நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் படத்தின் நடிகர் சிம்புவிற்கும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அட்டகாசமான பரிசுகளை தயாரிப்பாளர் வழங்கி சிறப்பித்துள்ளார். அவை என்னென்ன பரிசுகள் என்பதை பற்றி இனி பார்ப்போம்.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

பிரபல தமிழ் பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த செப்.15ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

தென்தமிழக கிராமத்தில் இருந்து வந்த ஓர் இளைஞன் மும்பையில் சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் எவ்வாறு டான் ஆக மாறினான் என்பதே இந்த படத்தின் கதையாகும். கேங்க்ஸ்டர் கதையான இது காதல் காட்சிகளுடன் படமாக்கப் பட்டுள்ளதால் ரசிகர்கள் பலருக்கு வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகவும் பிடித்துப்போய் உள்ளது.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

இதனால் பெரும்பான்மையான திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடும் இந்த படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னையில் கடந்த செப்.24ஆம் தேதி இரவு நடத்தப்பட்டது. இந்த கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐசாரி வேலானி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

அப்போது நடிகர் சிலம்பரசனுக்கு படத்தின் தயாரிப்பாளர் சொகுசு வசதிகள் மிகுந்த டொயோட்டா காரான வெல்ஃபையரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். அத்துடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு புத்தம் புதிய ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை தயாரிப்பாளர் பரிசாக வழங்கியுள்ளார். நடிகர் சிம்புவிற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள டொயோட்டா வெல்ஃபையர் கார் ஆனது பளபளப்பான கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

இந்திய ரூபாய் மதிப்பில் வெல்ஃபையர் சொகுசு எம்பிவி காரின் விலை தற்சமயம் ரூ.90 லட்சம் என்ற அளவில் உள்ளது. இது ஒரு ஹைப்ரிட் காராகும். அதாவது எரிபொருள் என்ஜின் மட்டுமின்றி, எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடனும் இந்த கார் இயங்கக்கூடியது. இதனாலேயே இயக்கத்தின் போது டொயோட்டா வெல்ஃபையரில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவானது குறைவே.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

7-இருக்கை சொகுசு எம்பிவி காரான வெல்ஃபையர் அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்தில் இந்தியாவில் கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெல்ஃபையரில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 141 பிஎச்பி மற்றும் 198 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

இந்த காரில் வெளிப்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள், சதுர வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்கள், கார்னரிங் செயல்பாட்டுடன் ஃபாக் விளக்குகள், இரட்டை சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரிக் வாயிலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஒஆர்விஎம்-கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக வழங்கப்படுகின்றன. சொகுசு வசதிகள் நிறைந்த இதன் கேபின் ஆனது லெதரால் வடிவமைக்கப்படுகிறது.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

உட்புறத்தில் தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், 2ஆம் வரிசையில் கேப்டன் இருக்கைகள், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், பவர் சைடு கதவுகள் மற்றும் 17-ஸ்பீக்கர் மியுசிக் சிஸ்டம் உள்ளிட்டவை உள்ளன. இத்தகைய லக்சரி டொயோட்டா தயாரிப்பு வாகனத்தை பெற்றுள்ள நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக பத்து தல திரைப்படம் வெளிவருகிறது. வருகிற டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தினை என் கிருஷ்ணா இயக்குகிறார்.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஐசரி கணேஷ் வழங்கியுள்ள புல்லட் 350 மோட்டார்சைக்கிள் ஆனது நீண்ட காலமாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் மாடலாகும். ஏனெனில் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கை அறிமுகம் செய்யும் பணிகளில் தான் தற்சமயம் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக, சோதனை ஓட்டங்களில் புதிய புல்லட் 350 பைக் உட்படுத்தப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்புவுக்கு ரூ.90 லட்சத்தில் சொகுசு கார்... கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்!! ப்ரோடியூஸரின் தாராள மனசு

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய ஜே-ப்ளாட்ஃபாரத்தில் அதன் 350சிசி பைக்குகளை தயாரித்து வருகிறது. மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்திய அறிமுகமான ஹண்டர் 350 உள்ளிட்டவை அனைத்தும் ஜே-ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுபவை ஆகும். ஆனால் இதில் புல்லட் 350 மட்டும் தற்போதைக்கு உட்படாத நிலை உள்ள சூழ்நிலையில், விரைவில் புல்லட் 350 பைக்கும் இந்த வரிசையில் இணையவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vtk producer gifts toyota velfire to hero simbu worth over rs 90 lakh
Story first published: Sunday, September 25, 2022, 21:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X