எப்புட்றா! இந்த கார்லாம் 5 ஸ்டார் வாங்கும்னு நெனச்சு கூட பாக்கல! டாடாவுக்கு இந்நேரம் வேர்த்து கொட்டியிருக்கும்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் எவ்வளவு ஸ்டார் ரேட்டிங் (Star Rating) வாங்கியுள்ளது? என்பதை பார்த்துதான் நிறைய பேர் கார்களையே தேர்வு செய்கின்றனர்.
இந்த விஷயத்தை பொறுத்தவரை, இந்தியாவை சேர்ந்த டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் (Crash Test) முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கியுள்ளன.

அதே சமயம் மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை தன்வசப்படுத்தி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளன.
இந்த சூழலில் சமீப காலமாக ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) மற்றும் ஸ்கோடா (Skoda) ஆகிய நிறுவனங்களின் கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் அசத்த தொடங்கியுள்ளன. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாகதான் ஸ்கோடா நிறுவனம் இயங்கி வருகிறது. ஃபோக்ஸ்வேகன்தான், ஸ்கோடாவின் தாய் நிறுவனம் (Parent Company) ஆகும்.

இந்த 2 நிறுவனங்களும் இந்திய சந்தையில் தற்போது புத்துணர்ச்சியுடன் இயங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக களமிறக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய 2 கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன.
இவை இரண்டும் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும். இதை தொடர்ந்து இந்த நிறுவனங்களின் செடான் (Sedan) ரக கார்களான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய 2 கார்களும் தற்போது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என 2 பிரிவுகளிலும், இந்த 2 கார்களும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களும், பெரியவர்களுக்கான பாதுகாப்பில், 34க்கு 29.71 புள்ளிகளை பெற்றுள்ளன.
மறுபக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த 2 கார்களும் 49க்கு 42 புள்ளிகளை தன்வசப்படுத்தியுள்ளன. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் விர்டுஸ் மற்றும் ஸ்லாவியா ஆகிய 2 கார்களின் இந்த மிக சிறப்பான செயல்பாடு, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கினால், அந்த காரின் விற்பனை கிடுகிடுவென உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வகையில் இனி வரும் காலங்களில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களின் விற்பனையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications