2025ற்குள் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்தும் வோக்ஸ்வேகன்

Written By: Azhagar

வரிசையில் நின்று, மணிக்கணக்கில் காத்திருந்து பெட்ரோல் வாங்கும் நிலைக்கு நாமெல்லாம் குட்பை சொல்லவேண்டிய நேரம் நெருங்கி வருகிறது. காலமாற்றத்தின் காரணமாக பெட்ரோலிற்கான மாற்று எரிவாயூவை கண்டுபிடிக்கும் நோக்கில் பல முன்னனி கார் நிறுவனங்கள் நீண்ட நாட்களாகவே பல்வேறு செயல்பாடுகளில் இறங்கியுள்ளன.

பெட்ரோல் இஞ்சின்களுக்கு நாள்குறித்தது வோக்ஸ்வேகன்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் கார் கண்காட்சியில் பெட்ரோலிற்கான மாற்றாக பல்வேறு முறைகளை வோக்ஸ்வேகனின் தலைமை அதிகாரி மேத்தியஸ் முல்லர் வகுத்துயிருக்கிறார். விரைவில் ஓட்டுநரின்றி செயல்படும் கார்கள், முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் ஆகியவற்றை வோக்ஸ்வேகன் விரைவில் வெளியிடும் எனவும் மேத்தியஸ் தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் இஞ்சின்களுக்கு நாள்குறித்தது வோக்ஸ்வேகன்

2025ம் ஆண்டிற்குள் வோக்ஸ்வேகன் மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிப்பதில் உலகளவில் முதலிடத்தில் இருக்கவேண்டும் என விரும்புகிறது. பேட்டரி வகை கார்களுக்கு செட்ரிக் என்று பெயரிட்டுள்ள இந்நிறுவனம்2025ம் ஆண்டிற்குள் 30 பேட்டரி கார்களை உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறது.

பெட்ரோல் இஞ்சின்களுக்கு நாள்குறித்தது வோக்ஸ்வேகன்

வோக்ஸ்வேகனின் இத்தனை பெரிய கனவு திட்டத்தை செயல்படுத்த பில்லியன் கணக்கில் டாலர்கள் தேவைப்படுகின்றன, குறிப்பாக பேட்டரியில் இயங்கும் கார்களை சந்தைப்படுத்தும் போது அதற்கான சாலை அமைப்புகள் மற்றும் மின்சார தேவைகள் ஆகியவற்றையும் அந்நிறுவனம் உருவாக்க வேண்டும்.

பெட்ரோல் இஞ்சின்களுக்கு நாள்குறித்தது வோக்ஸ்வேகன்

வோக்ஸ்வேகனின் இந்த கனவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்தாண்டிற்குள் 60 புதிய மாடல் வண்டிகளை வோக்ஸ்வேகன் வெளியிடவுள்ளது. புதிய போலோ சிட்டி கார்கள், ஸ்கோடா எட்டி கார் போன்ற T-Roc என்ற எஸ்.யூ.வி மாடல் என பல கார்களை வோக்ஸ்வேகன் தயாரித்து வருகிறது.

பெட்ரோல் இஞ்சின்களுக்கு நாள்குறித்தது வோக்ஸ்வேகன்

ஜெனிவாவில் வோக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்புகள் பலரின் பார்வையை ஈர்த்துள்ளன. பல மெயின்ஸ்ட்ரீம் கார் நிறுவனங்கள் போல அல்லாமல், காலம், நேரம் மாற்றத்திற்கு ஏற்றவாறாக சிந்திக்க தெரிந்து வைத்திருப்பதால் வோக்ஸ்வேகன் ஒரு தனித்துவமான கார் நிறுவனமாக உலகளவில் வலம் வருகிறது.

மெர்சடிஸ் நிறுவனத்தின் புதிய எஸ்.யூ.வி மேபேக் G 650 காரின் புகைப்பட தொகுப்பை கீழே பார்க்கலாம்

English summary
There's still life in the petrol engine, with Volkswagen admitting the conventional combustion engine will be around for at least another 20 years
Story first published: Wednesday, March 8, 2017, 13:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark