அனுமரை மிஞ்சும் வலிமை!! ஸ்பாட்டுக்கு வந்த போலீஸார் மெர்சல் ஆயிட்டாங்க... ஃபோக்ஸ்வேகன் என்றால் சும்மாவா!!
ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் ஒன்றின் மேற்கூரையின் மீது மிக பெரிய கண்டெயினர் பெட்டி விழுந்துள்ளது. அதன்பின் நடந்தது தான் இதில் ஆச்சிரியமே. அந்த ஃபோக்ஸ்வேகன் போலோ காருக்கு அப்படி என்ன நடந்தது? எங்கு இந்த சம்பவம் அரங்கேறியது? என்பதை வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.
காரின் வலிமை சிறப்பாக இருந்தால், நம் இந்தியர்கள் எந்தவொரு கார் பிராண்டையும் பாராட்ட மற்றும் பிராண்டிற்கான மதிப்பை வழங்க மறந்தது இல்லை. அது வெளிநாட்டை சேர்ந்த கார் பிராண்டாக இருந்தாலும் சரி. அவ்வாறு, ஜெர்மனியில் தோன்றி நம் இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கார் பிராண்ட், ஃபோக்ஸ்வேகன் ஆகும்.

நம் இந்தியா மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரசிகர்கள் உலகம் முழுவதிலுமே இருக்கின்றனர். ஃபோக்ஸ்வேகன் உருவாக்கிய தரமான கார்களுள் ஒன்று போலோ. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் காரான போலோ ஓட்டுவதற்கு மிகவும் ஜாலியான கார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இப்போது ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் விற்பனையில் இல்லை.
சில வருடங்களுக்கு முன்னர் தான் போலோ காரின் விற்பனையை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுத்தியது. இருப்பினும், இப்போதும் நம் நாட்டில் பலர் போலோ காரை பயன்படுத்துகின்றனர். க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் போலோ 5க்கு 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. மேலும், இந்த மதிப்பெண்களை நிஜ உலகில் வெளிக்காட்டும் விதமாக குஜராத்தில் போலோ கார் ஒன்று ஓர் சம்பவத்தை செய்துள்ளது.

குஜராத்தின் ராஜ்கோட் நெடுஞ்சாலையில், கண்டெயினர் லாரி ஒன்று கண்ட்ரோலை இழந்து, அருகில் சென்றுக் கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மீது மோதியுள்ளது. எவ்வாறு இந்த விபத்து நடந்தது என்பது குறித்த விபரங்கள் இல்லை. அதேபோல், இந்த விபத்துக்கு யார் காரணம் என்பதும் தெரியவில்லை. லாரியும், விபத்திற்கு உள்ளான போலோ காரும் எதிரெதிர் திசையில் இயங்கியதாக கூறப்படுகிறது.
முடிவில், லாரியின் கண்டெயினர் பெட்டி தனியாக பிரிந்து காரின் மீது விழுந்துள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள இதுகுறித்த படங்கள் மற்றும் வீடியோக்களில் கண்டெயினர் பெட்டியை மட்டுமே பார்க்க முடிகிறது. லாரியை பார்க்க முடியவில்லை. கண்டெயினர் பெட்டிக்குள் ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. எந்த பொருளும் இல்லாவிடினும், முழுவதும் இரும்பினால் தயாரிக்கப்படுவதால் காலி கண்டெயினர் பெட்டி கூட எடை மிக்கதாக இருக்கும்.

இருப்பினும், இந்த சூழலை போலோ கார் திறமையாக கையாண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அவ்வளவு பெரிய கண்டெயினர் பெட்டியை போலோ காரின் மேற்கூரை, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரையில் தாங்கி பிடித்து இருந்துள்ளது. எடை மிகுந்த கண்டெயினர் பெட்டி விழுந்த போதிலும், காரின் மேற்கூரை நசுங்கவில்லை.
காரில் மேற்கூரையை தாங்கி நிற்கும் பில்லர்களுக்கும், ஜன்னல் கண்ணாடிகளுக்கும் கூட ஒன்றும் ஆகவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால், காருக்குள் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். ஆனால், காரின் பின்பக்க சஸ்பென்ஷன் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால், அதனை சரி செய்தால் மட்டுமே இனி இந்த போலோ காரை ஓட்ட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் சஸ்பென்ஷன் முற்றிலுமாக பழுதாகி, காரின் அடிப்பகுதி டயர்களுடன் அழுத்தப்பட்டுள்ளது என்றால், கண்டெயினர் பெட்டி எந்த அளவிற்கு எடைமிக்கது என்பதை நினைத்து பாருங்கள். அவ்வளவு எடையையும் காரின் மேற்கூரை தாங்கி நிற்கிறது எனும்போது, இந்த விஷயத்தில் நாம் ஃபோக்ஸ்வேகனின் தயாரிப்பு திறனை தான் பாராட்டியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









