Just In
- 23 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா அல்ல... தலைகீழாக கவிழ்ந்தபோதும் டிரைவரின் உயிரை காப்பாற்றிய கார்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?
சென்னையில் நடைபெற்ற விபத்து ஒன்றில், கார் தலைகீழாக கவிழ்ந்த நிலையிலும், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இதில், பல விபத்துக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் உயிரை குடித்து வருகின்றன. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இதில், பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே முக்கியமான காரணமாக உள்ளது. பல வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. இப்படி நடக்கும் பல்வேறு சாலை விபத்துக்களின் காணொளிகள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் பரவுவதுண்டு.

இந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தின் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த சிறிய காணொளியில் சாலை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. காணொளி தொடங்கிய சில வினாடிகளில் நீல நிற கார் ஒன்று வருகிறது.

அந்த காரின் ஓட்டுனர் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனின் மீது மோதி விட்டார். இதனால் கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்து நடந்த உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்ததையும் இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. கார் தலைகீழாக கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து சென்னை ராயபுரம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கார் தலைகீழாக கவிழ்ந்த நிலையிலும் கூட, அதனை ஓட்டி வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சன் நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் சிக்கியது எந்த நிறுவனத்தின் கார் என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், பார்ப்பதற்கு இது ஃபோக்ஸ்வேகன் போலோ போன்று தெரிகிறது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ போட்டியிட்டு வருகிறது.

பொதுவாக டாடா நிறுவனத்தின் டியாகோ, நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய செய்திகளை நீங்கள் பலமுறை கேள்விபட்டிருக்கலாம். இந்த வகையில் ஃபோக்ஸ்வேகன் போலோ காரும் ஏராளமான முறை விபத்துக்களில் இருந்து பயணிகளை காப்பாற்றியுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் போலோவை குறிப்பிட முடியும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்று ஃபோக்ஸ்வேகன் போலோ அசத்தியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.