ஓசூரில் நடைபெற்ற வ்ரூம் டிராக் ரேஸ் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவுற்றது! இதோ நிகழ்வு பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

சர்வோ எக்ஸ்பி95 (SERVO xP95) வழங்கிய 2022 வ்ரூம் டிராக் மீட் (2022 VROOM Drag Race) போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்று முடிவுற்றிருக்கின்றது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ஆறாவது பதிப்பு வ்ரூம் டிராக் மீட் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் மிக வேகமான செயல்திறன் கொண்ட வாகனங்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து பங்கேற்றன. கார் மற்றும் பைக் என இரு ரக வாகனங்களும் பங்கேற்றன. வார இறுதியை மிக சிறப்பானதாக மாற்றும் வகையில் இந்நிகழ்வு தமிழகத்தின் ஓசூரில் அரங்கேறியது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடப்பாண்டிலேயே இந்த போட்டி நடைபெற்றிருக்கின்றது. இருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை 130 சிசி திறனை வெளியேற்றும் மிக சிறிய எஞ்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் முதல் 1650 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மிகப் பெரிய எஞ்ஜின்கள் கொண்ட பைக்குகள் வரை பங்கேற்றன.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

அதாவது, 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் பைக்கான யமஹா ஆர்எக்ஸ் 100 முதல் கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ் 14ஆர் பைக் வரை பைக்குகள் இப்போட்டியில் பங்கேற்றன. இதேபோல், 1,150 சிசி தொடங்கி சூப்பர் சார்ஜர் மற்றும் டர்போசார்ஜர் எஞ்ஜின் கொண்ட கார்களும் வ்ரூம் டிராக் மீட்டில் பங்கேற்றன. இவற்றின் பங்கேற்பினால் 2022 வ்ரூம் டிராக் மீட் வெற்றிகரமாக நடைபெற்று முடிவுற்றிருக்கின்றது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

டிராக் ரேசிங் என்பது மோட்டார் ஸ்போர்ட்டின் மிக எளிமையான வடிவமாகும். கிமீட்டர் கணக்கில் இதில் வாகனங்கள் பயணிக்காது. இதற்கு பதிலாக கால் மைல் (402 மீட்டர்) தூரத்தை மட்டுமே வாகனங்கள் போட்டியிட்டுக் கடக்கும். இரு வாகனங்களில் எது அதிகவேகத்தில், மிகக் குறைவான நேரத்தில் கடக்கின்றதோ, அது போட்டியின் வெற்றியாளர்.

இத்தகைய டிராக் மீட் போட்டியே தமிழகத்தின் ஓசூரில் கடந்த 04 மார்ச் 2022 தொடங்கி 06 மார்ச் 2022 வரை நடைபெற்றது. இடைவெளி குறைவானதாக தென்பட்டாலும், போட்டி மிக சுவாரஷ்யமானதாக காட்சியளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனேஜா ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் (TAAL)-லேயே இந்த போட்டி நடைபெற்றது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இது, மொத்தம் 2.25 கிலோமீட்டர் ஓடுபாதையைக் கொண்டது. இதில், 402 மீட்டர் நீளத்தையே டிராக் ரேஸுக்கான இடமாக குறிக்கப்பட்டு, அதற்குள்ளாக மட்டுமே வாகனங்கள் போட்டியிட்டன. இந்த போட்டி பற்றிய முழுமையான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

மார்ச் 4

முதல் நாளான மார்ச் 4 ஆய்விற்கும், பயிற்சிக்கும் ஒதுக்கப்பட்டது. ஆம், பந்தயத்தில் பங்கு பெற்ற பந்தய வீரர்கள் மற்றும் வாகனங்கள் இந்த நாளிலேயே ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. ஆகையால், முதல் நாளில் எந்த விதமான போட்டியும் நடைபெறவில்லை. ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா (FMSCI) அதிகாரிகளே வாகனங்களை ஆய்விற்கு உட்படுத்தினர்.

