புதினின் புதிய லிமோ கார்: புகைப்படங்கள் வெளியானது

Written By:

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தற்போது மெர்சடிஸ் எஸ்-கிளாஸ் பென்ஸ் காரை பயன்படுத்தி வருகிறார், இது மாற்றப்பட்டு விரைவில் அவருக்கு 'கோர்டேஜக்' என்ற பெயரில் தயாராகியுள்ள புதிய லிமோ கார் வழங்கப்படவுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்காக தயாராகி வரும் லிமோ கார்

இந்த வருடம் இறுதியில் புதிய லிமோ கோர்டேஜக் காரை புதின் பயன்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்யாவின் பனிக்கட்டிகள் நிறைந்த சாலைகளில் காருக்கான சோதனை ஓட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

ரஷ்ய அதிபர் புதினுக்காக தயாராகி வரும் லிமோ கார்

புதினின் புதிய லிமோ காரை, அங்கு இயங்கும் முன்னணி ஊடகமான ஜி.டி. ஸ்பிரிட் உளவுப்பார்த்து, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு இயங்கக்கூடிய வகையில் லிமோ கோர்டேஜக் காருக்கான திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.டி. ஸ்ப்ரீட் ஊடகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்காக தயாராகி வரும் லிமோ கார்

வாகனப்போகுவரத்து மற்றும் தானியங்கி இயந்திரங்களுக்காக 'NAMI' என்ற பெயரில் ரஷ்யாவில் இயங்கி வரும் அரசு சார்ந்த நிறுவனம் தான் கோர்டேஜக் லிமோ காரை வடிவமைத்துள்ளது. மேலும் இதற்கான எஞ்சினை போர்சே கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்காக தயாராகி வரும் லிமோ கார்

எஞ்சினின் உருவத்தோற்றம், செயல்திறன் குறித்து எந்த தகவலையும் இதுவரை ரஷ்யா வாகனப் போக்குவரத்து ஆராய்ச்சி மையம் வெளியிடவில்லை. ஆனால் அதிபர் புதினின் இந்த புதிய லிமோ காரில் ட்வின்-டர்போ வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கலாம் என்ற செய்திகள் சொல்லப்படுக்கின்றன.

ரஷ்ய அதிபர் புதினுக்காக தயாராகி வரும் லிமோ கார்

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினின் இந்த புதிய லிமோவில் இருக்கக்கூடிய மற்றோரு சிறபம்சம் என்றால், புதின் பயன்படுத்த தொடங்கிய பிறகு, கோர்டேஜக் லிமோ கார் 5000 எண்ணிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்காகவும் தயாரிக்கப்படவுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்காக தயாராகி வரும் லிமோ கார்

கோர்டேஜக் லிமோ காருக்கு பிறகு, காம்ரேட் என்ற பெயரில் எஸ்.யூ.வி லிமோ கார் மாடலை தயாரிக்க ரஷ்யாவின் வாகனப் போக்குவரத்து ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. காம்ரேட் எஸ்.யூ.வி லிமோ கார் 2020ம் ஆண்டின் இறுதியில் அதிபர் புதினின் பயன்பாட்டிற்கு வரும்.

ரஷ்ய அதிபர் புதினுக்காக தயாராகி வரும் லிமோ கார்

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கான லிமோ கார் போலவே, 'காடிலாக் பீஸ்ட்' என்ற பெயரில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரெம்பிற்கான கார் தயாரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தவுள்ள இந்த 'காடிலாக் பீஸ்ட்'வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
The next Russian Presidential limousine has been spotted testing in production-ready guise as it prepares to keep Vladimir Putin safe in the future.
Story first published: Friday, March 31, 2017, 11:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark