யார் பார்த்த வேலைனு தெரியல! காரை கரெக்ட்டா வீடியோ எடுத்து போட்டுட்டாங்க... வீடு தேடி வந்த போலீஸ்காரர்கள்
கார் மாடிஃபிகேஷன் (Car Modification)-களினால் எவ்வளவு ஆபத்துகள் உள்ளன என்பதை நமது தளத்தில் தொடர்ச்சியாக கூறிக்கொண்டு இருந்தாலும், ஒருபக்கம் கார்களை தங்களது விருப்பத்திற்கேற்ப மாடிஃபிகேஷன் செய்துக் கொள்வது ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலர் 'கெத்து' என நினைத்துக் கொண்டு இவ்வாறு செய்கின்றனர். ஆனால், அவர்களுள் பெரும்பாலானவர்கள் விரைவாகவே போலீசாரிடம் சிக்கிவிடுகின்றனர். அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது காரில் எக்ஸாஸ்ட் குழாய் (Exhaust Pipe)-ல் இருந்து நெருப்பு வெளிவரும் வகையில் மாற்றம் செய்துள்ளார். அதன்பின் என்ன நடந்தது என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கார் & பைக்குகளில் இருந்து புகைக்கு பதிலாக நெருப்பு வந்தால் பார்க்க சூப்பராக இருக்கும் என்கிற கற்பனை உலகின் பல்வேறு மக்கள் இடையே பரவலாக உள்ளது. ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் நெருப்பை கக்கும் பைக்கை கதாநாயகன் பயன்படுத்துவது போன்ற காட்சிகளை கொண்டுள்ளன.

ஆனால், அது எல்லாம் சினிமாவுக்கு வேண்டுமாயின் ஒத்துவரும், ஆனால் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) காரில் இருந்து நெருப்பு வெளிவருவது போல மாற்றியுள்ளார். இதனை கண்ட போலீசார் உடனடியாக தங்களது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஓனர் வழக்கமான எக்ஸாஸ்ட் குழாயை நீக்கி, அதற்கு பதிலாக ஆஃப்டர்-மார்க்கெட் எக்ஸாஸ்ட் குழாயை பொருத்தி உள்ளார். இது சாலையில் செல்பவர்களுக்கு அசவுகரியமாக இருந்ததுடன், இந்த போலோ காரை கண்டாலே சாலையில் பலரும் தலைத்தெறிக்க ஓட ஆரம்பித்தனர்.

ஏனெனில், அந்த அளவிற்கு அதிக இரைச்சல் உடன் பின்பகுதியில் நெருப்பை கக்க கூடியதாக இந்த போலோ கார் மாற்றப்பட்டுள்ளது. இதனை அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட கார் ஓட்டியின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று, மாடிஃபை செய்யப்பட்ட போலோ காரை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த போலோ காரில் இருந்து தீப்பொறிகள் வெளியே வருவதை பார்க்க முடிகிறது.
பெங்களூரின் தேவாலய தெருவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மாடிஃபை செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் உரிமையாளரின் பெயர், அர்ஜூன் ஜி.ஷெனாய். பெங்களூரின் ஹோசாபால்யா பகுதியில் உள்ள சண்முகா லேஅவுட்டில் வசிப்பவரான அர்ஜூன் ஜி.ஷெனாய், சமீபத்தில் தேவாலய தெருவுக்கு தனது மாடிஃபை செய்யப்பட்ட போலோ காரில் சென்றுள்ளார்.
மக்கள் அதிகம் பேர் சாலையோரத்தில் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது கவனத்தை பெறுவதற்காக அர்ஜூன் ஜி.ஷெனாய் காரை மெதுவாக ஓட்டி சென்று, நெருப்பை கக்க வைத்துள்ளார். காரின் எக்ஸாஸ்ட் குழாயை அதிக சத்தம் மற்றும் தீப்பொறிகள் ஏற்படும் வகையில் மாற்றியது மட்டுமில்லாமல், காரின் ஜன்னல் கண்ணாடிகளையும் கருப்பு நிறத்தில் டிண்ட் செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் ஜன்னல் கண்ணாடிகளை இவ்வாறு வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவை தெரியாத வகையில் மாற்றக் கூடாது என்கிற சட்டம் உள்ளது. அது சரி... எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் நெருப்பை வர வைத்தவருக்கு, டிண்ட் விஷயம் பெரிய தவறாக தெரிய போகிறதா என்ன? இந்த போலோ கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications








