டாடா காருடன் மோதி, கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த விலைமிக்க ஃபோக்ஸ்வேகன் கார்... உண்மையில் நடந்தது இதுதானா?

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா டியாகோ (Tata Tiago) கார் மீது மோதலுக்கு உள்ளான ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) காரின் சேதாரங்கள் நம்மை அதிர்ச்சியுற செய்துள்ளன. இந்த சம்பவம் எப்படிதான் நடந்து முடிந்தது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த விபத்து நடைபெற்றது குஜராத் மாநிலம் சூரத்தில் ஆகும். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் மீது அவ்வழியாக சென்ற ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் எதிர்பாராத விதமாக மோதலுக்கு உள்ளானது. இவ்வாறான மோதல்கள் அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றுதான், இதில் என்ன ஸ்பெஷல் உள்ளது? என நீங்கள் கேட்கலாம்... ஆனால் விஷயம் இருக்கிறது.

volkswagen taigun overturned

நின்றிருந்த டியாகோ காரின் பின் பகுதியில் மோதிய டைகுன் கார் கரப்பான் பூச்சி போல் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஆனால் மோதலுக்கு உள்ளான டியாகோ காரில் பெரியதாக எந்த சேதாரமும் இல்லை. டியாகோ காரின் பின்பக்கத்தில் மட்டும் சில பல சேதங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம் அந்த சமயத்தில் மிகவும் வைரலாகியது. ஏனெனில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் எந்த அளவிற்கு பெரியது என்பது உங்களுக்கே தெரியும்.

ஆனால் டாடா டியாகோ ஆனது பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய காம்பெக்ட்டான ஹேட்ச்பேக் கார். இத்தகைய காரின் மீது மோதி, அளவில்-பெரியதான கார் ஒன்று தலைக்கீழாக கவிழ்ந்தது விபத்து நடந்த பகுதி மக்களை மட்டுமின்றி, இணையவாசிகளையும் ஆச்சிரியப்பட வைத்தது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், விபத்துக்கு உள்ளான ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் மிகவும் அதிவேகத்தில் வந்தது.

அப்போது அங்கு சாலைக்கு அருகே இருந்த டியாகோ கார் மீது மோதியது. அதாவது, டைகுன் காரின் முன்பக்க இடது பகுதியும், டியாகோ காரின் பின்பக்க வலது பகுதியும் மோதலில் நேரடியாக பாதிக்கப்பட்டன. இந்த மோதலில் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி கார் புரண்டு தலைக்கீழாக கவிழ்ந்தது. ஆனால் டியாகோ கார் சில அடி தூரத்திற்கு மட்டுமே நகர்ந்தது. இந்த விபத்தில் எவரொருவருக்கும் காயமில்லை.

எந்தவொரு காரும் ஓர் குறிப்பிட்ட கோணத்தில் ஒரு வாகனம் அல்லது ஒரு பொருளுடன் மோதினால், அந்த கார் முற்றிலுமாக கண்ட்ரோலை இழந்து குப்புற கவிழ்வதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், இவ்வாறான நிகழ்வுகள் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களில் தான் நடக்கும் என நினைத்திருந்தோம். ஆனால், இதேபோன்றதான விபத்தை ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற எஸ்யூவி கார் கண்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் எஸ்யூவி கார்கள் பொதுவாகவே அதிக மைய ஈர்ப்பு விசையை கொண்டவை.

இந்த ஈர்ப்பு விசையானது ஒவ்வொரு பிராண்ட் கார்களுக்கும் இடையே சிறிதுதான் வித்தியாசப்படும். இருப்பினும், எல்லா எஸ்யூவி கார்களிலும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே சமீப காலமாக விபத்தில் சிக்கும் கார்கள் இவ்வாறு குப்புற கவிழ்வதை பார்க்க முடிவதில்லை. ஆதலால், குஜராத்தில் நடந்த இந்த நிகழ்வு அரிதான ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக காரின் அதிவேகத்தை சொல்ல வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: அதிவேகம், உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத சேதாரங்களை விபத்தின்போது ஏற்படுத்தக்கூடியது என்பதற்கு ஓர் உதாரணம் இந்த சம்பவம் ஆகும். அத்துடன், சம்பவத்தின்போது இந்த டைகுன் காரை ஓட்டிவந்த டிரைவருக்கு அவ்வளவாக டிரைவிங் திறன் இல்லாமல் இருந்திருக்கலாம். எப்படியோ, இந்த விபத்தில் அதிக சேதாரம் ஆனது என்னவோ டைகுன் கார் தான்.

Article Published On: Thursday, May 11, 2023, 14:12 [IST]
English summary
Volkswagen taigun overturned due to hit with tata tiago
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+