ரூ.14 கோடியில் கார் வாங்கியவருக்கு இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது!! பூஜை போட்டதுக்கு அப்புறம்தான் எல்லாமே!

விலையுயர்ந்த பென்ஸ் கார்களை வாங்க வேண்டும் என்று நம்மில் நிறைய பேருக்கு ஆசை இருக்கும். ஆனால், அத்தகைய கார்களை செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிகிறது. ஏனெனில், அவற்றின் விலைகள் அந்த அளவிற்கு கோடிகளில் உள்ளன. ஆனால், இந்தியாவில் ரூ.14 கோடியில் கார் வைத்திருக்கும் ஒருவர், புதியதாக மீண்டும் ஒரு விலையுயர்ந்த காராக மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 (Mercedes-Maybach S680)ஐ வாங்கியுள்ளார். யார் இந்த செல்வந்தர் என்பதை பற்றியும், இவர் புதியதாக வாங்கியுள்ள மேபக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்தின் பென்ஸ் கார்கள் தான் விலைமிக்கவை என நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும், மெர்சிடிஸ்-மேபக் கார்கள் விலைமிக்கவை ஆகும். பென்ஸ் கார்களை விட சொகுசு வசதிகள் மிகுந்ததாக மேபக் கார்கள் உருவாக்கப்படுகின்றன.

vs reddy buys mercedes-maybach s680

அதற்கேற்ப மேபக் கார்களின் விலைகளை மிக அதிகமாக மெர்சிடிஸ் நிறுவனம் நிர்ணயிக்கிறது. அப்படிப்பட்ட மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 காரை தற்போது வாங்கியிருக்கும் பணக்காரர் பெயர், வி.எஸ் ரெட்டி. இந்த பெயரை உங்களில் பலர் இப்போதுதான் முதல்முறையாக கேள்விப்படலாம். ஆனால், இந்தியாவின் மிக விலையுயர்ந்த கார் உரிமையாளர் வி.எஸ் ரெட்டி என சொன்னால் நம்ப முடிகிறதா...

இந்தியாவின் மிக பெரும் மருத்துவ ஊட்டச்சத்து உற்பத்தி நிறுவனமான பிரிட்டிஷ் பயோலாஜிகல்ஸின் நிர்வாக இயக்குனரான வி.எஸ் ரெட்டியிடம் பெண்ட்லீ முல்சன்னே EWB செண்டெனரி எடிசன் கார் ஒன்று உள்ளது. உலகளவில் பிரபலமான பெண்ட்லீ முல்சன்னே காரின் ஸ்பெஷல் எடிசனான இதன் விலை ஏறக்குறைய ரூ.14 கோடி என கூறப்படுகிறது.

vs reddy buys mercedes-maybach s680

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியிடம் 10க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. ஆனால், ரூ.14 கோடி விலை கொண்ட கார்கள் எதுவும் அவரிடம் கூட இல்லை. இத்தகைய விலையுயர்ந்த பெண்ட்லீ காரை வைத்திருக்கும் வி.எஸ் ரெட்டி புதியதாக வாங்கியிருக்கும் மேபக் எஸ்680 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.44 கோடி ஆகும்.

மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 காரை வி.எஸ் ரெட்டி வாங்கியுள்ளதை பெங்களூரில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூமான சுந்தரம் மோட்டார்ஸ் அதன் யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. ஷோரூமுக்குள் வி.எஸ் ரெட்டி நுழைவதில் இருந்து, காரை டெலிவிரி பெற்று செல்வது வரையில் அனைத்தும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.

vs reddy buys mercedes-maybach s680

ஆனால், ஷோரூமில் இருந்து காரை வி.எஸ் ரெட்டி தான் ஓட்டிச் சென்றாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இவ்வளவு தொகையில் காரை வாங்குபவர், கூடவே ஒரு டிரைவரை அழைத்து வந்திருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. மேபக் எஸ்680 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்யும் விலையுயர்ந்த கார் இதுவாகும். அந்த அளவிற்கு இந்த கார் மிக பிரம்மாண்டமானது ஆகும்.

எந்த அளவிற்கு என்றால், இந்த காரின் நீளம் சுமார் 5.5 மீட்டர்கள் ஆகும். எங்களுக்கு தெரிந்தவரையில், இவ்வளவு நீளமான கார் வேறெதுவும் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படுவதில்லை. மசாஜ் வசதி கொண்ட இருக்கைகள், பின் இருக்கை பயணிகளுக்கும் பொழுதுப்போக்கு திரைகள் என இந்த மெர்சிடிஸ்-மேபக் காரில் இல்லாத வசதிகளே கிடையாது. இத்தகைய இந்த காரில் பவர்ஃபுல்லான 6.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் வி.எஸ் ரெட்டியிடம் உள்ள பெண்ட்லீ கார் ஆனது உலகிலேயே வெறும் 100 பேரிடம் மட்டுமே உள்ளது. இத்தகைய காரை ரூ.14 கோடியில் வாங்கியவருக்கு ரூ.3.5 கோடியில் கார் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. வி.எஸ் ரெட்டி வாங்கும் கார்கள் லக்சரியான செடான் ரக கார்களாக உள்ளன. இதில் இருந்து, தாழ்வான கார்கள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2024, 16:59 [IST]
English summary
Vs reddy buys mercedes maybach s680 worth rupees 3 44 crores all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X