தந்தை- மகன் ஒரு காரையும் வாங்காம விட்றது இல்ல! மொத்த விஐபிகளும் வாங்க துடிக்கும் காரை வாங்கி போட்டாச்சு!!
துல்கர் சல்மான் (Dulquer Salmaan), பிரபல மலையாள நடிகர் என்பதும், முன்னணி நடிகர் மம்முட்டி (Mammoooty) அவர்களின் மகன் என்பதும் நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். நடிப்பது மட்டுமின்றி, தந்தையை போன்று கார் & பைக்குகளை வாங்குவதையும் துல்கர் சல்மான் மிகவும் விரும்பக்கூடியவர். மார்க்கெட்டுக்கு புதியதாக எதாவது பிரபலமான கார் வந்தால், அதனை இந்த தந்தை-மகன் ஜோடி எப்படியாவது உடனே வாங்கிவிடுவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். இதற்காகவே, '369' என்கிற பெயரில் ஒரு கேரேஜை இவர்கள் வைத்துள்ளனர். பிரம்மாண்டமான இந்த கேரேஜில் பழமையான கிளாசிக் கார்களில் இருந்து, லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வரையில் உள்ளன.
ஆனால், சமீபத்தில் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) காரை இன்னும் இந்த நட்சத்திர தந்தை-மகன் வாங்கவில்லையே என்கிற குறை இருந்து வந்தது. ஏனெனில், உலகளவில் பிரபலமான கார்களுள் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஒன்றாகும். இதன் செயல்திறன்மிக்க ஜிடிஐ வெர்சன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அது இன்னும் மம்முட்டி- துல்கரின் 369 கேரேஜில் இணையவில்லையா என ஆச்சிரியமாக இருந்தது.

எப்படியிருந்தாலும் கூடிய விரைவில் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை வாங்கி விடுவார்கள் என நாம் எதிர்பார்த்ததை போலவே இவர்களது 369 கேரேஜில் பிராண்ட்-நியூ கோல்ஃப் ஜிடிஐ கார் இணைந்துள்ளது. இதுதொடர்பான படங்களை சம்பந்தப்பட்ட 369 கேரேஜின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் மம்முட்டியின் குடும்பத்தில் ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ (Polo GTI) கார் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மற்றொரு ஜிடிஐ காராக கோல்ஃப் ஜிடிஐ காரை சிவப்பு நிறத்தில் இவர்கள் வாங்கியுள்ளனர். இதனை 'கிங்ஸ் ரெட் மெட்டாலிக்' (Kings Red Metallic) என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அழைக்கிறது.

மம்முட்டி- துல்கர் சல்மானின் கேரேஜ் 369 என அழைக்கப்படுவதற்கு காரணம், இந்த கேரேஜில் உள்ள பெரும்பான்மையான கார்களை இந்த நடிகர்கள் தங்களுக்கு பிடித்த '369' என்கிற நம்பர் பிளேட் உடன் வைத்துள்ளனர். இந்த வகையில், தற்போது புதியதாக இணைந்துள்ள கோல்ஃப் ஜிடிஐ காருக்கும் விரைவில் 369 என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் (Fancy Num Plate) வழங்கப்படும்.
போலோ ஜிடிஐ கார் மட்டுமின்றி, பழைய தலைமுறை கோல்ஃப் ஜிடிஐ காரையும் இந்த தந்தை- மகன் வைத்துள்ளனர். இந்த வகையில் பார்த்தால், பழைய ஜென்ரேஷன் கோல்ஃப் ஜிடிஐ மற்றும் நியூ ஜென்ரேஷன் கோல்ஃப் ஜிடிஐ என இரு கார்களும் இவர்களிடம் உள்ளது. மலையாள சினிமா உலகில் கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கிய முதல் பிரபலங்கள் மம்முட்டி- துல்கர் சல்மான் அல்ல.

இதற்கு முன்னர் ஏற்கனவே, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா (Jayasurya) மற்றும் ஃபகத் ஃபாசில் (Fahadh Faasil) புதிய கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி பெற்று இருந்தனர். இவர்கள் மட்டுமின்றி, பிரபல மலையாள நடிகரும், கேரளாவின் ஒரேயொரு பாஜக எம்பியுமான சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷ் அவர்களும் மூன்ஸ்டோன் கிரே நிறத்தில் கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கி இருந்தார்.
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்திய மார்க்கெட்டில் இது கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த ஜூன் மாதத்தில் துவங்கப்பட்டன. வெறும் 150 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஃபோக்ஸ்வேகன் காரில் 2 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார் ஆனது இந்திய மார்க்கெட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை இந்த காரை சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் போட்டி போட்டு வாங்குவதில் இருந்தே அறிய முடிகிறது. முதற்கட்டமாக 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருப்பினும், இந்த காருக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதால், விரைவில் இந்த 150 என்கிற எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