இருப்பினும், வ்ரூம் டிராக் மீட் நிகழ்வின் தயாரிப்பு குழு இறுதி தணிக்கையை மேற்கொண்டது. இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்தும் தனி தனியாக ஆய்வு கூடாரத்தில் நிற்க வைக்கப்பட்டன. தொடர்ந்து, போட்டியாளர்களும் அவர்களுக்கான இடத்தில் நிற்க வைக்கப்பட்டனர்.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இதன் பின்னரே முழு ஆய்வு பணிகள் தொடங்கின. வ்ரூம் டிராக் மீட் குழு வழங்கிய வழிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்கள் இருக்கின்றனவா என பல கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, போட்டியில் கலந்துக் கொள்வதற்காக தயார் நிலையில் இருந்த வாகனங்களில் பிரேக் லைட்டுகள் சரியாக வேலை செய்கிறதா, வாகனங்களின் பாடி பேனல் ஆடாமல் உறுதியாக இருக்கின்றதா, கேபிள்கள் அல்லது வாகனத்தில் உள்ள பிற பைப்புகள் உள்ளிட்ட ஸ்ட்ராங்காக இருக்கிறதா போன்ற பல கட்ட ஆய்வுகளை போட்டி குழுவினர் செய்தனர்.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

கார் மற்றும் பைக் என அனைத்தையும் சல்லடை போட்டு ஆய்வு குழுவினர் ஆராய்ந்தனர். இதேபோல், பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். ரைடர்கள் லெதர் உடை, முதுகு மற்றும் முழங்காலை பாதுகாக்கும் கவசம், முழு முக ஹெல்மெட், கையுறைகள், பூட் (காலணி) உள்ளிட்ட கவசங்களை வைத்திருக்கின்றனரா, அவை தரமானவையா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னரே வாகனமும், ரைடர்களும் போட்டியிட தகுதியானவர் என சான்றளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளின் இறுதி நேரத்தில் பங்கேற்பாளர்கள் கட்டணத்தின் அடிப்படையில் சோதனை ஓட்டம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஒரு சிலர் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

மார்ச் 5

மார்ச் 5 இந்த நாளையே முதல் நாள் என்று கூறலாம். ஆம், இந்த நாளிலேயே போட்டிகள் தொடங்கின. இந்திய தயாரிப்பு வாகனங்கள் மட்டுமே இந்த நாளில் பங்கேற்றன. முதலில் ரைடர்கள் பயிற்சி ஓட்டம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனை ரைடர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் மோட்டார் வாகனங்களை சீறி பாய செய்தனர்.

இதனைத் தொடர்ந்தே, விரைவில் போட்டிகள் தொடங்கின. சிசி மற்றும் எஞ்ஜின் வாரியாக வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டியிட செய்யப்பட்டன. ஏ1 பிரிவில் 130 சிசிக்கும் அதிக திறன் வெளிப்பாடுக் கொண்ட 2-ஸ்ட்ரோக் எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் போட்டிக்கு உட்படுத்தப்பட்டன. இதில், மிக கடுமையாக மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஆர்எக்ஸ் 100 மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்கள் பங்கேற்றன.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இதற்கு அடுத்தபடியாக ஏ2 பிரிவு வாகனங்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில், 131 சிசி முதல் 165 சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் பங்கேற்றன. இந்த பிரிவில் 13.329 செகண்டுகளில் குவார்டர் மைல் தூரத்தைக் கடந்து ஷ்ரேயஸ் ஹரீஸ் என்பவர் சாதனைப் படைத்தார். இவர் மிகக் கடுமையாக மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஆர்எக்ஸ் 135 பைக்கைப் பயன்படுத்தி இந்த வெற்றியைத் தழுவினார். இவரின் வயது 11 மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனைத் தொடர்ந்து ஏ3 பிரிவுக்கான போட்டி நடைப்பெற்றது. பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிவு என்று இதனைக் கூறலாம். இந்த பிரிவில் யமஹா ஆர்டி350 ரக மோட்டார்சைக்கிள் பங்கேற்றன. இதற்கு அடுத்தபடியாக 165 சிசி வரையிலான திறன் கொண்ட வாகனங்களுக்கான போட்டி பி1 எனும் பிரிவின்கீழ் நடைபெற்றது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இந்த பிரிவில் யமஹா ஆர்15 போன்ற வாகனங்கள் பங்கேற்றன. இதன் பின்னர், 166 சிசி முதல் 225 சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் பி2 பிரிவின்கீழ் பந்தயம் செய்தன. இதில், பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மற்றும் கேடிஎம் 200 எஸ் வாகனங்கள் களம் கண்டன.

பி3 பிரிவு மிக அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்காக இது ஒதுக்கப்பட்டது. இந்த பிரிவில் 226 சிசி முதல் 360 சிசி வரையிலான திறன் கொண்ட வாகனங்கள் களம் கண்டன. அதாவது, யமஹா ஆர்3, கவாஸாகி 300 உள்ளிட்ட வாகனங்கள் பங்கேற்றன. இதற்கு அடுத்தபடியாக பி4 பிரிவுக்கான போட்டி நடைபெற்றது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இந்த பிரிவில் 361 சிசி முதல் 550 சிசி வரையிலான திறன் கொண்ட பைக்குகள் பங்கேற்றன. கேடிஎம் ஆர்சி390 மற்றும் 390 ட்யூக் போன்ற அதிக வேக வாகனங்கள் இதில் போட்டியைச் சந்தித்தன. இறுதியாக பி5 எனும் பிரிவில் இந்தியா மேட் இருசக்கர வாகனங்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த பிரிவில் 551 சிசி முதல் 850 சிசி வரையிலான திறன் கொண்ட வாகனங்கள் வரை பங்கேற்றன.

இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து இந்தியாவில் தயார் செய்யப்பட்ட கார்களுக்கான போட்டிகள் தொடங்கின. டி2, டி4, டி5, டி6 மற்றும் டி8 ஆகிய பிரிவுகளில் கார்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4, எஸ்5 மற்றும் எஸ்6 பிரிவிற்கான போட்டிகளும் நடைபெற்றது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

ஹெவியாக ட்யூன் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஜென் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலே ஹேட்ச்பேக்குகள் முதல் திறன் மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹோண்டா சிட்டி செடான் கார்கள் பங்கேற்றன. இத்துடன், போர்ஷே பாக்ஸ்டர் 718, பிஎம்டபிள்யூ 530 டி, ஆடி ஏ6 போன்ற பிரீமியம் கார்களும் இந்த தினத்தில் பங்கேற்றன.

வ்ரூம் டிராக் மீட்டில் ஆண்களைப் போல் சில பெண் ரேஸர்களும் பங்கேற்றனர். இவர்களுக்காக பிரத்யேகமாக எஃப்1 மற்றும் ஜி1 எனும் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அவ்வாறு இருசக்கர வாகன பிரிவில் நடைபெற்ற போட்டியில் சமந்தா டி-சோஸா எனும் இளம் பெண் வீராங்கனை 13.751 செகண்டுகளில் குவார்டர் மைலை கேடிஎம் 390 பைக்கில் கடந்து வெற்றியாளராக மாறினார்.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இவ்வாறு முதல் நாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவுற்றது. முதல் நாளின் இறுதியை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் டிவிஎஸ் ரேசிங் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்தவர்கள் ஓர் அற்புதமான நிகழ்ச்சியை நடத்தினர். அவர்கள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 மோட்டார்சைக்கிளைக் கொண்டு சாகசங்களைச் செய்தனர்.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

நாள் 1, டாப் 3 வேகமான டூ-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்களின் வெற்றியாளர்களின் விபரம்:

அந்தோணி ராஜ் [317]: A3 வகை: 12.418 வினாடிகள்

ஷாருக் கான் [070]: A3 வகை: 12.616 வினாடிகள்

நசீர் ஜமால் அன்சாரி [075]: A3 வகை: 12.730 வினாடிகள்

நாள் 1, டாப் 3 வேகமான நான்கு ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்களின் வெற்றியாளர்களின் விபரம்:

ரஹில் பில்லரிசெட்டி [161]: B5 வகை: 10.758 வினாடிகள்

சித்தார்த் பர்மர் [153]: B5 வகை: 10.878 வினாடிகள்

மிர்சா ஜஹாங்கிர் பெய்க் [308]: B5 வகை: 11.137 வினாடிகள்

நாள் 1, டாப் 3 வேகமான பெண்கள் பங்கேற்பாளர்கள் வெற்றியாளர்களின் விபரம்:

சமந்தா டி சௌசா [262]: F1 வகை: 13.751 வினாடிகள்

சாரா கான் [260]: F1 வகை: 14.600 வினாடிகள்

ஆன் ஜெனிபர் ஏஎஸ் [261]: F1 வகை: 14.950 வினாடிகள்

நாள் 1, டாப் 3 வேகமான வேகமான பெட்ரோல் கார்கள்களின் வெற்றியாளர்களின் விபரம்:

ஊர்வசி கேபி [636]: G1 வகை: 14.086 வினாடிகள்

பிரனய் சவ்ராப் டிஜே [705]: S6 வகை: 15.447 வினாடிகள்

ஆகாஷ் [537]: S6 வகை: 15.555 வினாடிகள்

நாள் 1, டாப் 3 வேகமான வேகமான கார்களின் வெற்றியாளர்களின் விபரம்:

சுமந்த் எச்வி [582]: D8 வகை: 14.327 வினாடிகள்

முகமது காஜா அப்ராருதீன் (ஹாஷிம்) [537]: D4 வகை: 14.646 வினாடிகள்

விக்ரம் ராஜ் [574]: D5 வகை: 14.820 வினாடிகள்

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

மார்ச் 6

முதல் நாளைக் காட்டிலும் மார்ச் 6ம் தேதியே சற்று சுவாரஷ்யமானதாக அமைந்தது. வேகமான மற்றும் அதிக ஒலியை எழுப்பக் கூடிய இயந்திரங்கள் கொண்ட வாகனங்கள் இந்த தினத்திலேயே களத்தை அதகளப்படுத்தின. அதாவது, சூப்பர் பைக்குகள், சூப்பர் கார்கள் இந்த நாளில் பங்கேற்றன. அதேவேலையில், பயிற்சி நேரத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் மந்த்ரா ரேசிங் மற்றும் ஹேமந்த் முத்தப்பா ஆகியோர் தங்களின் சூப்பர் பைக்குகளைக் கொண்டு 10 வினாடிகளில் குவார்டர் மைலைக் கடந்து அசத்தினர்.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இதற்கு பின்னர் 551 சிசி முதல் 850 சிசி வரையிலான திறன் கொண்ட சிங்கிள் மற்றும் ட்வின் சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களுக்கான போட்டி தொடங்கியது. இந்த பிரிவில் அல்டஃப் கான் 11.764 செகண்டுகளில் குவார்டர் மைலைக் கடந்து வெற்றியாளராக மாறினார்.

இந்த பிரிவில் ஒரே ஒரு பெண் போட்டியாளராக லானி ஜெனா ஃபெர்னான்டஸ் கலந்துக் கொண்டார். இவரின் ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் இருந்தது. இவர் 12.145 செகண்டுகளில் குவார்டர் மைலைக் கடந்து சாதனைப் படைத்தார். இன்டிமோடார்ட் எனும் நிறுவனமே இவரின் பைக்கை ட்யூன்-அப் செய்திருந்தது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இதற்கு அடுத்தபடியாக சி1 எனும் பிரிவின் கீழ் 851 சிசி முதல் 1050 சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பிரபல பந்தய வீரர் ஹேமந்த் முத்தப்பா பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கைக் கொண்டுக் கலந்துக் கொண்டார். 9.820 செகண்டுகள் எனும் மிக மிக குறைவான நேரத்தில் அவர் இலக்கை அடைந்நது சாதனைப் படைத்தார்.

இவர் சி2 பிரிவிலும் அடுத்ததாகக் கலந்துக் கொண்டார். இந்த பிரிவில் சுசுகி ஹயபுசா பைக்கை அவர் பயன்படுத்தினார். இந்த பைக்கைக் கொண்டு 9.970 செகண்டுகளில் அவர் இலக்கைக் கடந்தார். சி2 பிரிவு 1051 சிசி முதல் 1650 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கானது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இதற்கு அடுத்தடியாக, ஸ்பெஷல் பிரிவாக 1651 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்களுக்கு போட்டி நடைபெற்றது. இதில், மந்த்ரா ரேசிங் கிளப் பிரத்யேகமாக கட்டியமைத்த கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-14 ஆர் பைக் மட்டும் பங்கேற்றது. இந்த பைக் 10.785 செகண்டுகளில் குவார்டர் மைலைக் கடந்தது. இதனை ஹேமந்த் முத்தப்பாவே செய்தார்.

இதேபோல் கார்களுக்கும் தனி தனி பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. பல தரபட்ட கார்கள் இரண்டாம் நாளில் பங்கேற்றன. குறிப்பாக ஜி2 மற்றும் ஜி3 என்ற பிரிவில் சில தனித்துவமான கார்கள் பங்கேற்றன. மாருதி சுசுகி ஜென் இப்பிரிவில் பங்கேற்றது. இதற்கு அடுத்தபடியாக பி2, பி3, பி4, பி5, பி6, பி7, பி7, பி8 மற்றும் பி9 ஆகிய பிரிவுகளில் கார்களுக்கான போட்டி நடைபெற்றது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

அதாவது, 1151 சிசி முதல் 5101 சிசி திறன் கொண்ட கார்கள் அந்த பிரிவுகளில் கலந்துக் கொண்டு களத்தில் சீறி பாய்ந்தன. ஸ்கோடா ஆக்டேவியா விஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹோண்டா சிட்டி செடான் மற்றும் அதிக திறை வெளியேற்றக் கூடிய ஆடி ஏ6, ஹார்மோனிக்ஸ் ட்யூன் செய்யப்பட்ட ஆடி ஆர்எஸ்7, போர்ஷே கேயென்னை டர்போ உள்ளிட்ட கார்கள் பங்கேற்றன.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இவற்றின் பங்களிப்புடன் இரண்டாம் போட்டி மிக சிறப்பானதாக முடிவுற்றது. இந்த நாளின் இறுதியிலும் டிவிஎஸ் ரேசிங் குழுவின் ஸ்டண்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னதாக கடைசி போட்டியாக வீலிங் செய்யும் போட்டியும் இந்த வ்ரூம் டிராக் மீட்டில் நடைபெற்றது. குவார்டர் மைல் தூரத்தை முன் வீல் தரையில் படாமல் கடக்க வேண்டும் என்பதே போட்டியாகும். இந்த பிரிவில் முன் சக்கரம் தரையில் படாமல் 15.616 செகண்டுகளில் குவார்டர் மைலைக் கடந்து அக்ஷய் ஷர்மா என்பவர் சாதனைப் படைத்தார். இவர் கேடிஎம் 390 பைக்கைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

டாப் 3 வேகமான மோட்டார் சைக்கிள்கள் [நாள் 2]

1. ஹேமந்த் முத்தப்பா [241]: U2 வகை: 9.752 வினாடிகள்: BMW S 1000RR

2. ஹேமந்த் முத்தப்பா [173]: C1 வகை: 9.820 வினாடிகள்: BMW S 1000RR

3. ஹேமந்த் முத்தப்பா [194]: C2 வகை: 9.970 வினாடிகள்: சுசுகி ஹயபுசா

டாப் 3 வேகமான கார்கள் [நாள் 2]

1. கே வெங்கட் சாய் ரெட்டி [647]: P9 வகை: 11.401 வினாடிகள்: ஹார்மோனிக்ஸ்ஸால் ட்யூன் செய்யப்பட்ட போர்ஸ் கேயென் டர்போ

2. இம்ரான் மஜித் [555]: P9 வகை: 11.442 வினாடிகள்: நிசான் ஜிடிஆர் கிக்ஷிஃப்ட் மூலம் டியூன் செய்யப்பட்டது

3. சீன் ரோஜர்ஸ் [554]: S9 வகை: 11.524 வினாடிகள்: ஆடி R8 V10 டியூன் செய்யப்பட்ட மோட்க்ரூ

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

வாகன கண்காட்சி:

வ்ரூம் டிராக் மீட் நிகழ்வின்போது வெறும் பந்தயம் மட்டுமே நடக்கவில்லை. அங்கு சிறிய வாகன கண்காட்சியும் நடைபெற்றது. இத்துடன், ரைடர்களுக்கான அணிகலன்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிஸான் ஆர்32, ஆர்34, மற்றும் ஆர்35 உள்ளிட்ட வாகனங்கள் இருந்தன. இதேபோல், ஆடி ஆர்எஸ்6, பெரிய குரோம் வீல்கள் கொண்ட நிஸான் பேட்ரோல் மற்றும் லம்போர்கனி கல்லர்டோ உள்ளிட்ட வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களுக்கு சிறப்பு விருதுகளும் 2022 வ்ரூம் டிராக் மீட்டில் வழங்கப்பட்டு. அவற்றின் விபரங்கள் இதோ:

இரு சக்கர வாகனங்களுக்கான சிறப்பு விருதுகள் பிரிவுகள் வாரியாக:

வேகமான ரைடர் வெளிநாட்டு பைக்: ஹேமந்த் முத்தப்பா | 9.725 வினாடிகள்

வேகமான ரைடர் இந்திய பைக்: கௌதம் ஆர் | 12.357 வினாடிகள்

ஃபாஸ்டஸ்ட் ரைடர் ஆஃப் தி டே: ஹேமந்த் முத்தப்பா | 9.725 வினாடிகள்

ஃபாஸ்டஸ்ட் வீலி இந்தியன் பைக்: அக்ஷய் ஷர்மா

சிறந்த ட்யூனர் வெளிநாட்டு பைக்: மந்த்ரா ரேசிங்

சிறப்பு விருதுகள்: நான்கு சக்கர வாகனங்கள்

ஃபாஸ்டஸ்ட் ரைடர் ஆஃப் தி டே: கே வெங்கட் சாய் ரெட்டி | 11.401 வினாடிகள்

ஃபாஸ்டஸ்ட் ரைடர் வெளிநாட்டு கார்கள்: கே வெங்கட் சாய் ரெட்டி | 11.401 வினாடிகள்

ஃபாஸ்டஸ்ட் ரைடர் இந்திய கார்: பிரனய் சவ்ராப் | 15.447 வினாடிகள்

வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

முதல் நாளில் நடைபெற்ற போட்டிகளும், அதன் வெற்றியாளர்கள் பற்றிய தகவலைக் கீழே பட்டியலாகக் காணலாம்:

A1 - Up to 130 CC
Position Name Elapsed Time (s)
1. R Madhan Kumar 14.280
2. Mujahid Pasha 14.509
3. Khalid Pasha 14.544
A2 - 131 to 165 CC
Position Name Elapsed Time (s)
1. Aiyaz 13.329
2. Prashanth 13.463
3. Amir H Badu 13.552
A3 - 350 CC and Above
Position Name Elapsed Time (s)
1. A Anthony Raj 12.418
2. Shahrukh Khan 12.616
3. Nasir Jamal Ansari 12.730
B1 - Up to 165 CC
Position Name Elapsed Time (s)
1. Mustafa Siraj Khan 14.936
2. Saurav Karmakar 15.011
3. Ganesh B 15.489
B2 - 166 to 225 CC

Position Name Elapsed Time (s)
1. Deepak N 13.690
2. Badhusha M 13.929
3. Aiyaz 15.020
B3 - 226 to 360 CC

Position Name Elapsed Time (s)
1. A Shankar Guru 13.351
2. Abdul Shaik 13.652
3. Peddu Sriharsha 14.007
B4 - 361 to 550 CC

Position Name Elapsed Time (s)
1. Hussain Khan 12.883
2. Ayiaz 12.974
3. Attaulla Baig 13.032
B5 - 551 to 850 CC

Position Name Elapsed Time (s)
1. Rahil Pillarisetty 10.758
2. Siddharth Parmar 10.878
3. Mirza Jahangir Baig 11.137
D2 - 1151 to 1450 CC

Position Name Elapsed Time (s)
1. Mohammed Arshad Ali 17.707
D4 - 1651 to 2050 CC

Position Name Elapsed Time (s)
1. Mohd Khaja Abraruddin (Hashim) 14.646
D5 - 2051 to 2550 CC

Position Name Elapsed Time (s)
1. Vikram Raj 14.820
2. Vincent Yalangi 14.857
3. Darshan Mandara Reddy 15.360
D6 - 2551 to 3060 CC

Position Name Elapsed Time (s)
1. D Ashwin 15.270
2. Sundeep Singh Sokhi 15.598
3. Norton Singh Sokhi 16.124
D8 - 4001 to 5100 CC

Position Name Elapsed Time (s)
1. Sumanth HV 14.327
F1 - WIM Upto 390 CC 4 Stroke

Position Name Elapsed Time (s)
1. Samantha D Souza 13.751
2. Sarah Khan 14.600
3. Ann Jennifer AS 14.950
F4 - JAWA/YEZDI Open

Position Name Elapsed Time (s)
1. P Thulasi Ram 16.709
2. Suprit S Kumar 17.610
3. Attaulla Baig 18.354
F5 - 4 Stroke Open upto 500cc

Position Name Elapsed Time (s)
1. P Thulasi Ram 12.754
2. Abdul Shaikh 12.780
3. Attaulla Baig 12.898
G1 - Women in Motorsport Upto 3000 CC

Position Name Elapsed Time (s)
1. Uvashri KB 14.086
2. Veena Patil 16.860
3. Dr Asna Zain 17.613
S1 - Upto 1150 CC

Position Name Elapsed Time (s)
1. Sharath Raj 18.523
2. Puneeth N 18.569
3. Salman Khan A 20.594
S2 - 1151 to 1450 CC

Position Name Elapsed Time (s)
1. Mohammed Adnan 17.767
2. Yash Yadav 17.888
3. Bhuman Kishor Thakkar 17.896
S3 - 1451 to 1650 CC

Position Name Elapsed Time (s)
1. Harneet Singh 17.486
2. Nikhil SN 19.456
S4 - 1651 to 2050 CC

Position Name Elapsed Time (s)
1. Aditya JB 15.890
2. Ritesh G 16.158
3. Akshay Premraj 16.682
S6 - 2551 to 3060 CC

Position Name Elapsed Time (s)
1. Pranay Sowrab TJ 15.447
2. Akash 15.555
வெற்றிகரமாக நிறைவுற்றது 6வது வ்ரூம் டிராக் மீட்... நிகழ்வின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு!

இரண்டாம் நாளில் நடைபெற்ற போட்டிகளும், அதன் வெற்றியாளர்கள் பற்றிய தகவலைக் கீழே பட்டியலாகக் காணலாம்:

B6 - Single / Twin 551 to 850 CC

Position Name Elapsed Time (s)
1. Altaf Khan 11.764
2. Zubair Ali Jung 12.081
3. Lani Zena Fernandez 12.145
C1 - 851 to 1050 CC

Position Name Elapsed Time (s)
1. Hemanth Muddappa 9.820
2. Sean Rogers 10.139
3. Yenigalla Avinash Chowdary 10.402
C2 - 1051 to 1650 CC

Position Name Elapsed Time (s)
1. Hemanth Muddappa 9.970
2. Harish Naik M 10.170
3. Hafizullah Khan 10.207
C3 - 1651 CC and Above

Position Name Elapsed Time (s)
1. Sundeep Singh Sokhi 10.785
F6 - Naked Open

Position Name Elapsed Time (s)
1. Zubair Ali Jung 11.092
2. Saurabh 11.471
3. Karthik Ramachandran 12.188
F7 - Indian Wheelie Class

Position Name Elapsed Time (s)
1. Akshay Sharma 15.616
2. Saurabh Parab 16.829
3. Ashpak Alam 17.230
G2 - Hatchback Open

Position Name Elapsed Time (s)
1. Mohammed Haseeb 15.563
2. Mohammed Mustafa 16.006
3. Vasudevan C 18.099
G3 - Exhibition Class

Position Name Elapsed Time (s)
1. Karthikeyan CS 12.590
2. Amol Sawant 13.362
IN1 - Upto 3060 CC

Position Name Elapsed Time (s)
1. Yajur 12.845
2. Abhishek U 13.246
3. Vasudevan C 13.806
IN2 - 3061 CC and above

Position Name Elapsed Time (s)
1. K Venkat Sai Reddy 11.627
2. Mayank 12.738
3. JP Suman Naidu 12.989
P2 - 1151 to 1450 CC

Position Name Elapsed Time (s)
1. Narayana Swamy 15.915
2. Hussain Mujawar 16.490
3. Abhishek U 16.547
P3 - 1451 to 1650 CC

Position Name Elapsed Time (s)
1. Ponanna M S 15.029
2. Praveen Kumar 15.243
3. Faraaz Ahmed Khan 15.331
P4 - 1651 to 2050 CC

Position Name Elapsed Time (s)
1. Adnan Khan 16.148
2. Aditya Sharma 16.375
3. Mohammed Shaik Salman 16.492
P5 - 2051 to 2550 CC

Position Name Elapsed Time (s)
1. Abhishek U 14.027
2. Ganesan 17.505
P6 - 2551 to 3060 CC

Position Name Elapsed Time (s)
1. Uvashri KB 13.517
2. Amol Sawant 13.864
3. Syed Omar 15.321
P7 - 3061 to 4000 CC

Position Name Elapsed Time (s)
1. Karthik KV 12.839
2. Rahul R Kodidini 13.031
3. Mithun M 13.069
P8 - 4001 to 5100 CC

Position Name Elapsed Time (s)
1. Mayank 12.487
2. Karthikeyan CS 12.501
3. Raoul 13.592
P9 - 5101 CC and above

Position Name Elapsed Time (s)
1. K Venkat Sai Reddy 11.401
2. Imran Majid 11.442
3. Karthikeyan CS 11.967
R1 - Unrestricted Class

Position Name Elapsed Time (s)
1. Sean Rogers 11.541
2. Karthikeyan CS 11.616
3. K Venkat Sai Reddy 11.734
S7 - 3061 to 4000 CC

Position Name Elapsed Time (s)
1. Kiran Vijayakumar 12.700
2. Prem N 13.818
3. Amith Ashokan 14.239
S8 - 4001 to 5100 CC

Position Name Elapsed Time (s)
1. Raoul Kengal Vardhan 13.325
2. Madhan Babu 13.757
S9 - 5101 CC and above

Position Name Elapsed Time (s)
1. Sean Rogers 11.524
2. Anup Boppana 11.597
3. K Venkat Sai Reddy 11.811
U1 - Upto 550 CC

Position Name Elapsed Time (s)
1. Goutham R 12.357
2. Nasir Jamal Ansari 12.430
3. Mujahid Pasha 12.441
U2 - 551 CC and Above

Position Name Elapsed Time (s)
1. Hemanth Muddappa 9.752
2. Zubair Ali Jung 10.026
3. Hafizullah Khan 10.086

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2022, 20:44 [IST]
English summary
Vroom drag meet 2022 6th edition results and highlights
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+