ரவி மோகனுக்கு ஒடம்பெல்லாம் மச்சம்யா! விலை உயர்ந்த காரில் வந்து இறங்கியது அவங்களா! தேவதை மாதிரி இருக்காங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழும் எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று ஜீப் மெரிடியன் (Jeep Meridian). இது ஜீப் காம்பஸ் (Jeep Compass) காரின் 3 வரிசை வெர்ஷன் ஆகும். 5 சீட்டர், 7 சீட்டர் என 2 மாடல்களில், ஜீப் மெரிடியன் விற்பனை செய்யப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரங்களான மலாய்கா அரோரா (Malaika Arora) மற்றும் ரன்தீப் ஹூடா (Randeep Hooda) போன்றவர்களிடம் எல்லாம் ஜீப் மெரிடியன் கார் இருக்கிறது. தற்போதைய நிலையில் ஜீப் மெரிடியன் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 24.99 லட்ச ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 38.79 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆரம்ப நிலை மற்றும் டாப் வேரியண்ட்களின் ஆன்-ரோடு விலை (On-road Price) சுமாராக முறையே 32 லட்ச ரூபாய் மற்றும் 50 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.

எனவே திரையுலக நட்சத்திரங்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கும் இது கொஞ்சம் விலை உயர்ந்த கார்தான். விலை உயர்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட, ஜீப் மெரிடியன் காரில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என மொத்தம் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என 2 ஆப்ஷன்களிலும், ஜீப் மெரிடியன் கார் கிடைக்கிறது. அதேபோல் ஜீப் மெரிடியன் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சம் இல்லை.

இதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆல்பைன் 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான வசதிகளாக உள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஜீப் மெரிடியன் காரை வாமிகா காபியும் (Wamiqa Gabbi) வைத்துள்ளார். இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் ஒரு நடிகை ஆவார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான மாலை நேரத்து மயக்கம் தமிழ் திரைப்படத்திலும் வாமிகா காபி நடித்துள்ளார்.
அத்துடன் ஜீனி (Genie) என்ற மற்றொரு தமிழ் திரைப்படத்திலும் வாமிகா காபி நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் ரவி மோகன் (Ravi Mohan) நடிக்கிறார். அவருடன் வாமிகா காபி மட்டுமல்லாது, கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) என மொத்தம் 3 முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) இசையமைக்கும் இந்த திரைப்படம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே ரவி மோகனின் திரைப்பயணத்தில், இது மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாமிகா காபிக்கும் தமிழில் இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்று தருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருவதால், வாமிகா காபிக்கு ஏற்கனவே நாடு முழுக்க ரசிகர்கள் உள்ளனர். ஜீனி திரைப்படத்திற்கு பின்னர், தமிழ்நாட்டில் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வாமிகா காபி தனது ஜீப் மெரிடியன் காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், வாமிகா காபி ஜீப் மெரிடியன் காரில் இருந்து இறங்கி, செல்போனில் பேசி கொண்டே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. வாமிகா காபியின் ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். எனினும் இந்த வைரல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது சரியாக தெரியவில்லை.
வாமிகா காபியின் வைரல் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலை தளங்களில் பரவுவது வழக்கம். குறிப்பாக அவரது கண் அழகை காட்டும் வைரல் வீடியோக்களை நீங்கள் சமூக வலை தளங்களில் அதிகமாக பார்க்க முடியும். இந்த வரிசையில்தான் தற்போது அவர் ஜீப் மெரிடியன் காரை பயன்படுத்திய வீடியோ, சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அவர் நடித்து வரும் ஜீனி திரைப்படம், ரவி மோகனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் அவரது சமீபத்திய திரைப்படங்கள் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், ரவி மோகனுக்கு மச்சம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாமிகா காபி பயன்படுத்திய ஜீப் மெரிடியன் கார் இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








