அவரை போலவே கம்பீரமான பேருந்துகளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர்... தயாரித்து கொடுத்த கம்பெனி எது தெரியுமா?

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) நகரங்களுக்கு இடையேயான தனது புதிய அதிநவீன சொகுசுப் பேருந்து (Luxury Bus) சேவைகளைத் தொடங்கியுள்ளது. சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த விழாவில் 15 மீட்டர் இருக்கை வசதி கொண்ட இருபது (20) புதிய 'வால்வோ 9600' (Volvo 9600) பேருந்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த சேவை ஆனது மாநிலத்தில் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதற்கும், நீண்ட தூரப் பயணங்களுக்கான சொகுசு வசதிகளை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒரு முக்கியப் படியாகும். வால்வோ பஸ் இந்தியா (Volvo Bus India) நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வசதிகள் கொண்ட 20 வால்வோ 9600 சொகுசு பேருந்துகள் தமிழ்நாடு மாநில போக்குவரத்து துறையில் சேவைக்கு வந்துள்ளன.

volvo 9600 15-metre luxury buses for tamilnadu setc

அவற்றின் சேவையை கொடியசைத்துத் தொடங்கும் நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஷுன்சோங்காம் ஜாடக் ஷிரு, SETC மேலாண் இயக்குநர் திரு.ஆர்.மோகன், பெருநகரப் போக்குவரத்துக் கழக (MTC) மேலாண் இயக்குநர் திரு.டி.பிரபுசங்கர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் மற்றும் மாண்புமிகு சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.பிரியா ராஜன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த அறிமுக நிகழ்ச்சியை தொடர்ந்து பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த வால்வோ பேருந்துகள் அனைத்தும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அவற்றின் புதிய தலைமுறைகளாகும். பயணிகளின் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஒவ்வொரு பேருந்தும் 51 இருக்கைகள் கொண்ட பிரீமியம் தர அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக நுட்பமான விவரங்களுக்குக் கூட கவனம் செலுத்தப்பட்டு, ஒவ்வொரு சொகுசு இருக்கையிலும் கால் தாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

volvo 9600 15-metre luxury buses for tamilnadu setc

இது நீண்ட தூர நகரங்களுக்கு இடையேயான பயணங்களின் போது பயணிகளுக்கு மேம்பட்ட சவுகரியம், பாதுகாப்பு மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். அதிக நம்பகத்தன்மை மற்றும் சீரான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வால்வோ 9600 பேருந்துகள், முக்கிய வழித்தடங்களில் பயணிகளுக்கான பேருந்துப் போக்குவரத்து சேவைத் தரத்தை உயர்த்தும் SETC-யின் நோக்கத்துடன் ஒத்துப்போகின்றன.

இந்த வால்வோ 9600 பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள்ளேயும், அண்டை மாநிலங்களுடனும் இணைக்கும் முக்கிய நீண்ட தூர நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் இயக்கப்படும். இதில் சென்னை-கோவை, சென்னை-திருப்பூர், சென்னை-சேலம், சென்னை-தஞ்சாவூர், சென்னை-திருச்சி, சென்னை-நாகர்கோவில், சென்னை-திருச்செந்தூர், சென்னை-பெங்களூரு, கோவை-பெங்களூரு மற்றும் திருச்சி-திருச்செந்தூர் ஆகிய வழித்தடங்கள் அடங்கும்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வால்வோ குழுமம் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் (Eicher Motors Limited) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான வால்வோ ஐஷர் கமர்ஷியல் வாகனங்கள் (VECV) நிறுவனத்தின் ஒரு பிரிவுதான், வால்வோ பஸ் இந்தியா நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்திய சந்தைக்கான வால்வோ 9600, ஒரு உயர்தர பல-ஆக்சில் இன்டர்சிட்டி கோச் பேருந்து ஆகும்.

volvo 9600 15-metre luxury buses for tamilnadu setc

இது அதீத சொகுசு, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சிறந்த எரிபொருள் திறனுக்காகப் பெயர் பெற்றதாகும். வால்வோவின் நம்பகமான பி8ஆர் சேஸிஸ் (B8R Chassis)-இல், சக்திவாய்ந்த டி8கே (D8K) என்ஜினுடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. சீட்டர், ஸ்லீப்பர் மற்றும் பல-ஆக்சில் உள்ளமைவுகளில் கிடைக்கும் இந்த பேருந்து, ஏர் சஸ்பென்ஷன், I-ஷிஃப்ட் கியர்பாக்ஸ், நவீன உட்புறங்களைக் கொண்டுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிகபட்ச வசதியையும், இயக்கும் நிறுவனங்களுக்குக் குறைந்த இயக்கச் செலவுகளையும் இது வழங்குகிறது.

2008 ஆகஸ்ட் முதல் செயல்பட்டு வரும் VECV ஆனது ஐஷர் பிராண்டட் லாரிகள் & பேருந்துகள், வால்வோ பஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களை கவனித்துக் கொள்வதுடன், இந்தியாவில் வால்வோ லாரிகளை டெலிவிரி செய்வது, வால்வோ குழுமத்திற்கான என்ஜின் உற்பத்தி & ஏற்றுமதி, வாகனங்களுக்கு பொருத்தப்படாத என்ஜின்கள் மற்றும் ஐஷர் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வணிகம் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய வால்வோ பேருந்துகள் அறிமுகம் ஆனது, பயணிகளின் மிகச்சிறந்த வசதி, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் மாநில அரசுப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து நவீனமயமாக்குவதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள தீவிர கவனத்தை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம், தனியார் நிறுவன பேருந்துகளுக்கு இணையாக அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் உயர்தர சேவையை வழங்குகின்றன. இதற்கு வால்வோ 9600 பேருந்துகள் சரியான தேர்வாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 26, 2025, 15:09 [IST]
English summary
Volvo 9600 15 metre luxury buses flagged off by tamilnadu chief minister
மேலும்... #volvo #buses #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X