டிஎஸ்ஜி கியர்பாக்ஸில் ஏற்பட்ட கோளாறுக்கு சிந்தடிக் ஆயில்தான் காரணமா! ரூ. 5.8 லட்சம் பில் போட்ட சர்வீஸ் மையம்!

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), அதன் கார் மாடல்களில் வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கியர்பாக்ஸ் தேர்வுகளில் டிஎஸ்ஜி (DSG)-யும் ஒன்றாகும். நீண்ட காலமாக நிறுவனத்தால் வழங்கப்படும் சிறப்பான கியர்பாக்ஸ் தேர்வாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்தியாவிலும் ஃபோக்ஸ்வேகனின் இந்த கியர்பாக்ஸ் தேற்வு சற்று புகழ் பெற்றதாகக் காட்சியளிக்கின்றது.

ஆனால், என்ன இந்த கியர்பாக்ஸை புகழ்ந்து பாடுபவர்களை போலவே இகழ்ந்து பாடுபவர்களும் உள்ளனர். அதிலும், சமீபத்திய ஓர் சம்பவம் மிகப் பெரிய ஷாக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட ஃபோக்ஸ்வேகன் அமியோ காரை பயன்படுத்தி வரும் நபர், இந்த கியர்பாக்ஸ் தேர்வால் மிகப் பெரிய சிக்கலில் தான் சிக்கி இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தில் தன்னுடையே வேதனையைப் பகிர்ந்திருக்கின்றார்.

Volkswagen dsg failure bill with car

கியர்பாக்ஸில் ஏற்பட்ட ஓர் சிக்கலே அவருக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றது. இதைவிட பெரிய தலைவலியாக, இந்த பிரச்னையை சரி செய்ய அவருக்கு ரூ. 5.8 லட்சத்திற்கான பில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வேதனையை அமியோ காரின் உரிமையாளர்கள் தற்போது பகிர்ந்திருக்கின்றார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. "கியர்பாக்ஸில் ஏற்பட்ட பிரச்னைக்கு இவ்ளோ பெரிய தொகை கட்டணமா" என்றே பலரை இந்த சம்பவம் வாயை பிளக்கச் செய்திருக்கின்றது. காரின் உரிமையாளர் முதலில் கியர்பாக்ஸில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்திருக்கின்றார்.

Volkswagen dsg failure

குறிப்பாக, கியரை 2 மற்றும் 3 இடைப்பட்ட நிலையில் இருந்து அப்ஷிஃப்ட் மற்றும் டவுண் ஷிஃப்ட் ஆகியவற்றைச் செய்யும்போது அதிக சத்தம் வருவதை உணர்ந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் சிக்கல் குறித்து ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் மையத்தில் கூறி காரை சர்வீஸ் விட்டிருக்கின்றார்.

அங்கு இரண்டு நாட்களாக வைத்து காரை சோதனை செய்த சர்வீஸ் மையம், அமியோவின் டிஎஸ்ஜி கியர்பாக்ஸில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகக் கண்டறிந்திருக்கின்றது. இதனை சரி செய்யவே சரி செய்யவே ரூ. 5.5 லட்சம் வரை செலவாகும் சர்வீஸ் மையம் தெரிவித்து இருக்கின்றது.

Dsg failure bill

ஆனால் கியர்பாக்ஸின் இந்த பாகத்தில் கோளாறு ஏற்பட்டு இருக்கின்றது என்பதை சர்வீஸ் மையம் தெளிவாகக் குறிப்பிடவில்லை. டிஎஸ்ஜி டிக்யூ200 வகை கியர்பாக்ஸே ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் டிரை கிளட்ச் கியர்பாக்ஸ் ஆகும். மேலும், இந்த கார் ஆறாண்டுகள் பழைய மாடல் என கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே கார் எஞ்ஜின் செயலிழந்திருக்கின்றது. இதற்கு அந்த காரில் கியர்பாக்ஸில் சிந்தடிக் ஆயிலை பயன்படுத்தியதே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. சிந்தடிக் ஆயிலில் சல்பர் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது அதிக சூடாகும்போது மின்னணுவியலை உருவாக்கும். இந்த செயலே எஞ்ஜின் கோளாறாக காரணமாக அமைந்திருக்கின்றது.

ஆம், சிறிய ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு கியர்பாக்ஸின் கிளட்ச் பாக்ஸை அது துண்டித்து இருக்கின்றது. இந்த நிலையே கியரை மாற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோன்ற சிக்கலைக் காரணம் காட்டியே ஃபோக்ஸ்வேகன் கார் பயன்பாட்டாளர்கள் பலர் மினரல் அடிப்படையிலான ஆயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அமியோ கார் பயன்பாட்டாளரும் இதை செய்திருந்தால் அதன் கியர்பாக்ஸில் இந்த அளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது கார் ஆர்வலர்கள் சிலர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த அறிவுரை ஸ்கோடா நிறுவன கார்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருவரும் இணைந்தே கார்களை தயார் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலர் எஞ்ஜினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே பிரீமியம் ஆயிலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதுவே சில வாகனங்களில் பிரச்னையாக வருகின்றது என்பது கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஓர் ஆயிலை மாற்றும் முன் மெக்கானிக் அல்லது கார் உற்பத்தியாளர்களின் அட்வைஸை அணுகுவது சிறந்தது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2023, 11:14 [IST]
English summary
Volkswagen ameo user got bill rs 5 8 lakh for replacing dsg
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X