அவ்வளவு பெரிய காரை கேட்டதும் தூக்கி கொடுத்துட்டாரு... ரஷ்ய அதிபருக்கு பெரிய மனசுங்க - காரின் சிறப்பம்சங்கள்!!

உலகின் முக்கியமான அரசியல்வாதிகள் அவர்களின் பாதுகாப்பு கருதி மிகவும் லக்சரியான பாதுகாப்புமிக்க கார்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ரஷ்ய அதிபரின் கார் இன்னும் பாதுகாப்புமிக்கதாக இருக்கும் என்பதை பற்றி நான் கூற வேண்டியதில்லை. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது விலையுயர்ந்த மற்றும் பாதுகாப்புமிக்க அருஸ் செனெட் (Aurus Senat) காரை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். ரஷ்யாவின் ரோல்ஸ்-ராய்ஸ் என அழைக்கப்படும் இந்த காரை பற்றியும், எதற்காக திடீரென இந்த அரசியல் பாராட்டு என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போர் உள்பட உலகின் மிக முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் இடையேயான சமீபத்திய சந்திப்பு உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. முக்கியமாக, அமெரிக்க அரசாங்கம் இந்த சந்திப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளவற்றை உற்று கவனிக்க ஆரம்பித்துள்ளது.

vladimir putin gifts aurus senat

புதின் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான இந்த சந்திப்பு வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஓர் கார் பிரியர் ஆவார். தன் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் கொண்டுவரும் வாகனங்களை ஆர்வத்துடன் இவர் பார்ப்பதை சிலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில், விளாடிமிர் புதின் வந்த அருஸ் செனெட் காரையும் ஆர்வமாக பார்த்துள்ளார்.

இதனை அடுத்து, சந்திப்பின் நினைவு பரிசாக இந்த காரை வைத்துக் கொள்ளுங்கள் என அருஸ் செனெட்டை புதின் வழங்கியுள்ளார். அருஸ் செனெட் ஆனது ரஷ்ய அதிபரின் அலுவலக கார் ஆகும். இந்த காரை அருஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இங்கிலாந்தில் செயல்படும் ரோல்ஸ்-ராய்ஸை போன்று ரஷ்யாவிற்கென ஒரு லக்சரி கார் நிறுவனம் இருக்க வேண்டும் என விளாடிமிர் புதினின் ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்டதே அருஸ் மோட்டார்ஸ் ஆகும்.

உலகின் மிக இளம் லக்சரி கார் நிறுவனம் அருஸ் மோட்டார்ஸ் ஆகும். 2018ஆம் ஆண்டில் இருந்துதான் இந்த நிறுவனம் கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. ஆனால், முதல் 3 வருடங்களுக்கு அதாவது 2021ஆம் ஆண்டு வரையில் அருஸ் உருவாக்கிய கார்கள் அதிபர் உள்பட அரசாங்க பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதன்பின்பே அருஸ் செனெட் கார் பொது மக்களின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

ரஷ்யாவின் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமோட்டிவ் என்ஜின்களுக்கான மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் அருஸ் மொட்டார்ஸ் செயல்படுகிறது. 2018ஆம் ஆண்டில் செனெட் உள்பட மொத்தம் 3 வாகனங்களை அருஸ் மோட்டார்ஸ் முதல்முறையாக அறிமுகம் செய்தது. செனெட், செனெட் லாங் மற்றும் செனெட் லிமௌசைன் என 3 விதமான வெர்சன்களில் அருஸ் செனெட் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதிபரின் காராக பயன்படுத்தும் அளவிற்கு அருஸ் செனெட் முழுவதும் ஆயுதங்களை தாங்கியது ஆகும். இந்த லக்சரி செடான் காரில் 4.4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 590 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை இத்தாலியை சேர்ந்த போர்ஷேவின் உதவியுடன் அருஸ் மோட்டார்ஸ் உற்பத்தி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், போர்ஷே உடன் அருஸ் மோட்டார்ஸ் இணைந்து செயல்படுவதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு வழங்கப்பட்டுள்ள அருஸ் செனெட் காரில் என்னென்ன மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது தெரியவில்லை. ரஷ்ய அதிபர் பயன்படுத்தும் கார் என்பதால், முழுவதும் பாதுகாப்புமிக்கதாக இந்த கார் இருக்கும் என்பது உறுதி.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரு நாடுகளும் அருகருகே அமைந்திருப்பதினாலேயே ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான உறவு வலுவாக உள்ளது. இதனை மீண்டும் உலகிற்கு காட்டும் விதமாகவே இந்த சந்திப்பு அரங்கேறியுள்ளது. இருப்பினும், என்னதான் நெருங்கிய நட்பாக இருந்தாலும், அரசியலில் வேறொரு நாட்டின் தலைவர் வழங்கிய காரை இன்னொரு நாட்டின் தலைவர் பயன்படுத்த உள்ளது ஆச்சிரியமான விஷயமாகும். ஏனெனில், நாட்டின் அதிபருக்கான பாதுகாப்பை மிக முக்கியமானதாக பார்ப்பார்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 15:34 [IST]
English summary
Vladimir putin gifts aurus senat car to north korea kim jong un check all details here
மேலும்... #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+