இந்த காரை எடுத்துட்டு தனியா போருக்கே போகலாம் போல! ஏகப்பட்ட ஆயுதங்களுடன் தயாராகும் ரஷ்ய அதிபரின் கார்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பயணம் செய்வதற்காக என்ற சொகுசு மற்றும் ஆயுதம் எழுதிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த காரில் பல்வேறு அப்டேட்டுகள் செய்யப்பட்டு ரஷ்ய அதிபருக்கான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இந்த கார் உருவாக்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஜெர்மன் பிராண்டுகளான மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய நிறுவனங்களின் கார்கள் எல்லாம் உலகின் பாதுகாப்பான கார்கள் என்ற பெயரைப் பெற்ற கார்களாக இருக்கிறது. உலகில் பல்வேறு தலைவர்கள் இந்த பிராண்ட் கார்களை தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த பிராண்டு கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் நம்பகத் தன்மையுடன் இருக்கும் என நினைக்கிறார்கள்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டை சேர்ந்த ஆவுரஸ் செனட் என்ற காரை தான் தனக்கு பாதுகாப்பான காராக இருக்கும் என நம்புகிறார். இந்நிலையில் இந்த காரை தனக்கு ஏற்ற போல ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக மாற்ற திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவில் டொயோட்டா நிறுவனம் நடத்தி வந்த செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் என்ற பகுதியில் உள்ள ஆலையில் ரஷ்ய அதிபரின் இந்த காரை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் போரின் போது ரஷ்யாவில் இருந்து டொயோட்டா நிறுவனம் வெளியேறியது. அப்போது இந்த ஆலையை ரஷ்ய நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டு வந்து விட்டது.

இந்த ஆவுரஸ் செனட் என்பது சோவியத் வரலாற்றில் உள்ள புதுமையான வெர்ஷன் கொண்ட லிமோசைன் ரக காராகும். இந்த கார் உலகில் மற்ற எந்த கார்களை விடவும் பாதுகாப்பான காராக வடிவமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஆவுரஸ் மோட்டார் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரஷ்யாவில் டாடாஸ்டாண்ட் என்ற பகுதியில் ஆலையை அமைத்து தனது வாகனங்களை தயாரிக்க துவங்கி விட்டது.
ஆனால் ரஷ்ய அதிபருக்காக தனித்துவமாக தயாரிக்கப்படும் இந்த ஆவுரஸ் செனட் கார் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் என்ற பகுதியில் உள்ள இதற்கு முன்னர் டொயோட்டா நிறுவனம் நடத்தி வந்த ஆலையில் தான் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலையை தற்போது நேமி என்ற நிறுவனம்தான் நடத்தி வருகிறது. நேமி மற்றும் ஆவுரஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த காரை தயாரிக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவில் இருந்து பல்வேறு பிராண்டுகள் தங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிய நிலையில், ரஷ்யாவில் உள்ள லோக்கல் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அந்த தயாரிப்பு ஆலையை வாங்கிக் கொண்டு அதில் தங்கள் வாகனங்களை தயாரிக்க துவங்கி விட்டனர். ஆவுரஸ் என்ற நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்க திட்டமிடப்படும் நிறுவனம் இல்லை0 முக்கியமாக இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களை பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்நிறுவனம் வெறும் 40 கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபருக்காக என்ற காரை லிமோசைன் காராக மாற்றி அதில் கஷ்டமைஸ் செய்யப்பட்ட பல்வேறு ஆப்ஷன்களை கொடுத்து அதிகமான பாதுகாப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய காராக இந்த காரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆவுரஸ் செனட் கார் கடந்த 2018ம் ஆண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்டது. இந்த கார் உருவாக்கப்படும் போதே ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் என்ற சொகுசு காரின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராக இருந்தது. இந்த கார் 5631 மிமீ நீளமும், 2700 கிலோ எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை தான் ரஷ்ய அதிபருக்காக தனித்துவமாக மாற்றி வடிவமைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி ரஷ்ய அதிபருக்காக தயாரிக்கப்படும் இந்த கார் 6700மிமீ நீளம் கொண்ட காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் பொருத்தப்படும் கண்ணாடிகள் எல்லாம் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடிகளாக உருவாக்கப்படுகின்றன. மேலும் இந்த காரின் அடிப்பகுதி முழுவதும் காருக்கு அடியில் பெரிய வெடிகுண்டு வெடித்தாலும் காருக்குள் இருப்பவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத அளவுக்கு தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்க உள்ளனர்.
மேலும் இந்த கார்களின் டயர்கள் எந்த நேரத்திலும் பஞ்சர் ஆகாத படி ரன் ஃபிளாட் ரப்பர் டயர்களாக உருவாக்கப்படுகின்றன. அதாவது காருக்குள் வழக்கமாக காற்று இருக்கும் அந்த காற்று பஞ்சரானாலும் கார் நிற்காமல் செல்வதற்கு அனைத்து அம்சங்களும் இருக்கும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த காருக்குள் பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் பொருத்தப்படுகின்றன.
எந்தெந்த இடங்களில் ஆயுதம் இருக்கும் என்பது மிக ரகசியமான விஷயமாக பாதுகாக்கப்படுகிறது. இது அந்த காரின் ஓட்டுனர், அதிபர் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இந்த தகவல் வெளியில் தெரிந்தால் அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்திற்காக இதை வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார்கள்.
இது போக இந்த காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு தேவைப்படும் நேரங்களில் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கவும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. வரிசையாக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆயுதம் என இருப்பதால் இந்த காருக்குள் சொகுசு வசதி எதுவும் இருக்காது என நீங்கள் நினைக்க வேண்டாம்.
இந்த கார் உட்புறம் முழுவதும் சொகுசாக சிறப்பான வடிவமைப்பு கொண்ட காராக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இரண்டு இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, பெரிய டிஎஃப்டி ஸ்க்ரீன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரிய இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க சீட்டிலும் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 6.6 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 850 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த கார் குறித்த பல்வேறு தகவல்கள் மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன. சில சின்ன சின்ன தகவல் கூட அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் அதை அவர்கள் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications









