மூட்டை பூச்சியை கொல்லும் நவீன மிஷின் போல கோவையில் குப்பையை அள்ள வந்த இந்த மிஷினை பாத்தீங்களா?

இந்தியா முழுவதும் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் மிகப்பெரிய அளவில் மேம்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குப்பைகளை அழுவதற்காக நவீன இயந்திரம் ஒன்றை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளார்கள். இந்த இயந்திரம் எப்படி குப்பை அள்ளுகிறது என்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த கருவி உண்மையிலேயே உபயோகம் உள்ளதாக இருக்கிறதா என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நகரங்களில் நடக்கும் பணிகளை மிகத் துரிதமாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் செய்ய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அதன்படி கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளம் என்ற இடத்திலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நீர் நிலைகளை பராமரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று வேக்கம் மூலம் குப்பைகளை சேகரிக்கும் நவீன வாகனம் ஒன்றை பயன்படுத்தி வருகிறது.

waste collection vehicle in kovai

இந்த வாகனத்தை வைத்து பொதுமக்கள் ஆங்காங்கே வீசி செல்லும் பிளாஸ்டிக் பேப்பர்கள் பாட்டில்கள் அவர்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரிக்க இதை பயன்படுத்தப்படுகிறது. இப்படியாக கோப்லர் என்ற நிறுவனம் தயாரித்த இந்த வாகனத்தை தற்போது தனியார் நிறுவனம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதை பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த வாகனத்தில் வாகனத்தை ஓட்டுபவர் வாகனத்தில் நிற்க இடம் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தை இயக்குவதற்காக அவருக்கு ஹேண்டில் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக குப்பைகளை அழுவதற்காக வேக்கம் கிளீனிங் பம்ப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேக்கம் கிளீனிங் பம்பை அவர் வாகனத்தில் நின்று கொண்டிருந்த படியே பயன்படுத்த முடியும்.

waste collection vehicle in kovai

இந்த வாகனத்தின் பின்பகுதியில் குப்பை தொட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும் வேக்கம் பம்ப் வழியாக உறிஞ்சப்படும் குப்பைகள் அனைத்தும் நேரடியாக அந்த குப்பை தொட்டியில் சேகரிக்கப்படும். முற்றிலுமாக நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மொத்தம் மூன்று வீண்களை கொண்டதாக இருக்கிறது. முன்பக்கம் ஒருவழும் பின்பக்கம் இரண்டு வீல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இந்த வாகனம் சாலையில் உள்ள ஈரமில்லாத குப்பைகளை கலெக்ட் செய்வது மட்டுமல்லாமல் ஈரமாக இருக்கும் குப்பைகளையும் சுத்தப்படுத்த உதவுகிறது. கடந்த மே மாதம் இந்த வாகனம் முதல் கட்டமாக பரிசோதனை முயற்சியில் இயக்கப்பட்டது. இது வெற்றியடைந்த பட்சத்தில் ரூபாய் 16 லட்சம் என்ற மதிப்பில் ஐந்து வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

waste collection vehicle in kovai

தனியார் நிறுவனம் உருவாக்கிய இந்த கருவி முற்றிலுமாக பேட்டரியில் இயங்கும் தொழில்நுட்பத்தை கொண்டதாக இருக்கிறது. இதில் இரண்டு முக்கிய மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. வேக்கம் கிளீனிங்காக 1.5 கிலோ வாட் பவர் கொண்ட மோட்டார் சுமார் 3000 ஆர்பிஎம்-ல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபோக வாகனம் நகர்வதற்காக ஒரு கிலோ வாட் பவர் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை பொருத்தவரை 100 முதல் 145 ஆம்பியர் ஹவர் பவரில் இயங்குகிறது. இதன் மூலம் இந்த வாகனம் 10 முதல் 12 மணி நேரம் வரை இயங்கும்.

கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளம் பகுதியில் இது முதற் கட்டமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது படிப்படியாக கோவை பகுதி முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வாகனத்தில் ஊழியர்கள் சென்று குப்பைகளை சேகரிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், இது குறித்த விமர்சனங்களும் இருந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை இந்த கருவி மூலம் அகற்றுகிறார்கள்0 ஆனால் இந்த கருவி அதற்கு அதிகம் நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த கருவியை இயக்குவதற்கு ஒருவர் அதிகமான முயற்சியை செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு பதிலாக அவர் நேயர் நேரடியாக சென்று அந்த குப்பைகளை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு விட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வீடியோவில் அந்த கருவி குப்பைகளை அள்ளுவதற்காக இந்த வாகனம் செல்ல முடியாத இடத்தில் இருக்கும் குப்பைகளை எல்லாம் ஒருவர் தனியாக எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த செலவுகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது இதற்கு தனியாக ஒரு நபர் போட்டாலே இதை எளிதாக அப்புறப்படுத்தி விட முடியும். இதற்கு மூட்டை பூச்சியை கொல்லும் நவீன மிஷின் போன்ற ஒரு நவீன கருவி தேவையில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 17:40 [IST]
English summary
Waste collection vehicle kovai viral video ukkadam
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X