மேட்-இன் இந்தியா கார் என்றால் சும்மாவா!! உள்ளே இருந்தவங்க அனைவரும் நலம் - எந்த பிராண்ட் கார் தெரியுமா இது?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) கார் ஒன்று மணிக்கு 80கிமீ வேகத்தில் சாலைக்கு அருகே இருந்த மரத்தில் மோதியுள்ளது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த போதிலும், காருக்குள் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். எவ்வாறு இது சாத்தியமானது? விபத்தில் சிக்கிய டைகுன் காரின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

எவ்வளவு தான் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைத்தாலும், ஒரு பக்கம் சாலை விபத்துகள் நடப்பது நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், நம் நாட்டில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கும் காரணிகளில் ஒன்று சாலை விபத்துகள் ஆகும்.

volkswagent taigun saved all passengers

இதனாலேயே, முடிந்தவரையில் பாதுகாப்பான கார்களை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் சமீப காலங்களில் மக்களிடத்தில் அதிகரித்துள்ளது. கார்களின் பாதுகாப்பை பல்வேறு மோதல் சோதனைகளின் மூலம் தீர்மானிக்கின்றனர். இந்த மோதல் சோதனைகளை நடத்தும் அமைப்பை என்சிஏபி என்கிறோம். இந்திய அரசாங்கம் தனக்கான என்சிஏபி அமைப்பை சமீபத்தில் பாரத் என்சிஏபி என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அதேபோன்று, உலகளவிலான க்ளோபல் என்சிஏபி-யும் உள்ளது. ஒரு தனி நாடு அல்லது கண்டத்திற்கான என்சிஏபி-இன் மதிப்பெண்களை காட்டிலும் க்ளோபல் என்சிஏபி-இல் வழங்கப்படும் மதிப்பெண்கள் சற்று தனித்துவமாக பார்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட க்ளோபல் என்சிஏபி-இல் நம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சில டாடா கார்களும், மஹிந்திரா கார்களும் முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியுள்ளன.

volkswagent taigun saved all passengers

அதேபோன்று, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில வெளிநாட்டு பிராண்ட் கார்களும் க்ளோபல் என்சிஏபி-இல் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. அத்தகைய கார்களுள் ஒன்று தான், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகும். கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டைகுன் கார்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் பாதுகாப்பு தரத்திற்கு உதாரணமாக ஒரு விபத்து நடைபெற்றுள்ளது. சாலையில் மணிக்கு 70- 80கிமீ வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் ஒன்று, ஒரு கட்டத்தில் கண்ட்ரோலை இழந்து சாலைக்கு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றுள்ளது. இந்த சம்பவத்தில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து, என்ஜின் பாகங்கள் நொறுங்கியுள்ளன.

volkswagent taigun saved all passengers

ஆனால் காரின் கேபின் எந்தவொரு சேதாரமும் இன்றி, விபத்திற்கு பிறகும் நல்ல நிலையில் உள்ளது. விபத்து நடந்த அடுத்த மைக்ரோ வினாடியே ஏர்பேக்குகள் வெளிவந்துள்ளன. அதேபோல், பயணிகள் கால் வைக்கும் பகுதிகளிலும் எந்தவொரு பாதிப்பும் இல்லை. இதனால், காரில் பயணித்த பயணிகள் அனைவரும் எந்தவொரு பெரிய காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை சுந்தர்தீப் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விபத்துக்கு பிறகு காரின் முன்பக்கம் எந்த நிலையில் உள்ளது? மற்றும் கேபின் எவ்வாறு உள்ளது? என்பன காட்டப்பட்டு உள்ளன. மேலும், இந்த டுவிட்டர் பதிவின் மூலம், டைகுன் காரை சிறப்பாக வடிவமைத்த ஜெர்மன் என்ஜீனியரிங் & பாதுகாப்பை சுந்தர்தீப் வெகுவாக பாராட்டி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் தங்களது பாதுகாப்பான கட்டமைப்பினால் விபத்தில் இருந்து பயணிகளை பாதுகாத்த சம்பவங்களை பலமுறை பார்த்துள்ளோம். இந்த வரிசையில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரும் இந்த சம்பவத்தின் மூலமாக இணைந்துள்ளது. ஜெர்மன் என்ஜீனியரிங் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டைகுன் எஸ்யூவி கார்கள் அனைத்தும் உள்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

Article Published On: Friday, September 1, 2023, 15:51 [IST]
English summary
Volkswagen taigun saved all passengers after hitting tree at 80 kmph
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X