விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

Written By:

உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் சூழ்ந்திருக்கும் தலைவரான புதினுக்கு உலகின் அதிசிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், அவருக்கு நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட புதிய கார் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட உள்ளது. இதையடுத்து, அவர் இதுவரை பயன்படுத்தி வந்த அதிகாரப்பூர்வ லிமோசின் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

1995ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட லிமோசின் ரக கார் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது. 1999ம் ஆண்டு ரஷ்யாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு 2000ம் ஆண்டில் அந்நாட்டு அதிபராக பதவியேற்ற புதினின் அதிகாரப்பூர்வ காராக இது மாறியது.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

பல ஆண்டுகளாக விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ காராகவும், விருப்பமான மாடலாகவும் இந்த கார் விளங்குகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் கார்டு மாடல்தான் இது. குண்டு துளைக்காத கண்ணாடிகள் உள்பட பல்வேறு விசேஷ பாதுகாப்பு வசதிகள் கொண்டது இந்த லிமோசின் கார்.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

4.5 டன் எடையுடைய இந்த கார் W-140 தலைமுறை எஸ் க்ளாஸ் காரின் அடிப்படையில் நீளம் அதிகரிக்கப்பட்ட லிமோசின் ரக காராக கட்டமைக்கப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விசேஷ பிரிவினரால் இந்த கார் கவச வாகனம் போன்று பாதுகாப்பு வசதிகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

இந்த கார் B6/B7 என்ற உயர் பாதுகாப்பு தரத்துடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, காரின் முன் வரிசை இருக்கைகளும், பின் வரிசை இருக்கைகளும் தடுப்பு மூலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

பின்புறத்தில் எதிரெதிர் திசையில் தலா இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மிக சொகுசான இருக்கைகள், பொழுதுபோக்கு வசதிகள், ரசாயன தாக்குதல்களிலிருந்து பயணிகளை காக்கும் விசேஷ தடுப்பு வசதிகளும் உள்ளன.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

4.5 டன் எடையுடைய இந்த காரை செம்மையாக செலுத்துவதற்கு வசதியாக 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 394 குதிரைசக்தி திறனை வழங்க வல்லது. அந்த காலக்கட்டத்தின் மிக சக்திவாய்ந்த கார் எஞ்சினாக இது கருதப்படுகிறது. அவசர காலத்தில் காரை வேகமாக செலுத்துவதற்கு இந்த எஞ்சின் போதிய சக்தியை வழங்கும்.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

வாங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நெருங்கி விட்ட நிலையிலும், இந்த கார் வெறும் 15,500 மைல் தூரம் மட்டுமே ஓடியிருக்கிறது. சிறந்த பராமரிப்பில் இருந்ததாலும், 15,500 மைல்கள் மட்டுமே ஓடியிருப்பதால், சிறப்பான கண்டிஷனில் இருக்கிறது.

விற்பனைக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்திய லிமோசின் கார்... !!

வாங்கிய தருணத்தில் இந்த கார் 5 லட்சம் டாலர்கள்[இந்திய மதிப்பில் ரூ.3.40 கோடி] விலை மதிப்பு கொண்டதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த காருக்கு 1.3 மில்லியன் டாலர் [ரூ.9.21 கோடி] விலை மதிப்புக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. புதின் பயன்படுத்திய கார் என்ற பெருமைக்காக இந்த கார் தற்போது இரு மடங்கு கூடுதல் விலை கொண்டதாக இருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The 1995 Mercedes-Benz S600 Pullman Guard is up for sale in Moscow. The vehicle used by Vladimir Putin costs a whopping $1.3 million.
Story first published: Thursday, December 29, 2016, 12:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark