100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

ரூ.4 கோடி விலைமதிப்புள்ள லம்போர்கினி சூப்பர் காரை, வெறும் 100 ரூபாய் பெறுமானமுள்ள பீட்ஸாவை போன்று, சர்வ சாதாரணமாக டோர் டெலிவரி செய்துள்ளனர்.

By Arun

ரூ.4 கோடி விலைமதிப்புள்ள லம்போர்கினி சூப்பர் காரை, வெறும் 100 ரூபாய் பெறுமானமுள்ள பீட்ஸாவை போன்று, சர்வ சாதாரணமாக டோர் டெலிவரி செய்துள்ளனர். அந்த காரை பாதசாரிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன், துரத்தியும் செல்லும் ருசிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

சூப்பர் காரை பார்ப்பதே அரிது...!!!

அவ்வையார் கூறிய அரிது...அரிது...டயலாக் எதற்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இந்தியாவிற்கும், சூப்பர் கார்களுக்கும் நன்றாகவே பொருந்தும். ஆம், இந்திய சாலைகளில் ஒரு சூப்பர் காரை பார்ப்பது என்பது, விண்வெளியில் அவ்வப்போது நடைபெறும் அதிசயங்களை போல, மிகவும் அரிதான ஒரு நிகழ்வுதான்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

சூப்பர் கார்களின் ப்ரைஸ் டேக்கை பார்த்தாலே நமக்கு தலை சுற்றி விடும். காரணம் அதன் விலை பல கோடிகளில்தான் இருக்கும். இது போதாதென்று, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது, அதற்கு அதிகப்படியான வரி வேறு விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு சூப்பர் காரின், ஆன் ரோடு விலையை கேட்டால், தலை சுற்றல் என்ன? நிச்சயமாக மயக்கமே வந்து விடும்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

இதனால்தான் அரிதிலும் அரிதாக சாலைகளில் தென்படும் சூப்பர் கார்களுக்கு, ராஜ மரியாதை கிடைக்கிறது. அவற்றை பார்க்கும் சாமானியன் வாய் பிளந்து நின்று விடுகிறான். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் காரை, வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து, ஜஸ்ட் பீட்ஸாவை போன்று சர்வ சாதாரணமாக டோர் டெலிவரி செய்தால் எப்படி இருக்கும்?

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

அப்படி ஒரு சம்பவம் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர்தான், ஜஸ்ட் பீஸாவை போல் டோர் டெலிவரி செய்யப்பட்ட சூப்பர் கார். அந்த வீடியோ யூ-டியூப்பில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

பீட்ஸாவை போல் டெலிவரி...!!!

லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் ஒன்று, ப்ளாட்பெட் டிரக்கில் வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த ப்ளாட்பெட் டிரக்கை வீதியில் நிறுத்தியுள்ளனர். காரின் மீது தார்ப்பாய் போர்த்தப்பட்டிருந்தது. அந்த தார்ப்பாயை நீக்கும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

தார்ப்பாய் நீக்கப்பட்டவுடன் பிரகாசமான நீல நிறத்தில், லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் ஜொலி ஜொலிக்கிறது. அந்த வண்ணத்திற்கு பெயர் ப்ளூ கலம். அதிகாரப்பூர்வமாக அப்படித்தான் அழைக்கின்றனர். இந்த கார் சாலையில் ஓடும்போது, நிறத்தை வைத்தே எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அப்படி ஒரு பிரகாசமான நீல நிறம்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

பின்னர் சூப்பர் காரை நிதானமாக, ப்ளாட்பெட் டிரக்கில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்கின்றனர். அப்போது பாதசாரிகள் சிலர், ஆச்சரியத்துடன் அங்கே குழும தொடங்குகின்றனர். பாதசாரிகள் மட்டுமல்ல. அவ்வழியாக மற்ற கார்களில் சென்று கொண்டிருந்தவர்கள் கூட, தங்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்து, கம்பீரமான லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் காரை ஏக்க பெருமூச்சுடன் பார்க்கின்றனர்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

இது இல்லாமலா?

அப்படிப்பட்ட ஒரு காரை போட்டோ, வீடியோ எடுத்து, ''லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் ஸ்பாட்டட் இன் ஐதராபாத்'' என்ற கேப்ஷன் உடன் பேஸ்புக், டிவிட்டரில் போட்டு லைக்ஸ் அள்ளாமல் இருந்தால் எப்படி? அதற்காகவே சிலர் போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். அந்த பணியில் மும்முரமாக இருந்தவர்களிடம், சூப்பர் கார் குறித்த சந்தேகங்களை, பாதசாரிகள் எழுப்புகின்றனர்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

இந்த நேரத்தில், டிரக்கில் இருந்து கார் கீழே இறக்கப்பட்டு விடுகிறது. பின்னர் அதன் உரிமையாளர், டிரைவர் இருக்கையில் அமர்ந்து, விருட்டென பறக்க முயல்கிறார். ஆனால் அவரை சூழ்ந்து கொண்ட பாதசாரிகள் சிலர், பணம் கேட்க முயல்கின்றனர்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

ஆனால் டெலிவரி பாயிண்ட்டில் இருந்து காரை அதிவேகத்தில் செலுத்துகிறார் அதன் உரிமையாளர். பின்னர் அந்த சூப்பர் கார், கேரேஜூக்குள் நுழைவதுடன் வீடியோ முடிகிறது. முன்னதாக லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் பார்க்கிங் செய்யப்பட்ட கேரேஜுக்குள் ஏற்கனவே சில விலைமதிப்புள்ள கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த சுவாரசியமான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

கம்பீரமான காரின் அசத்தலான சிறப்பம்சங்கள்

லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் கார், கடந்த 2016ம் ஆண்டில், மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. கன்வர்டபிள் வகையை சேர்ந்த காரான இதன் விலை 3.89 கோடி (எக்ஸ் ஷோரூம்). இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 5.2 லிட்டர் வி10 இன்ஜின், 610 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

இந்த இன்ஜின் மூலம், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டலாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 324 கிலோ மீட்டர். லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் கார், 7 ஸ்பீடு டியூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது. இது மிகவும் கவர்ச்சியான கார். ஒரு சில லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் கார்களை மட்டுமே இதுவரை இந்திய சாலைகளில் காண முடிந்திருக்கிறது.

100 ரூபாய் பீட்ஸா ஆன ரூ.4 கோடி லம்போர்கினி சூப்பர் கார்...!!!

முன்னதாக கேரளாவை சேர்ந்த அமலாபால் உள்ளிட்ட திரைத்துறையினர் சிலர், வரி குறைவு என்பதற்காக, தங்கள் உயர் ரக வாகனங்களை புதுச்சேரியில் பதிவு செய்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் பூதாகரமாக வெடித்து. புதுச்சேரியில் தங்கியிருப்பது போன்ற போலியான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் சூப்பர் காரும் புதுச்சேரியில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரி குறைவு என்பதற்காக அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Video Source: Youtube Vinith 28

Article Published On: Thursday, May 24, 2018, 18:23 [IST]
English summary
Watch a Lamborghini Huracan Spyder supercar getting ‘home delivered’ in India [Video]. read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+