தில் டி-ரெக்ஸ் டைனோசர் சண்டையிடும் காட்சிகள், மேட் மேக்ஸ் ஃபூயிரி ரோடு படத்தில் இடம்பெறும் சேஸிங் காட்சிகள் ஆகியவற்றை இணைத்து மிரட்டலாக இந்த டிரெய்லர் தயாராகியுள்ளது.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

டிரெய்லரில், ஒரு கட்டத்தில் கடலுக்கு அடியில் செல்லும் சுசிகி விட்டாரா கார் ஒரே பாய்ச்சலில் சந்தரமண்டலத்தை அடைவது போன்ற காட்சியில் யூஜினின் பணி மிகப் சிறப்பாக உள்ளது.

இவை எல்லாம் ஒரு ஹாலிவுட் பட தொழில்நுட்பங்களுக்கு சவால்விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

பிறகு பூமியில் தரையிறங்கும் கார், தீ போல பாய்ந்து ஒரு கார் ஷெட்டிற்குள் சென்று நிற்க. காரை திறந்து இறங்கு வருகிறார் உரிமையாளர் யூஜின் ரோமென்வெஸ்கி.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

பிறகு பிரேமில் தோன்றும் அவர், காரின் சாவியை காட்டி வேண்டுமா என்று கேட்கிறார். அத்துடன் இந்த டிரெய்லர் நிறைவுபெறுகிறது.

பழைய காரை விற்கவேண்டுமா? இவரை பின்பற்றுங்கள்..!

ஒரு காரை விற்க யூஜின் உருவாக்கிய இந்த டிரெய்லர் இணையதளங்களில் பார்வையாளர்களை குவித்து வருகிறது. பல வலைதள வாசிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளை GIF-ஆக மாற்றி டிரெண்டிங்கும் செய்து வருகின்றனர்.

தனது சுசிகி விட்டாரா காரை விற்பதற்கான யூஜீன் ரோமென்வெஸ்கி உருவாக்கிய டிரெய்லரை பாருங்கள் உங்களுகே சிலிரிப்பை தரும்...

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Visual Effects Artist Creates Breathtaking Trailer To Sell His Old Car. Click for detials...
Story first published: Thursday, May 11, 2017, 16:19 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos