சீன வெடிவிபத்து: ஆயிரக்கணக்கான ஃபோக்ஸ்வேகன் கார்கள் கருகி நாசம்!

By Saravana

சீனாவின், தியான்ஜின் நகர துறைமுக சேமிப்புக் கிடங்கில் நடந்த வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் தவிர்த்து, இந்த கோர விபத்தில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறது.

அந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரணக்கான ஃபோக்ஸ்வேகன் கார்கள் தீயில் கருகி நாசமானதால், அந்த நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

பெரும் சேதம்

பெரும் சேதம்

இதுவரை 104 பேர் இந்த விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பல தீயணைப்பு வீரர்களும் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்த ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. அத்துடன், அந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரணக்கான கார்கள் கருகி நாசமானது.

 ஃபோக்ஸ்வேகன் கார்கள்

ஃபோக்ஸ்வேகன் கார்கள்

விசாரணையில் அந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு சொந்தமான கார்கள்தான் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. பல ஆயிரம் கார்களை இந்த விபத்தில் ஃபோக்ஸ்வேகன் இழந்துவிட்டது.

 கார்கள் விபரம்

கார்கள் விபரம்

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, அந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 1,065 டூரக் எஸ்யூவிகள், 114 கோல்ஃப் கார்கள், 391 பீட்டில் கார்கள், 257 டிகுவான் எஸ்யூவிகள், 39 ஸ்போர்ட்ஸ் வேன்கள், 28 மகோட்டன் என்ற பிராண்டில் விற்பனையாகும் பஸாத் கார்கள் மற்றும் 770 ஸ்பெஷல்ஸ் பிராண்டு கார்கள் கருகி நாசமானது தெரியவந்துள்ளது.

முற்றிலும் சேதம்

முற்றிலும் சேதம்

அந்த கார்கள் மீண்டும் சரிசெய்து பயன்படுத்த முடியாத அளவுக்கு முற்றிலும் சேதமடைந்துவிட்டன. பெரும் இடப்பரப்பில் உயிரில்லாமல் நிற்கும் அந்த கார்களை அப்புறப்படுத்துவதே பெரும் வேலையாக அமையும்.

இதர பிராண்டுகள்

இதர பிராண்டுகள்

ஃபோக்ஸ்வேகன் தவிர்த்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேறு பிராண்டு கார்களும், அருகில் இருந்த ரயில் நிலையம் மற்றும் ரயில்களும் இந்த வெடிவிபத்தில் சேதமடைந்துவிட்டன.

ரசாயன வெடிவிபத்து

ரசாயன வெடிவிபத்து

அந்த துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சயனைடு ரசாயன பெட்டிகளிலிருந்துதான் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது. சுமார் 700 டன் சயனைடு அந்த துறைமுகத்தின் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Thousands of brand new Volkswagen cars were completely scorched in the recent explosion in China.
Story first published: Monday, August 17, 2015, 16:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X